அதிமுக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் தொடங்கியது

அதிமுக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் தொடங்கியது
X

அதிமுக தேர்தல் பிரச்சார பணிகளை தொடங்கி வைக்கும் பொதுக்கூட்டம் சென்னையில் தொடங்கியது.

தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் முக்கிய அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளை தற்போதே தொடங்கி விட்டன. அந்த வகையில் அதிமுக சார்பில் தேர்தல் பிரச்சார பணிகளை தொடங்கி வைக்கும் பொதுக்கூட்டம் சென்னையில் தொடங்கியது.சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பங்கேற்றனர். பொதுக்கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக இருவரும், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.இக்கூட்டத்தில், அமைச்சர்கள், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் அதிமுக நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

Tags

Next Story