திருச்சி அருகே அதிமுக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி

திருச்சி அருகே அதிமுக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி
X

அதிமுக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி வழங்கினார்.

திருச்சி அருகே திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி வழங்கினார்

அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அதிமுக புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கும்படி ஆணையிட்டு உள்ளார்.

இந்த ஆணையின்படி திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அந்தநல்லூர் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட எட்டரை ஊராட்சி பகுதியில் அதிமுக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்க மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி தலைமை தாங்கி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் அமைப்புச் செயலாளர்கள் வளர்மதி, ஆர். மனோகரன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி கண்ணதாசன், இலக்கிய அணி ஜெயம் ஸ்ரீதர்,ஒன்றிய செயலாளர் கோப்பு நடராஜ், ஸ்ரீரங்கம் ரவிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிமுக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டையினை நேரில் சென்று வழங்கும் நிகழ்ச்சி கீழ்கண்ட விவரப்படி நடைபெறும் என மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி அறிவித்து உள்ளார்.

5.8.2024, திங்கட்கிழமை - மணிகண்டம் வடக்கு ஒன்றியம்

--------------------------------------------------

காலை 10மணி - நாச்சிகுறிச்சி ஊராட்சி

காலை 10.30மணி - சோமரசம்பேட்டை ஊராட்சி

காலை 11மணி - அல்லித்துறை ஊராட்சி

காலை 11.30மணி - அதவத்தூர் ஊராட்சி

அதுசமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் மற்றும் மகளிரணியினர் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!