தேர்தல் தேதி அறிவிப்பு- திமுக பொதுக்குழு ஒத்திவைப்பு

தேர்தல் தேதி அறிவிப்பு- திமுக பொதுக்குழு ஒத்திவைப்பு
X

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் திமுக பொதுக்குழு மற்றும் திருச்சி மாநில மாநாடு ஒத்தி வைப்பதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிவிப்பில், தலைமை தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு - புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதால், வரும் மார்ச் 7 ம் தேதி நடைபெறவிருந்த தி.மு.க. பொதுக்குழுக் கூட்டமும் - மார்ச் 14 ம் தேதி அன்று திருச்சியில் நடைபெறுவதாக இருந்த தி.மு.க. மாநில மாநாடும் ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்