புல்வாமா தாக்குதலின் 5ம் ஆண்டு நினைவு தினம்!

புல்வாமா தாக்குதலின்  5ம் ஆண்டு நினைவு தினம்!
X
புல்வாமாவில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன் என்று பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த 20219 ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு 78 பேருந்துகளில் துணை ராணுவப்படையினர் சென்றனர். அப்போது புல்வாமா மாவட்டம், அவந்தி போரா பகுதியில் வந்தபோது, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி ஒருவர் காரில் சக்திவாய்ந்த வெடிபொருட்களை நிரப்பிப் பாதுகாப்புப் படை வீரர்கள் வந்த ஒரு வாகனத்தின் மீது மோதி தாக்குதல் நடத்தினார். இந்த பயங்கரவாத தாக்குதலில் பேருந்தில் பயணித்த துணை ராணுவப் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி மசூத் அசாரின் கட்டளைப்படி இந்த தாக்குதல் நடத்தப்பட்டது பின்பு விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் சென்று அங்கு செயல்பட்டுக்கொண்டிருந்த ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் முகாம் மீது துல்லிய தாக்குதல் நடத்தினர். இதில், ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இதன்மூலம், இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் உரிய பதிலடி கொடுத்துள்ளது. இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்ததன் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பிரதமர் மோடி அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பதிவில், புல்வாமாவில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன் என்று கூறினார். நமது தேசத்துக்காக அவர்கள் ஆற்றிய சேவையும் தியாகமும் என்றும் நினைவுகூரப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story