5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு: உ.பி.யில். 7 கட்டமாக வாக்குப்பதிவு
இது குறித்து, டெல்லி விஞ்ஞான் பவனில் தலைமை தேர்தல் கமிஷனர் சுஷில் சந்திரா வெளியிட்ட அறிவிப்பின் விவரம் வருமாறு:
உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் உள்ள 690 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. கொரோனா பாதிப்புக்கு மத்தியில் தேர்தலை நடத்தியாக வேண்டும். ஒமிக்ரானை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஐந்து மாநிலங்களில், இன்றுமுதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகிறது. அதேபோல், கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு ஆன்லைனிலும் வேட்புமனு தாக்கல் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்படுகிறது.
உத்தரபிரதேசத்துக்கு 7 கட்ட தேர்தலும், மணிப்பூரில் 2 கட்டம், பஞ்சாப்,கோவா,உத்தரகாண்ட் ஆகியவற்றில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். அதன்படி, பிப்ரவரி 10ம் தேதி உத்தப்பிரதேசத்தில், முதல் கட்ட வாக்குப்பதிவு நடக்கும். உத்தரப்பிரதேசத்தில் 2வது கட்டமாக, பிப்ரவரி 14ம் தேதி தேர்தல் நடக்கும். அதே நாளில், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மாநிலங்களுக்கு, ஒரே கட்ட தேர்தல் நடைபெறும்.
உத்தரப்பிரதேசத்தில், 3வது கட்டம் பிப்ரவரி 20 ம் தேதி, 4வது கட்டம் பிப். 23ம் தேதி, 5வது கட்டம், பிப். 27ம் தேதி, அன்றைய தினம் மணிப்பூர் (முதல் கட்டம்), 6- வது கட்டமாக உ.பி.யில், மார்ச் 3ம் தேதி, மணிப்பூரில் இரண்டாம் கட்டம், உ.பி.யில், 7ம் கட்டமாக, மார்ச் 7ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10 ம் தேதி நடைபெறும் என்று தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu