ரயில்களில் வானொலி சேவை வழங்க வடக்கு ரயில்வே திட்டம்

ரயில்களில் வானொலி சேவை வழங்க வடக்கு ரயில்வே திட்டம்
X
சதாப்தி, வந்தே பாரத் ரயில்களில் வானொலி பொழுதுபோக்குகளை விரைவில் தொடங்க வடக்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

சதாப்தி, வந்தே பாரத் ரயில்களில் வானொலி பொழுதுபோக்குகளை விரைவில் தொடங்க வடக்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், சதாப்தி, வந்தே பாரத் ரயில்களில் பயணிகள் தங்கள் பயணத்தின்போது வானொலி பொழுதுபோக்குகளை அனுபவிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி. லக்னோ, போபால், அமிர்தசரஸ், டேராடூன், வாரணாசி உள்ளிட்ட வழித்தடங்கள் வழியாக சதாப்தி, வந்தே பாரத் ரயில்களில் பயணிக்கும்போது வானொலி சேவையை வழங்க வடக்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.அதன்படி, 10 சதாப்தி மற்றும் 2 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் வானொலி மூலம் பொழுதுபோக்கு ரயில்வே தகவல் மற்றும் வணிக விளம்பரங்களை விளம்பரம் செய்யவும் திட்டமிட்டுள்ளது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!