வழிகாட்டுதல் குழுவிற்கு அதிகாரம் அதிமுக பொதுக்குழு தீர்மானம் !

வழிகாட்டுதல் குழுவிற்கு அதிகாரம் அதிமுக பொதுக்குழு தீர்மானம் !
X

அதிமுகவில் வழிகாட்டுதல் குழுவிற்கு அதிகாரம் வழங்குதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.

சென்னையில் அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. முன்னதாக பொதுக்குழுவில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மறைந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், பொதுக்குழுவில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவிற்கு அதிகாரம் வழங்குதல், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்பவர்களுடன் மட்டுமே கூட்டணி உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வழிகாட்டு குழுவில் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், காமராஜ், சண்முகம், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன், மோகன், கோபாலகிருஷ்ணன், சோழவந்தான் மாணிக்கம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Tags

Next Story