தொடர்ந்து 6 மாதங்கள் எரியும் விளக்கு !
பத்ரிநாத் அழகிய பெருமாள் கோயிலில் தொடர்ந்து எரியும் விளக்கு
நாட்டில் உள்ள கோவில்கள் ஒவ்வொன்றிலும் ஒரு தனி சிறப்பும் அதிசயங்களும் இருக்கும். அந்த வகையில் ஒரு திருத்தலத்தில் மூடப்பட்ட கோவிலில் தொடர்ந்து 6 மாதங்கள் விளக்கு எரிந்துக் கொண்டே இருக்கும் அதிசயத்தை பற்றி பார்ப்போம்....!
உத்தரகாண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் உள்ள மலைவாழிடமான பத்ரிநாத்தில் ஒரு அழகிய பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில், வருடத்தில் 6 மாதங்கள் மூடியும் 6 மாதங்கள் திறந்தும் இருக்கும்..
இத்தலம் கடல் மட்டத்திற்கு 10 ஆயிரம் அடி உயரத்தில் அலக்நந்தா நதிக்கரையில் அமைந்துள்ளது. பத்ரிநாத் கோவிலில் ஏழுமலையான் விஷ்ணு எனும் நாமத்துடன் அருள்பாலிக்கிறார். இந்த கோவில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் மூடப்பட்டு அதற்கு அடுத்த வருடம் வரும் மே மாதம் திறக்கப்படும்.
கோவிலை மூடும் சமயத்தில் இங்கு ஒரு விளக்கு ஏற்றப்படும். ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் கோவிலை திறக்கும்போது அந்த விளக்கு எரிந்துக்கொண்டே இருக்கும். அது எப்படி இவ்வளவு காலம் அணையாமல் எரிகிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
இதுமட்டுமல்லாமல் கோவில் மூடப்படும்போது இறைவனுக்கு சார்த்தப்பட்ட பூக்களும் அப்படியே வாடாமல் ஆறு மாதங்கள் வரை இருக்கின்றன. இந்த அற்புதம் ஓரிரு ஆண்டுகளாக நடக்கவில்லை, ஓராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இப்படி தான் இங்கு நடக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu