தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று 2ம் கட்ட உள்ளாட்சித் தேர்தல்

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று 2ம் கட்ட உள்ளாட்சித் தேர்தல்
X

பைல் படம்.

தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் இன்று இரண்டாம் கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கவுள்ளது.

தமிழகத்தில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி, கடந்த 6ஆம் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், இன்று (09.10.2021) இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, இன்று நடைபெறும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்காக 6 ஆயிரத்து 652 வாக்குச்சாவடிகள் தயார்நிலையில் உள்ளன. இந்த தேர்தலில் 34 லட்சத்து 65 ஆயிரத்து 724 பேர் வாக்களிக்க உள்ளனர்.

இன்று, 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 62 மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிகள், 626 ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிகள், 1,324 கிராம ஊராட்சி தலைவர் பதவிகள், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள், மொத்தம் 12 ஆயிரத்து 341 இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. பதிவான வாக்குகள் வரும் 12ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

Tags

Next Story
ai in future agriculture