பாஜகவில் ஐக்கியமான தமிழக முன்னாள் எம்எல்ஏக்கள்

பாஜகவில் ஐக்கியமான தமிழக முன்னாள் எம்எல்ஏக்கள்
X

பாஜகவில் இணைந்த தமிழக முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் எம்பி

தமிழகத்தை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் 16 பேரும், முன்னாள் எம்பி ஒருவரும் பாரதிய ஜனதா கட்சியில் இன்று இணைந்தனர்.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. தமிழகத்தில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியுள்ளது.

இந்த நிலையில், பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை தங்களின் கூட்டணிக்கு இழுப்பதற்கான பேச்சுவார்த்தையை அதிமுகவும், பாஜகவும் தொடங்கியுள்ளது.

இதற்கிடையே, தில்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய இணையமைச்சர்கள் ராஜீவ் சந்திரசேகர், எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அதிமுகவைச் சேர்ந்த 15 முன்னாள் எம்எல்ஏக்கள், தேமுதிகவின் முன்னாள் எம்எல்ஏ ஒருவர் மற்றும் திமுகவின் முன்னாள் எம்பி ஒருவர் அக்கட்சியில் இணைந்தனர்.

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கோமதி சீனிவாசன், முன்னாள் எம்எல்ஏக்கள் கே.வடிவேலு, சேலஞ்சர் துரைசாமி, பி.எஸ்.கந்தசாமி, எம்.வி.ரத்தினம், ஆர்.சின்னசாமி, ஆர்.தங்கராஜ், வி.ஆர்.ஜெயராமன், எஸ்.எம்.வாசன், பி.எஸ்.அருள், ஆர்.ராஜேந்திரன், ஏ.ஏ.கருப்புசாமி, எஸ்.குருநாதன், செல்வி முருகேசன், ஏ.ரோகினி உள்ளிட்டோர் இணைந்துள்ளனர்.

மேலும், தேமுதிக முன்னாள் எம்எல்ஏ தமிழழகன் மற்றும் திமுக முன்னாள் எம்பி குழந்தைவேலு ஆகியோரும் பாஜகவின் இணைந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!