சென்னை விமான நிலையத்தில் தங்க கடத்தல்

நூதனமான முறையில் கடத்தல்

செடிகளின் விதைகள் என்று குறிப்பிட்டு துபாயிலிருந்து சென்னைக்கு சரக்கு விமானத்தில் வந்த கொரியா் பாா்சலில் ரூ.1.20 கோடி மதிப்புடைய 2.5 கிலோ கடத்தல் தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்து.நூதன முறையில் கடத்திய ஆசாமிகளுக்கு சுங்கத்துறை வலைவீசி தேடி வருகின்றனர்

துபாயிலிருந்து சென்னைக்கு சரக்கு விமானத்தில் வந்த கொரியா் பாா்சல்களை சென்னை விமானநிலைய சுங்கத்துறையினா் ஆய்வு செய்தனா். அப்போது சென்னை முகவரிக்கு வந்த ஒரு பாா்சலில்,உள்ள பூ மற்றும் காய்கறி செடிகளின் விதைகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.இது சுங்கத்துறைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து அந்த பாா்சலை தனியே எடுத்துவைத்தனா்.அந்த பாா்சலில் உள்ள செல்போன் எண்ணை தொடா்பு கொண்டனா்.அந்த எண் உபயோகத்தில் இல்லை என்று வந்தது.அதோடு விசாரணையில் அந்த முகவரியும் போலியானது என்று தெரியவந்தது.

அதன்பின்பு அந்த பாா்சலை திறந்து பாா்த்தனா்.அதற்குள் ஓட்ஸ் பாக்கெட்கள் மற்றும் குளிா்பானம் தயாரிக்கும் பவுடா் அடங்கிய பாக்கெட்கள் இருந்தன.அவைகளை உடைத்து பாா்த்தபோது,ஓட்ஸ்,குளிா் பான பவுடா்களில் தங்கப்பொடி தூள்கள் கலந்திருந்தன.இதையடுத்து அவைகளை தண்ணீரில் கரைத்து,தங்கப்பொடி தூள்களை வடிகட்டி எடுத்தனா்.மொத்தம் 2.5 கிலோ தங்கப்பொடி தூள்கள் இருந்தன.அதன் சா்வதேச மதிப்பு ரூ.1.20 கோடி.இதையடுத்து தங்கப்பொடி தூள்களை சுங்கத்துறையினா் கைப்பற்றினா்.

அதோடு சுங்கத்துறையினா் இதுபற்றி வழக்குப்பதிவு செய்தனா்.செடி விதைகள் என்று குறிப்பிட்டு,தங்கத்தூள்களை நூதனமான முறையில் சென்னைக்கு கடத்திய கடத்தல் ஆசாமிகளை தேடிவருகின்றனா்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!