நியாய யாத்திரைக்கு 5 நாள் லீவ்: லண்டன் செல்கிறார் ராகுல் காந்தி

நியாய யாத்திரைக்கு 5 நாள் லீவ்: லண்டன் செல்கிறார் ராகுல் காந்தி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நியாய யாத்ரா மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி.

5 days leave for Nyaya Yatra: Rahul Gandhi goes to London

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்பி கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழகத்தின் கன்னியாகுமரியில் பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் பாரத ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார்.இந்த யாத்திரை காஷ்மீல் முடிடைந்தது. இந்த யாத்திரை முடிவில் நடைபெற்ற இமாச்சல பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றது.

பாரத் ஜோடோ நியாய யாத்திரை

இதனை தொடர்ந்து ராகுல் காந்தி தனது இரண்டாவது கட்ட யாத்திரையான பாரத் ஜோடோ நியாய யாத்திரையை 2024 ஜனவரி 14 ம் தேதியன்று வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் மாநிலத்தின் தௌபால் மாவட்டத்தில் உள்ள கோங்ஜோம் போர் நினைவிடத்தில் இருந்து தொடங்கினார். இந்தியாவின் முக்கிய மாநிலங்களில் 6,713 கிலோமீட்டர் தூரம் யாத்திரை செல்வது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.

மணிப்பூரில் சந்தித்த சவால்கள்:

இந்த யாத்திரைக்கு மணிப்பூர் மாநில அரசு முதலில் அனுமதி மறுத்தது.சட்டம் ஒழுங்கு பிரச்சினை காரணமாக யாத்திரை ரத்து செய்யப்படலாம் என்ற அச்சம் எழுந்தது. யாத்திரை வழித்தடத்தில் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பீகார் மாநிலத்தில் ராகுல் காந்தியின் யாத்திரை கான்வாயில் வந்த கார்கள் தாக்கப்பட்டன.

பயணம் தொடர்ந்தது:

இந்த சவால்களை எதிர்கொண்ட பிறகும், ராகுல் காந்தி தனது யாத்திரையை தொடர்ந்தார். மணிப்பூரில் 10 நாட்கள் நடந்து, 240 கிலோமீட்டர் தூரம் கடந்து, 2024 ஜனவரி 23 அன்று நாகலாந்து எல்லையை அடைந்தார்.

உத்தரபிரதேசத்தில் யாத்திரை:

2024 பிப்ரவரி 3 அன்று, ராகுல் காந்தி உத்தரபிரதேசத்திற்குள் நுழைந்தார். உத்தரபிரதேசத்தில் யாத்திரை செய்யும் ராகுல் காந்தி விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் பல்வேறு சமூக பிரிவினரை ராகுல் காந்தி சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார். வேலையின்மை, விலைவாசி உயர்வு, ஊழல் போன்ற பிரச்சினைகளை அவர் கடுமையாக விமர்சித்தார். மத்திய அரசின் கொள்கைகளை ராகுல் காந்தி விமர்சித்தார். உத்தரபிரதேச மாநிலத்தின் சில இடங்களில் ராகுல் காந்திக்கு கருப்பு கொடியும் காட்டப்பட்டது. ஆனாலும் அதனை சவாலாக ஏற்றுக்கொண்டு ராகுல் காந்தி தொடர்ந்து யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

2 நாள் ஓய்வு

இன்று கான்பூர் பகுதியில் யாத்திரை செல்லும் ராகுல் காந்தி நாளையும், நாளை மறு நாளும் ஓய்வு எடுக்கிறார். 24ந்தேதி மொராதாபாத்தில் தொடங்கி சம்பால், அலிகர், ஹத்ரால் மற்றும் ஆக்ரா மாவட்டம் வழியாக யாத்திரை சென்று விட்டு25ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்திற்குள் செல்கிறார்.

5நாள் லீவ்

பின்னர் அங்கிருந்து ராகுல் காந்தி எம்பி இங்கிலாந்து நாட்டிற்கு செல்கிறார். யாத்திரைக்கு 5நாட்கள் லீவு போட்டுவிட்டு பிப் 26 முதல் மார்ச் 1ம் தேதி வரை லண்டன் மாநகரில் உள்ள உலக பிரசித்தி பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழத்தில் மாணவ மாணவிகள் மத்தியில் ராகுல்காந்தி உரையாற்றுகிறார்.

மார்ச் 2ந்தேதி டெல்லிக்கு திரும்பும் ராகுல் காந்தி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பின்னர் ராஜஸ்தான் மாநிலத்தின் போல்பூரில் இருந்து மீண்டும் பாரத் ஜோடோ நியாய யாத்திரையை துவக்குகிறார் ராகுல் காந்தி.

இந்த தகவல்களை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய் ராம் ரமேஷ் தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story