சுகாதாரத்தில் சிறந்த ஊராட்சியா ? வெல்லுங்கள் பல லட்சம் பரிசை..!

சுகாதாரத்தில் சிறந்த ஊராட்சியா ?   வெல்லுங்கள் பல லட்சம் பரிசை..!
X
சுகாதாரத்தை பேணுவதில் சிறந்து விளங்கும் ஊராட்சிகளுக்கு மாவட்ட மாநில அளவில் ரொக்கப்பரிசும் கேடயமும் வழங்கப்படுகிறது

சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு பரிசுத்தொகையும், கேடயமும் வழங்கப்படவுள்ளது

தமிழகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின்கீழ் சுகாதாரம் மற்றும் துப்புரவு தொடர்பான பணிகள் மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களின்கீழ் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளை ஊக்குவிக்கும் வகையில் மாநில அரசால், முன்மாதிரி கிராம விருது உருவாக்கப்பட்டு, அதன் அடிப்படையில் மாநில அளவில் தேர்வு செய்யப்படும் மூன்று ஊராட்சிகளுக்கு தலா ரூ.15.00 இலட்சம் பரிசுத்தொகையும் கேடயமும், மாவட்ட அளவில் ஒரு கிராம ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு ரூ.7.50 இலட்சம் பரிசுத்தொகையும் கேடயமும், வழங்கப்படவுள்ளது.

அதன்படி திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற நிலை நிறுத்துதல், திடக்கழிவு மேலாண்மை, குப்பைகளை உரிய முறையில் மறு சுழற்சி செய்தல், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை, வீட்டுக்கழிவு மேலாண்மை, கிராம ஊராட்சியின் அழகிய தோற்றம் ஆகிய சிறப்பு அம்சங்களின் அடிப்படையில் ஊராட்சிகள் தேர்வு செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare