காயத்ரி ரகுராமை ஆபாசமாக சித்தரித்த நிர்வாகி மீது திமுக நடவடிக்கை
காயத்ரி ரகுராம்
தம்மை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வெளியிட்ட தி.மு.க பிரமுகர் ஜெயச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவினருடன் சென்று, நடிகை காயத்ரி ரகுராம், சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அத்துடன் நிற்காகம்ல், ஜெயச்சந்திரனின் பதிவை முதல்வர் ஸ்டாலினுக்கும் டேக் செய்து, "இன்று நான், நாளை உங்கள் மகளுக்கு செய்வார்கள். முதல்வர் அவர்களே தங்களின் மகளுக்கு இவ்வாறு நிகழ்ந்திருந்தால் நீங்கள் கை கொடுப்பீர்களா? முதலமைச்சர் ஸ்டாலின், தி.மு.க ஒழிக," எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, காயத்ரி ரகுராமை ஆபாசமாக சித்தரித்து பதிவிட்ட மதுரை தெற்கு மாவட்ட திமுக தொழில்நுட்ப துணை அமைப்பாளர் ஜெயச்சந்திரனை, அப்பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக, திமுக தொழில்நுட்ப செயலாளரான அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இன்று அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
ஆனால், இதை காயத்ரி ரகுராம் ஏற்கவில்லை. பெண்ணை இழிவுப்படுத்திய நபர்களை கட்சியில் இருந்து தற்காலிகமாக மட்டுமே நீக்கம் செய்வதா? தமிழ்நாட்டுக்கு ஜெயச்சந்திரன் மற்றும் ராமலிங்கம் போன்றவர்களின் மோசமான சேவை நாங்கள் விரும்பவில்லை.. எனக்கு நீதி வேண்டும். அவரை, குண்டாஸில் கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu