சட்டமன்ற தேர்தல்- அதிமுக விருப்பமனு விநியோகம்

சட்டமன்ற தேர்தல்- அதிமுக விருப்பமனு விநியோகம்
X

சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு இன்று முதல் விருப்ப மனு விநியோகிக்கப்படுகிறது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு, சென்னை - ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சித் தலைமையகத்தில் இன்று முதல் விருப்ப மனு விநியோகிக்கப்படுகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர், விருப்ப மனு விநியோகத்தை தொடங்கி வைக்கின்றனர்.இன்று முதல் மார்ச் 5 ம் தேதி வரை தினமும் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அதிமுக தலைமை ஏற்கெனவே தெரிவித்துள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!