மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு
X

வரும் சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக கூட்டணியில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை இன்று முடிவு செய்யப்பட்டு, 6 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் கையெழுத்திட்டனர். இதன் மூலம் ஒரு வாரத்துக்கும் மேலாக நீடித்து வந்த தொகுதிப் பங்கீடுப் பேச்சுவார்த்தை, இன்று முடிவுக்கு வந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட விருப்பம் என்ற உத்தேசப் பட்டியல் நாளை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!