தமிழக நாடாளுமன்ற தேர்தல் களத்தை கலக்கும் 65 அரசியல் கட்சிகள்
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் புதுச்சேரியையும் சேர்த்து 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. வேட்பு மனு தாக்கல் மார்ச் 20 ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெற்றது. பரிசீலனை முடிந்த பின்னர் 30ஆம் தேதி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
இறுதி வேட்பாளர் பட்டியலின்படி தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளிலும் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்கள் 69 அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள். தமிழகத்தை பொறுத்தவரை திமுக அதிமுக, காங்கிரஸ் ,பாஜக, மதிமுக ,விடுதலை சிறுத்தைகள் ,இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, பகுஜன் சமாஜ், அமமுக என சில முக்கியமான கட்சிகளின் பெயர்கள் தான் நமக்கு தெரியும்.
ஆனால் தமிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களோ 69 அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் எந்தெந்த கட்சிகள் நமக்கு தெரியாமல் உள்ள கட்சிகளின் பெயர்கள் என்னென்ன என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
ஜனநாயக பாதுகாப்பு கழகம், அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி, ஜனநாயக மக்கள் கழகம் ,மக்கள் மேம்பாட்டு கட்சி, உழவர் உழைப்பாளர் கட்சி, இளைஞர் மேம்பாட்டு கட்சி, இந்திய அம்பேத்கரிய கட்சி ,அனைத்திந்திய மக்கள் கட்சி ,அம்மா மக்கள் கட்சி ,அண்ணா எம்ஜிஆர் திராவிட மக்கள் கழகம் ,அண்ணா எம்ஜிஆர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம் ,ஊழலுக்கு எதிரான கட்சி ,அறவோர் முன்னேற்ற கழகம், பகுஜன் திராவிட கட்சி, பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி, சென்னை இளைஞர் கட்சி ,தேசிய மக்கள் கட்சி, தேசிய மக்கள் கழகம், இந்திய கன சங்கம் கட்சி, இந்து மக்கள் கட்சி, இந்துஸ்தான் இந்து சமாஜ் கட்சி ,இந்துஸ்தான் ஜனதா கட்சி ,அமைதிக்கான மனித இன கட்சி, ஜெபமணி ஜனதா ,கருநாடு கட்சி, மகாத்மா மக்கள் முன்னேற்ற கழகம், மக்கள் நலக் கழகம், மக்கள் நல்வாழ்வு கழகம்,நாடாளும் மக்கள் கட்சி ,நாம் இந்தியர் கட்சி, நம் இந்தியா, புன்னகை தேசம் கட்சி, புதிய மக்கள் தமிழ் தேசம் கட்சி, ராஸ்ட்ரிய சமாஜ் கட்சி, இந்திய குடியரசு கட்சி, சாமானிய மக்கள் நலக் கட்சி, இந்திய சோசியலிச ஐக்கிய மையம், தமிழ் மாநில முற்போக்கு திராவிட கழகம், தமிழக மக்கள் நலக் கட்சி ,தமிழக மக்கள் தன்னுரிமை கட்சி, தமிழர் மக்கள் கட்சி, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு பேரியக்கம் ,தமிழக முற்போக்கு மக்கள் கட்சி, தங்கம் கட்சி ,திப்பு சுல்தான் கட்சி ,உழைப்பாளி மக்கள் கட்சி ,இந்திய குடியரசு கட்சி ,வீர தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர் கட்சி ,விடியல் தேடும் இந்தியர்கள் கட்சி ,விடுதலை களம் கட்சி ,வீரோ கே வீர் இந்தியன் கட்சி.
இந்த கட்சிகள் எல்லாம் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறார்கள் பல்வேறு தொகுதிகளிலும் அவர்கள் களம் இறங்கி இருக்கிறார்கள் என்பது தான் கூடுதல் தகவலாக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu