வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு- பாமக நிறுவனருக்கு பாராட்டு விழா

வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு- பாமக நிறுவனருக்கு பாராட்டு விழா
X

பாமக நிறுவனர் ராம்தாஸ்-பைல் படம்

கல்வி, வேலைவாய்ப்புகளில் வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு பெற்றுக் கொடுத்துள்ளதற்காக பாமக நிறுவனா் ராமதாஸுக்கு இன்று (ஜூலை 31) சென்னையில் பாராட்டு விழா

வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு- பாமக நிறுவனருக்கு பாராட்டு விழா இன்று மாலை சென்னையில் நடைபெறுகிறது

கல்வி, வேலைவாய்ப்புகளில் வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு பெற்றுக் கொடுத்துள்ளதற்காக பாமக நிறுவனா் ராமதாஸுக்கு ஜூலை 31-இல் பாராட்டு விழா நடைபெற உள்ளதாக அக் கட்சியின் தலைவா் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முழு முதல் காரணமாக இருந்த ராமதாஸுக்கு பிரமாண்டமான பாராட்டு விழா நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனாலும், கொரோனா ஊரடங்கு சூழலில் அத்தகைய விழா தவிர்க்கப்பட வேண்டும் என்பதால் ராமதாஸுக்கு பாமக, வன்னியா் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் ஆகியவை இணையவழியில் பாராட்டு விழா நடத்தத் தீா்மானித்துள்ளன. இன்று ஜூலை 31 மாலை 5 மணிக்கு இந்த பாராட்டு விழா நடைபெறும்.

ஜி.கே.மணி தலைமையில் நடைபெறும் இந்த பாராட்டு விழாவுக்கு வன்னியா் சங்கத் தலைவா் பு.தா. அருள்மொழி, சமூக முன்னேற்ற சங்கத் தலைவா் சிவப்பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனா். முன்னாள் மத்திய அமைச்சா் அன்புமணி உள்ளிட்ட மூத்த தலைவா்கள் விழாவில் உரையாற்றுகின்றனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!