பார்ட்டைம் அரசியல் செய்கிறார் கமல் : அமைச்சர் செல்லூர் ராஜு

பார்ட்டைம் அரசியல் செய்கிறார் கமல் : அமைச்சர் செல்லூர் ராஜு
X

கமல்ஹாசன் அரசியலை பார்ட் டைம் ஜாப்பாக செய்கிறார் என மதுரையில் அமைச்சர் செல்லுார் ராஜூ கூறினார்.

மதுரை சௌராஷ்ட்ரா சேம்பர் ஆப் காமர்ஸில் சௌராஷ்ட்ரா சமுதாயத்தின் முக்கிய பிரமுகர்களை கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேரில் சந்தித்து வரும் 2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறுகையில்,உடல்நிலையை கருத்தில் கொண்டு ரஜினிகாந்த் எடுத்த முடிவு வரவேற்கத்தக்கது, அதிமுக சிறப்பான ஆட்சியை கொடுப்பதால் எங்களுக்கு தான் ரஜினி ஆதரவு கொடுப்பார்.

யார் என்ன கருத்து சொன்னாலும் அதை பற்றி எங்களுக்கு கவலையில்லை, அதிமுகவுடன் தற்போது உள்ள கட்சிகளுடன் கூட்டணி தொடர்கிறது. கமல்ஹாசன் 3 நாட்கள் அரசியல் பணியும், 3 நாட்கள் பிக் பாஸ் பணியும் செய்கிறார், கமல்ஹாசன் அரசியலை பார்ட் டைம் ஜாப்பாக செய்கிறார். மறைந்த ஜெயலலிதா தலைமையில் அதிமுக 234 தொகுதிகளும் தனித்து போட்டியிட்டது போல திமுக 234 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடியுமா. இவ்வாறு அவர் கூறினார்

Tags

Next Story
ai based agriculture in india