/* */

ஆன்லைன் நிறுவனங்களுக்கு ஆர்டர் ''சார்... முருங்கை கீரை பொறித்து... ரசம் வைத்து கொண்டு வாங்க''...

Online Food Delivery - வெண்டைக்காயை நறுக்கி எண்ணெய்க்காய் போல் வதக்கி கொண்டு வாங்க...'' என்பது போன்ற ஆர்டர்கள் தான் தற்போது ஆன்லைனில் அதிகரித்து வருகின்றன.

HIGHLIGHTS

ஆன்லைன் நிறுவனங்களுக்கு ஆர்டர்  சார்... முருங்கை கீரை பொறித்து... ரசம் வைத்து கொண்டு வாங்க...
X

பைல் படம்.

Online Food Delivery -இப்போது சென்னையில் வாங்கக்கூடிய பொருட்கள் எல்லாம்... குக்கிராமத்திலும் வாங்க... முடியும். அதேபோல் குக்கிராமங்களில் கிடைக்கும் அனைத்தையும் பெருநகரங்களிலும் வாங்க முடியும்... டோர்டெலிவரி செய்யும் ஆன்லைன் உணவு நிறுவனங்கள் தான் இப்படி ஒரு அற்புதமான சூழலை உருவாக்கி உள்ளனர். இந்த பணியில் மாநிலம் முழுவதும் பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

இவர்களை பற்றி பல நேர்மறை மற்றும் எதிர்மறை செய்திகள் தினமும் வந்து கொண்டுள்ளன. பிரியாணி, புரோட்டா... பீட்ஸா..... பர்க்கர்... பல நான்வெஜ்

அயிட்டங்கள்... ஐஸ்கிரீம்... சாக்லெட் போன்ற உடல் நலனை பாதிக்கும் விஷயங்கள் தான் அதிகம் ஆர்டர் வருகிறது என்பதை போன்ற ஒரு தோற்றம் தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது.

ஆனால் உண்மையில் பலர் வீட்டில் காலையில் இட்லி, தோசை, பொங்கல் உட்பட தங்களுக்கு தேவையானதை தயார் செய்து கொள்கின்றனர். சாம்பார், சட்னி உட்பட தங்களின் காலை உணவுக்கு தேவையானவற்றை டோர்டெலிவரி நிறுவனங்களிடம் ஆன்லைன் ஆர்டர் தருகின்றனர். மதியம் சாதம் (சோறு) மட்டும் ஆக்கிக் கொள்கின்றனர். கிராம மக்கள் பாணியில் 'கடலைப்பருப்பு, தேங்காய் துருவல் போட்டு முருங்கை கீரை வதக்கி, ரசம் வைத்து கொண்டு வாருங்கள்' என ஆர்டர் தருகின்றனர். சிலர் 'வெண்டைக்காய் பொடியாக நறுக்கி, உப்பு, மிளகுத்துாள் போட்டு எண்ணெய்க்காய் போன்று வதக்கி தாருங்கள்' என கேட்டு வாங்குகின்றனர். சிலர் வத்தக்குழம்பு, மோர்க்குழம்பு, சாம்பார் என தங்களுக்கு தேவையானதை மட்டும் ஆர்டர் தருகின்றனர்.

இப்படி தேவையான உணவுகளை மட்டும் ஆர்டர் தருபவர்களுக்கு டோர்டெலிவரி நிறுவனங்கள் தனியார் மெஸ்களுடன் ஒப்பந்தம் போட்டு... அவர்கள் கேட்ட பொருட்களை குறித்த நேரத்தில் சப்ளை செய்து விடுகின்றனர். தாங்கள் கேட்டது... கேட்டமாதிரியே கிடைத்து விட்டதால் பணத்தை பற்றி யாரும் கவலைப்படுவதில்லை... பொருள் தரமாக இருந்தால் அடுத்தடுத்து ஆர்டர்கள் குவிக்கின்றன. சமீபகாலமாக பல்வேறு வகை கீரை, மற்றும் காய்கறிகளின் பொறியல் மட்டும் கேட்பவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. நகர்ப்புறம், கிராமப்புறம் பாகுபாடு இன்றி இப்படிப்பட்ட கிராமியத்தனமும், ஆரோக்கியமும் கலந்த உணவுகளை ஆர்டர் செய்கின்றனர்.

இதனால் நாங்கள் பல மெஸ்களை ஒப்பந்தம் போட்டு கையில் வைத்துள்ளோம். விற்பனையும் சக்கை போடு போடுகிறது. தவிர அவர்கள் எந்த நேரம் என்ன கேட்பார்களோ.... அதனை குறித்த நேரத்தில், அவர்கள் எதிர்பார்க்கும் தரம்... சுவையில்... சப்ளை செய்ய முடியுமா... என்ற பதைபதைப்பும் தொற்றிக் கொள்கிறது என டோர்டெலிவரி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 6 Sep 2022 5:58 AM GMT

Related News

Latest News

 1. தேனி
  பெரியாறு அணை போராட்டக்களத்தில் இறங்கிய தமிழக நிருபர்கள்..!
 2. லைஃப்ஸ்டைல்
  திருமணத்தில் ஆண்கள் - பெண்கள் எவ்வளவு வயது வித்யாசம் இருக்கலாம்?
 3. லைஃப்ஸ்டைல்
  உடலுக்கு இரும்பு போன்ற வலிமை வேண்டுமா? கம்பு லட்டு சாப்பிடுங்க!
 4. லைஃப்ஸ்டைல்
  வீடுகளில் சிலைகளை வைத்திருக்கிறீர்களா? - இந்த விஷயங்களை...
 5. லைஃப்ஸ்டைல்
  முட்டைகளை பிரிட்ஜில் வைக்கலாமா? கூடாதா?
 6. இந்தியா
  மைசூருவில் பெண்ணின் உடலை 200 மீட்டர் காட்டுக்குள் இழுத்துச் சென்ற...
 7. லைஃப்ஸ்டைல்
  வீட்டில் குளியலறை எந்த திசையில் இருக்க வேண்டும் என்று தெரியுமா?
 8. லைஃப்ஸ்டைல்
  சுவை மிகுந்த மீல் மேக்கர் கிரேவி செய்வது எப்படி?
 9. உலகம்
  வரும் 28ல் உலக பட்டினி தினம் - பசி இல்லாத ஒரு உலகை படைத்திடுவோம்!
 10. விளையாட்டு
  கரூர் அகில இந்திய கூடைப்பந்து போட்டி: நாளை இறுதி போட்டி