திரையரங்கில் 50 சதவீத இடங்கள், கமல் வரவேற்பு

திரையரங்கில் 50 சதவீத இடங்கள், கமல் வரவேற்பு
X

திரையரங்கில் 50 சதவீத இடங்கள் கொண்டு நடத்த எடுத்த முடிவு ஆரோக்கியமானது என கமல்ஹாசன் பேட்டியின் போது கூறினார்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து கோவை செல்லும் முன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்பது ரசிகர்கள் விருப்பம். ரஜினி எடுத்த முடிவு அவரது விருப்பம். அதில் கருத்து சொல்ல விரும்பவில்லை. ரஜினிக்கு வெளியில் இருந்து அழுத்தம் வந்து விடக்கூடாது.திரையரங்கில் 50 சதவீத இடங்கள் கொண்டு நடத்த எடுத்த முடிவு ஆரோக்கியமானது. திரையரங்க தொழிலும் நடக்க வேண்டும். அரசு மக்கள் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துவதும் நல்லது.

சசிகலா வருகைக்கு பின் தமிழகத்தில் மாற்றம் இருக்குமா என்பது தெரியாது.நான் தருவது இலவசம் கிடையாது. அரசு மக்களுக்கு செய்யும் முதலீடு.கல்லூரி மாணவர்களுக்கு அரசு இலவசமாக டேட்டா தருவது நல்லது. தமிழகம் வெற்றி நடை போட்டு இருந்தால் நாங்கள் அரசியலுக்கு வந்து இருக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!