சீமானுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய்: அச்சத்தில் திராவிட கட்சிகள்

சீமானுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய்: அச்சத்தில் திராவிட கட்சிகள்
X

சீமான் மற்றும் நடிகர் விஜய்.

சீமானுக்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்து இருப்பதால் அச்சத்தில் திராவிட கட்சி தலைவர்கள் உள்ளனர்.

சீமானுக்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்திருப்பது திராவிட கட்சிகளை அச்சத்துடன் பார்க்க வைத்திருக்கிறது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் தமிழக வாக்காளர்களுக்கு பல படிப்பினைகளை வழங்கி இருக்கிறது. திமுக தலைமையிலான கூட்டணி 40 நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றிருந்தாலும் அது அவர்களுக்கு ஆதரவாக விழுந்த வாக்குகள் அல்ல.

திமுகவிற்கு எதிரான வாக்குகள் பிரிந்து போனதே காரணம் என்றே கருதப்படுகிறது. பாரதிய ஜனதா கூட்டணி கடந்த தேர்தலை விட தற்போது கூடுதல் வாக்குகளை பெற்றிருப்பது மக்களை சிந்திக்க வைக்கிறது. குறிப்பாக 12 தொகுதிகளில் பாரதிய ஜனதா கூட்டணி வேட்பாளர்கள் இரண்டாம் இடத்தில் உள்ளனர். சில தொகுதிகளில் அதிமுகவை நான்காவது இடத்திற்கு தள்ளி உள்ளனர். அதிமுக சில தொகுதிகளில் மூன்றாவது இடத்திற்கு சென்றாலும் அதிமுக தனது வாக்கு வங்கியை இழக்கவில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலை விட அதிகமான வாக்குகள் தான் பெற்றிருக்கிறார்கள்.

ஆக இப்படி பல படிப்பினை தற்போது வெளிவந்து கொண்டிருக்கிறது. இவை எல்லாவற்றையும் விட நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 8 சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறது. மூன்று தொகுதிகளில் அதிமுக, பாஜக இரண்டு கட்சிகளையும் பெண்ணுக்கு தள்ளிவிட்டு மூன்றாவது இடத்தை அந்த கட்சி பிடித்திருப்பது சீமானுக்கும் ஆதரவு வலை தமிழகத்தில் இருக்கத்தான் செய்கிறது என்பதை காட்டுகிறது. திமுக ,அதிமுக கட்சிகள் வேண்டாம் என நினைப்பவர்கள் கண்ணை மூடிக்கொண்டு சீமானுக்கு தான் வாக்களித்திருக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது.

தமிழகத்தின் மத்திய பகுதி, அறிவுஜீவிகள் நிறைந்த தொகுதி மதச்சார்பின்மையுடன் வாழும் மக்கள் அதிகம் வாழும் பகுதி என்று சொல்லப்படும் திருச்சி தொகுதியில் கூட நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்தை பெற்று இருக்கிறது. எல்லா தொகுதிகளிலும் ஒரு லட்சம் வாக்குகளை தாண்டி அவர்களது வேட்பாளர்கள் பெற்று இருக்கிறார்கள் இவர்கள் பணம் பரிசு எதையும் கொடுக்காமல் பெற்ற நேர்மையான வாக்குகள் என்பதில் ஒரு சதவீதம் கூட சந்தேகம் கிடையாது.

இந்த வெற்றியின் காரணமாக நாம் தமிழர் கட்சி மாநில அந்தஸ்து பெற்று இருக்கிறது. நாம் தமிழர் கட்சிக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த கரும்புடன் கூடிய விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் இம்முறை நிராகரித்து இருந்தாலும் மைக் சின்ன வழங்கப்பட்டது. புதிய சின்னத்தில் கூட அவர்கள் சாதனை காட்டி இருக்கிறார்கள், ஆதலால் அடுத்த தேர்தலில் இனி வேறு சின்னம் கேட்டு பெற சீமான் உறுதியாக உள்ளார். தனித்து நின்று போட்டியிட்டு மாநில கட்சி அந்தஸ்து பெற்ற சீமான் ஒரு புறம் இன்னொரு புறம் திமுக கூட்டணி கட்சியில் இரண்டு எம்பி தொகுதிகளில் வெற்றி பெற்றதால் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் மாநில அந்தஸ்து பெற்று இருக்கிறது.

இந்த இரு கட்சிகளுக்கும் தமிழகத்தின் உச்ச நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் தலைவருமான நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை, தமிழகத்தில் 40 தொகுதிகளையும் வென்ற திமுக தலைமையிலான திமுக தலைவர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்லவில்லை. ஆனால் இந்த இரண்டு பேருக்கு மட்டும் அவர் வாழ்த்து தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் குறிப்பாக திராவிட கட்சிகளின் தலைவர்களுக்கு ஒரு வகையான அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

விஜய் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே கட்சியை தொடங்கி விட்டாலும் 2026 சட்டமன்ற தேர்தல் தான் தனது டார்கெட் என கூறிவிட்டார். ஆதலால் எந்தவித குற்றச்சாட்டுக்கும் ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாத சீமான் மீது அவரது பார்வை விழுந்திருக்கிறது. அதனால் தான் அவர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார் என கணித்து இருக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். ஆதலால் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் சீமானுடன் தமிழக வெற்றி கழகம் கைகோர்க்கமா என்ற கேள்வியும் எழுந்து உள்ளது. எது எப்படியோ சீமானின் வாழ்த்து செய்தி தமிழக திராவிட கட்சித் தலைவர்களின் வயிற்றில் புளியை கரைத்து இருக்கிறது என்பதே உண்மை.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!