வீரம் விளங்கும் சீவலப்பேரியில் வீற்றிருக்கும் விஷ்ணு துர்க்கை...

வீரம் விளங்கும் சீவலப்பேரியில் வீற்றிருக்கும் விஷ்ணு துர்க்கை ..!
சீவலப்பேரி என்றால் சிறப்பு... எக்காலமும் வற்றாத ஜீவநதியாம் தாமிரபரணி, சித்ராநதி மற்றும் கோதண்டராம நதி என 3 நதிகள் சங்கமிக்கும் சீவலப்பேரியில் அமைந்துள்ள திரிவேணி சங்கமஸ்தலமான திரிசூலம் ஏந்திய துர்க்கை அம்மன் கோவிலின் சிறப்பினை கேட்டு அதிசயித்தோம்.
மருதமரங்காடு நிறைந்த பகுதி சீவலப்பேரி ஆகும். இங்கு ஆட்சி செய்த குறுநில மன்ன்ன் வல்லபபாண்டியன் வெட்டிய ஏரி வல்லப பேரேரி என அழைக்கப்பட்டது. இங்கு உள்ள கோவிலில் குடியமர்ந்து அருள்பாலிக்கும் அருள்மிகு சுந்தர்ராஜ பெருமாளுடன் இணைந்துள்ள தாயாரின் பெயர் வரமங்கை என்பதால் இத்தலம் வரப்பேரி எனவும், துளசி வனம் சூழ்ந்த பகுதியில் கோவில் அமைந்த்தால் ஸ்ரீ என்ற அடைமொழியுடன் ஸ்ரீ வரப்பேரி என அழைக்கப்பட்டு காலப்போக்கில் இந்த ஸ்தலம் சீவலப்பேரி என மருவி விட்டதாக வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறுமுனி அகத்தியர் சிவ பார்வதி திருமணம் காண பொதிகை மலை வந்திருந்த போது, இத்தலத்திற்கு வந்து துர்க்கை அம்மனை வழிபட்டு, கூடுதல் மன வலிமையை பெற்றதாகவும் வரலாறு உண்டு.
அன்டசக்திகள் நிறைந்த ஸ்தலமாக சீவலப்பேரி திகழ்கிறது. ஸ்ரீ விஷ்னு துர்க்கை சுற்றி வடக்குவா செல்வி, முப்பிடாதி, மகாலி அம்மன், அனந்தவல்லி அம்மன், உச்சினி மகாளி, கார்தாரி அம்மன், முத்தாரம்மன் மற்றும் உலகம்மன் என 9 கோவில்கள் ஊரையே சக்தி புமியாக மாற்றி அமைந்துள்ளது.
பெண் கொலை சாபம் மற்றும் பிதுர் சாபம் போக்கும் ஸ்தலமாக திகழும் சீவலப்பேரி, பாட்டெழுதிய மகாகவி பாரதியின் தாய் புமியாக திகழ்ந்துள்ளது. அவரது தந்தை சின்னசாமி அய்யர் இங்கு தான் வசித்துள்ளார். மகாகவியும் காணி நிலம் வேண்டும் என சீவலப்பேரி துர்க்கை முன் ஆதங்கத்தோடும் இங்குள்ள தாமிரபரணி ஆற்றுப்படுக்கையில் ஆனந்த்த்துடனும் பாடி மகிழ்ந்த்தாக ஸ்தல வரலாறுகள் கூறுகின்றன.
துர்க்கா தேவி என்றால் நல்லவர்களை அரண் போல காப்பவள் என சக்தி சரித்திரம் தெரிவிக்கிறது. திருப்பதி, ஸ்ரீ ரங்கத்தை தொடர்ந்து ராஜ கோபுரத்தில் தங்க கலசம் இங்கு ம்ட்டுமே உள்ளதாக உள்ளுர் வாசிகள் பெருமையுடன் தெரிவித்தனர்.
இந்து மத வழிபாட்டில் கருவறையில் சாமி தாயாருடன் அல்லது தாய் சாமியுடன் இரப்பதையே கண்டு ரசித்த கண்களுக்கு, இங்கு சகோதரன் விஷ்ணுவுடன் சகோதரி துர்க்கா தேவி கருவறையில் அமர்ந்து அருள்பாலிப்பது ஆச்சர்யத்துடன், ஆனந்த்த்தையும் வழங்குகிறது.
1988ம் ஆண்டு ஊர் பெரியவர்களால் தொடங்கப்பட்ட ஸ்ரீ துர்க்காம்பிகா தேவஸ்தான டிரஸ்ட் என்ற அமைப்பின் முலம் இத்தலம் அமைக்கும் பணி தொடங்கி அமைப்பு அமைக்கும் முன்பாகவே, அதாவது 1987ல் தொடங்கிய இக்கோவில் பணி 1997ம் ஆண்டு முழுமைப்பெற்றது. 53 அடி உயர ராஜ கோபுரத்துடன் அமைந்த இக்கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த 2015 ம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ம் தேதி நடைபெற்றது.
இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க ஸ்தல வரலாறு தெரியுமா?
வீரம் தோய்ந்த மண் என்று வரலாறு கூறும் சீவலப்பேரி பொருத்தமாக விஷ்ணு துர்க்கை கோயில் கொண்டிருக்கிறாள். சிவ-பார்வதி திருமணம் கயிலையில் அரங்கேறியபோது வடபகுதி தாழ்ந்து, தென் பகுதி உயர்ந்தது என வரலாறுகள் கூறுகிறது.. ஈசன் அகத்தியரை பார்க்க, உலகை சமன் செய்ய தெற்கு நோக்கி நகர்ந்த குறுமுனி, குற்றாலத்தை அடைந்தார். சிவ பூஜைக்காக சென்றபோது திருமாலை பரமசிவமாக குறுக்கினார். பூஜையை முடித்தபின் நெடுமாலான திருமாலைத் தேடினார்.அவர் அக்கால முக்கூடல் என அழைக்கப்பெற்ற சீவலப்பேரியில் விஷ்ணு துர்க்கையோடு அருள் காட்டும் கோலம் பார்த்து வியந்தார். தாங்கள் எப்போதும் இவ்வாறு இத்தலத்தில் அமர்ந்து அருள வேண்டும் என்று கேட்டு நிலம்பட வீழ்ந்து வணங்கினார்.
இன்றும் அவரின் அன்பு வார்த்தைக்கேற்ப சீவலப்பேரியில் அருள் வழங்கி வருகிறார், திருமால். தேவ-அசுரர் யுத்தத்தில், அசுரர்கள் தோல்வியடைந்தனர். அசுரர்களின் தாயான திதி கலக்கம் அடைந்தாள். குருவான சுக்கிராச்சாரியாரிடம் முறையிட்டாள். அப்போது அங்கிருந்த சுக்கிராச்சாரியாரின் தாயார் அசாத்திய சக்தி பெற்ற காவ்யா மாதாவிற்கு கோபம் அதிகரித்தது. அவள் நினைத்தால் எல்லாவற்றையும் அழித்து விட முடியும். இந்திரனை ஒழித்துக் கட்டிவிட்டு திதியின் குழந்தைகளுக்கு அனைத்து பதவிகளையும் பெற்றுத்தருவதாக வாக்கு கொடுத்து தேவலோகம் நோக்கி படையுடன் கிளம்பினாள்.
இதைக் கேள்வியுற்ற தேவர்கள் கதிகலங்கி வைகுந்தவாசனை நாடி காத்தருளுமாறு திருவடி தொழுதனர். மகாவிஷ்ணு சுதர்சன சக்கரத்தை காவ்யா மாதாவை நோக்கி செலுத்தினார்.அவளை இரண்டாகத் துண்டித்த சுதர்சன சக்கரம் வழக்கமாக வைகுந்தனை நோக்கித் திரும்பிவிடும் சக்கரம், சூரியலோகம், சந்திர லோகம், துருவமண்டலம்என்று சுழன்று திரிந்தது.அப்போது கபில முனிவர்நாராயணன் கட்டளையால் நல்ல காரியம் செய்தாலும் காவ்யா மாதா அசுர குலத்தவள் என்றாலும் அவள் பெண் பாவம் பொல்லாதது அதனால்தான் உன்னால் நாராயணன் கையில் மீண்டும் அமர முடியவில்லை.
இந்த மகாபாவம் தொலைத்து வர. தென்னாட்டில் புரண்டோடும் தாமிரபரணியில்-சீவலப்பேரியில் பெருமாள்,விஷ்ணு துர்க்கையுடன் வீற்றிருக்கிறார். நதியில் நீராடி சீர்வளர் பெருமாளின் திருப்பாதங்களையும் துர்க்கையையும்தொழுது நில். பாவங்கள் தாமிரபரணியில் கரைந்தோடும்'' என்று சொல்லி கபிலர் ஆசி கூறினார். சுழித்தோடும் தாமிரபரணியில் சக்கரம் மூழ்கி எழுந்தது. பெருமாளையும் துர்க்கையையும் தொழுது மோன நிலையில் ஆழ்ந்தது. சட்டென்று வானில் அசரீரி ஒலித்தது. ''சுதர்சன சக்கரமே உமது பாவம் அழிந்தது. மேலும் நலம் பெற, இந்த இடத்தில் அசுவமேத யாகம் நடத்தும்'' என்றது. சிவனும் உமையும் ரிஷிபாரூடராக வாகனமேறி தரிசனம் தந்தனர். பிரம்மனும் இந்திரனும் தேவர்கள் புடைசூழதோன்றினர். கபிலர் வேள்வித் தீ எழுப்ப, அசுவமேத யாகம் செய்யத்தொடங்கினார் சுதர்சனர். அதில் தேவாதி தேவர்கள் தோன்றினர்.திருமால் லட்சுமியுடன் கருடவாகனத்தில் காட்சியளித்து எப்போதுமே என்னுடனேயே இருப்பாய். என்னை நீ பூஜித்த இத்தலத்தில் இனி யார் வந்து தரிசித்தாலும் அவர்களை ஏற்றுக் கொள்வேன். கேட்ட வரங்களை தட்டாது தருவேன்''என்றார்.
வாங்க ஆலயத்துக்குள் போகலாம்?
இத்தகைய வரலாற்று சிறப்பு வாய்ந்த சீவலப்பேரி துர்க்கையம்மன் கோயிலின் ஆலயத்தின் முன்புறம் கிழக்கு நோக்கியராஜகோபுரம். மனதைக் கொள்ளை கொள்ளும்சிற்ப நுணுக்கங்கள் நுழைந்தவுடன் இரண்டு கல் யானைகள் வரவேற்கின்றன.வசந்த மண்டபத்தில் பெண்கள் தங்கள் வேண்டுதலுக்காகநெய்தீபம் ஏற்றுகிறார்கள்.திருமண வரம் வேண்டுவோர்மஞ்சள்கயிறு கட்டி வைத்துள்ளார்கள் கோயில் கருவறையில்அகிலத்தையே அசைக்கும்துர்க்கையம்மன் கூப்பிட்டகுரலுக்கு ஓடி வரும் தயாபரி -சாந்தசொரூபியாகதனது அண்ணனுடன்அருள்கிறாள்..!
ஒரு காலத்தில் துளசி வனமாய் காட்சியளித்த இந்த இடம் துர்க்காபுரி எனஅழைக்கப்பட்டது. சிந்தாமணி விநாயகர் விக்னங்களை களைய காத்திருக்கிறார். தியான மண்டபம். எப்போதும் 'ஓம் துர்க்கா... ஸ்ரீ துர்க்கா... ஜெயதுர்க்கா...' என்ற மந்திரஉச்சாடனம் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.ஜெய்ப்பூரிலிருந்து வரவழைக்கப் பட்ட அம்மன் சிலை காண்போரைமெய்சிலிர்க்க வைக்கிறது.அரசரடி விநாயகர். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என உணர்த்தும் வண்ணம் நாகர்களுடன் விநாயகர் தரிசனம் தருகிறார்.தியானேஸ்வர் எதிரே நந்தியுடன் தியான நிலையில் இருந்து அருள்பொழிகிறார். இங்கு பிரதோஷம் மற்றும்சிவராத்திரி திருவிழா மிகச் சிறப்பாக நடக்கும்.குருவாயூரப்பன், தனிச் சந்நதியில் அருள்கிறார்.தாஸ ஆஞ்சநேயர்,அருள்பொலியும்திருக்காட்சி தருகிறார்.மிக அற்புதமாய் சனிபகவான்தனது மனைவி நீலாதேவியுடன்தனிச்சந்நதியில்வீற்றிருக்கிறார்.
பால சுப்பிர மணியர் ,நவகிரகங்கள்.நவராத்திரி திருவிழா மிகச்சிறப்பாக நடந்தேறுகிறது.எட்டாம் நாள்துர்க்காஷ்டமி அன்றுமகாசண்டி யாகம் நடக்கும்.திருமணத்தடை உள்ளவர்கள்மஞ்சள்கயிறு கட்டி பூஜை செய்துபரிகாரம் செய்கிறார்கள்.குழந்தை பாக்யம் வேண்டியும்பிரார்த்தனை செய்கிறார்கள்.தாமிரபரணி ஆற்றில்நீராடி இந்தக் கோயிலில் அங்கப் பிரதட்சணம் செய்தால்வேண்டிய வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.பச்சரிசி பரப்பி வைத்து அதில்தேங்காய் உடைத்து, நெய்ஊற்றி திரி போட்டு விளக்கேற்றி, தம் விருப்பங்களை ஈடேற்றிக் கொள் கிறார்கள் பக்தர்கள்.
சீவலப்பேரி துர்க்கை அம்மன் கோயில் நெல்லையில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது. நெல்லை சந்திப்பில் இருந்து அடிக்கடி பேருந்துகள் செல்கின்றன. பாளையங்கோட்டை மார்க்கெட் மற்றும் நெல்லை சந்திப்பு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வாடகை ஆட்டோ மற்றும் வாகன வசதியும் உள்ளது.
பு.மைக்கேல்ராஜ்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu