தூத்துக்குடியில் புதிய சகாப்தம் தொடங்கும்: பிரதமர் மோடி பேச்சு

இன்று தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பேசினார்.
வணக்கம் என தமிழில் கூறி தூத்துக்குடியில் பிரதமர் மோடி தனது உரையைத் தொடங்கினார். வளர்ச்சியின் புதிய அத்தியாயம் தூத்துக்குடியில் தொடங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமழகத்திற்கு வந்துள்ளார். நேற்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பேசிய பிரதமர் மோடி நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும் என்றார். மேலும் திமுக மீதும் கடுமையாக குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் இன்று தூத்துக்குடியில் இரண்டாவது நாள் நிகழ்ச்சிய் கலந்து கொண்டு பேசினார் பிரதமர் மோடி. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எல். முருகன், 2047ல் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்காக பிரதமர் மோடி உழைக்கிறார் என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, தூத்துக்குடியில் புதிய சகாப்தம் தொடங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்கும் என்றார்.
மேலும் பல தசாப்தங்களாக கோரிக்கையாக இருந்தவை எல்லாம் தற்போது நிறைவேற்றப்பட்டு வருகிறது. காங்கிரஸ் ஆட்சியின் போது கோரிக்கையாக இருந்தவை எல்லாம் தற்போது திட்டங்களாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. தூத்துக்குடி, நெல்லையை மையப்படுத்தி பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிற்கு சிறப்பான வசதிகளை அளிப்பதுதான் நமது நோக்கம். ரயில் பாதை, சாலை வழி, கடல் வழி திட்டங்கள் ஒன்றாக இன்று தொடங்கப்பட்டுள்ளன. இது தமிழ்நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கும்.
மக்களின் சேவகனாக நான் உங்களின் விருப்பங்களை நிறைவேற்றுகிறேன். தமிழ்நாட்டில் வசிக்கும் என் சகோதர சகோதரிகளுக்கு நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நாடு முழுவதும் உள்ள 75 கலங்கரை விளக்கங்கள் அனைத்தும் சுற்றுலா தலங்களாக மேம்படுத்தப்பட்டு நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. தூத்துக்குடியில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ள நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் முருகன், அமைச்சர் எ.வ.வேலு, கனிமொழி எம்.பி. பங்கேற்றுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu