தமிழகத்தில் உளுந்து சாகுபடியை அதிகரிக்க விவசாயிகளுக்கு சிறப்பு சலுகைகள்...

தமிழகத்தில்  உளுந்து சாகுபடியை  அதிகரிக்க விவசாயிகளுக்கு சிறப்பு சலுகைகள்...
X

பைல் படம்

தமிழகஅரசு உளுந்து சாகுபடியை அதிகரிக்க பல சலுகைகளை விவசாயிகளுக்கு அளித்துள்ளது. தஞ்சை மாவட்டம் சிறப்பு கவனம் பெறுகிறது

வேளாண்மையில் தொடர் வளர்ச்சியானது ஒரு மாநிலத்தின் ஒட்டு மொத்தப் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும். உணவுப் பாதுகாப்புடன் கிராமப்புற விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், அவர்களுக்குத் தொடர் வருமானம் கிடைத்திடவும்,மாநில அளவில் நிலையான பொருளாதார வளர்ச்சிஅடைவதற்கும் வேளாண்மையில் நீடித்த வளர்ச்சியை ஏற்படுத்துவது மிகவும் இன்றியமையாததாகும்.

இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே முதன் முறையாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு வேளாண் துறைக்கென 2021-2022 -ஆம் ஆண்டிற்கான தனி நிதிநி லை அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி வேளாண்மைத்துறை பெயரினை வேளாண்மை-உழவர் நலத்துறை என்றுபெயர் மாற்றம் செய்யப்பட்டு இயற்கை நிலையான வேளாண்மையை ஊக்குவித்து வேளாண் வளர்ச்சிக்கு வழிவகுத்து வருகிறது.

அதில், அத்தியாவசியமான உணவுப் பொருளாகத்திகழும் உளுந்து சாகுபடி பரப்பளவை தமிழகம் முழுவதும் அதிகரிக்கும் வகையில் வேளாண்மைதுறை தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடையை தொடர்ந்து தஞ்சையில் நஞ்சை உளுந்து திட்டம் என்ற திட்டத்தை செயல்படுத்திட முடிவுசெய்யப்பட்டது. கடந்த ஆண்டு தஞ்சைமாவட்டத்தில் 22 ஆயிரம் ஏக்கரில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டது. சம்பாதாளடி அறுவடை ஆன பின்னர் தஞ்சை நஞ்சை உளுந்து திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப் பட்டது. மண்வளம் பாதுகாத்திடவும் பயிர் சுழற்சிசெயல்படுத்தவும் மண்ணில் தழைச்சத்து நிலை நிறுத்தப்பட்டு மண் வளம் அதிகரிக்கும் இந்தஆண்டு உளுந்து சாகுபடிக்கு முக்கியத்துவம் கொடுத்து வழக்கமான சாகுபடி பரப்பளவை விட கூடுதலாக 37 ஆயிரத்து 500 ஏக்கரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதற்காக விவசாயிகளுக்கு விதை மானியம் மற்றும் நுண்ணுயிர் சத்து உரங்கள் வழங்கப்பட்டன. மேலும் சாகுபடி தொழில்நுட்பங்கள் அடங்கிய புத்தகம் தயாரித்து விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டது. வட்டாரஅளவில் இலக்கு பிரிக்கப்பட்டு அதில் வாய்ப்புள்ள கிராமங்கள் கண்டறியப்பட்டு விவசாயிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது இதற்கான தொடக்கவிழா திருவிடைமருதூரில் நடத்தப்பட்டது. 555 கிராமங்களில் இந்த பயிற்சி வகுப்பு அளிக்கப்பட்டது. இதன் பயனாக இந்த ஆண்டு தற்போதுவரை 60 ஆயிரம் ஏக்கரில் உளுந்து பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பின்னர் உளுந்து மற்றும் பயிறு வகை பயிர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால் கூடுதலாக சாகுபடி செய்யப்பட்டு இருப்பது விவசாயிகள் மத்தியில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக வேளாண்துறையினர் கூறுகின்றனர்.

தஞ்சை நஞ்சையில் உளுந்து திட்டம் மூலம் கூடுதல் உளுந்து பயிர் சாகுபடி பரப்பு,பயறு வகை பயிர்களின் அவசியம் மற்றும் முக்கியத்துவம்,உற்பத்தியினைஅதிகரிக்க தேவையான தொழில்நுட்பம் குறித்த ஆலோசனைகளை வேளாண் அதிகாரிகள் வழங்கினார்கள். வட்டார அளவில் பரப்பு இலக்கு பிரித்தளிக்கப்பட்டு கூடுதல் பயிர் சாகுபடிக்கு தேவையான உயர் விளைச்சல் தரக்கூடிய உளுந்து ரக விதைகள், நுண்ணுயிர் உரங்கள், இரசாயன உரங்கள் மற்றும் தேவையான இடுப்பொருட்கள், மாவட்டத்துக்குட்பட்ட அனைத்து அரசு வேளாண் விரிவாக்க மையங்களில் மற்றும் தனியார் விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

தேவையான சான்று பெற்றவிதைகள் தனியார் விதைவிற்பனைநிலையங்களிலும் இருப்புவைக்கஏற்பாடுசெய்யப்பட்டது. மேலும்,தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து கிராமங்களில்,விவசாயிகளுக்கு சம்பாநெல் அறுவடைக்குபின்,நெல் தரிசில் உளுந்துசாகுபடியின் முக்கியத்துவம், உடலநலத்தில் புரதச்சத்தின் பங்கு,மண் வளமேம்பாடு,குறைந்தநீர் தேவை,பயிரின் வேர் முடிச்சிகள் மூலம் மண்ணில் தழைச்சத்து அதிகரிப்பு, குறுகிய காலத்தில் வருமானம்,தென்னையில் உளுந்து, ஊடுபயிர், நெல் வயலில் வரப்புபயிர், கரும்பில் ஊடுபயிர், தரிசில் தனிபயிர் என அனைத்து வகைகளில் உளுந்து சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு கிராமந்தோறும் முகாம்கள்,விழிப்புணர்வு கூட்டங்கள், தொழில்நுட்ப செய்திகள்,தொழில்நுட்ப பயிற்சிகள் எனஅனைத்துவித விரிவாக்க முறைகளும் மாவட்ட வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்கு கிடைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறினார்.

தஞ்சாவூர் மாவட்டம், நரசகாயகபுரம் கிராமத்தை சேர்ந்த .செல்வம் என்ற விவசாயி தெரிவித்ததாவது: திட்ட கிராமங் களில் தேசிய உணவு பாதுகாப்புதிட்டம்,தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டங்களில் உள்ளபயறு வகை செயல் விளக்கங்கள் அனைத்தும் முன்னுரிமைஅளிக்கப்பட்டு முக்கிய வேளாண் இடுப்பொருட்கள் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டது. இந்தமாதம் தொடக்கத்தில் பெய்தமழையினால் தற்போதுபயிர் நிலைநன்றாகஉள்ளது இந்த 60 ஆயிரம் ஏக்கரில் இருந்து 20 ஆயிரம் டன் உளுந்து உற்பத்தி ஆகும் . இதன் மதிப்பு இன்றைய சந்தை விலையில் ரூபாய் 140 கோடி ஆகும். இது கிராமிய பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என விவசாயி செல்வம் தெரிவித்தார். இதைப்போல தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் முழுவீச்சில் செயல்படுத்தப்படுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!