கூட்டணி கட்சிகளுடன் மநீம தொகுதி பங்கீடு

கூட்டணி கட்சிகளுடன் மநீம தொகுதி பங்கீடு
X
மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி இடையிலான தொகுதிப் பங்கீட்டு உடன்படிக்கை இன்று கையொப்பமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி இடையிலான தொகுதிப் பங்கீட்டு உடன்படிக்கை இன்று கையொப்பமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு, கூட்டணி பங்கீடு ஆகியவற்றில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் அதன் கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான தொகுதிப் பங்கீட்டு உடன்படிக்கை இன்று கையொப்பமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையொட்டி இந்திய ஜனநாயகக் கட்சி பொதுச்செயலாளர் ஜெயசீலன், துணைப் பொதுச்செயலாளர் ரவிபாபு ஆகியோர் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்துக்குச் சென்றனர்.பின்னர் அவர்கள் அக்கட்சி நிர்வாகிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பேச்சு நடத்தினர்.

Tags

Next Story
ai marketing future