அமித்ஷா சொன்னதை கவனீச்சங்களா...? இது நமக்கான பாடம் மட்டுமல்ல..!

அமித்ஷா சொன்னதை கவனீச்சங்களா...? இது நமக்கான பாடம் மட்டுமல்ல..!
X

உள்துறை அமைச்சர் அமித் ஷா (கோப்பு படம்)

இந்த தேர்தலில் அமித்ஷா மிக முக்கிய விஷயம் ஒன்றை சொல்கின்றார். அது கவனிக்கதக்கது

நாட்டின் அடுத்த ஐந்தாண்டு ஆட்சியினை நிர்ணயிக்கும் தேர்தல் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. ஒவ்வொரு கட்சியும் பல தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து வருகிறது. ஆனால் பாஜக போன்ற அதிமுக்கிய கட்சியின் மகா முக்கிய பிம்பமான அமித்ஷா சொல்வது கவனிக்கதக்கது.

அவர் அடுத்த ஆட்சியில் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டுவிடுவோம் என்கின்றார். இதுதான் இப்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஆகும். ஒருவேளை அப்படி ஒரு நடவடிக்கையினை இந்தியா தொடங்கினால் பாகிஸ்தான் நேரடியாக போரில் குதிக்க முடியுமா என்றால் விஷயம் சிக்கலானது.

ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாகிஸ்தான் தன் நாட்டின் நிலபரப்போடு இணைக்கவில்லை,அதனை "ஆஸாத் காஷ்மீர்" என தன் மறைமுக கட்டுபாட்டு பகுதியாகத்தான் வைத்திருக்கின்றது. ஆக இந்தியா அதனை மீட்க நடவடிக்கை எடுத்தால் தங்கள் பகுதியின் இறையாண்மை என அவர்கள் சொல்லமுடியாது. அமித்ஷா இதை சொல்ல காரணமில்லாமல் இல்லை. உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமித்திருக்கின்றது, ரஷ்ய ஆக்கிரமிப்பு கண்டிக்கதக்கது. அதனால் உக்ரைனுக்கு ஆயுதம் கொடுக்கின்றோம் ஒரு நாட்டின் பகுதியினை இன்னொரு நாடு ஆக்கிரமிப்பது தவறு என சொல்லித்தான் போரை மேல்நாடுகள் நடத்துகின்றன.

இதே விஷயம், அதாவது உக்ரைனின் கிழக்குபக்கம், ரஷ்யா ஆக்கிரமித்த கிரிமியா பக்கம் அதை மீட்க உக்ரைனுக்கு உரிமை உண்டென்றால் காஷ்மீரை முழுமையாக மீட்க இந்தியாவுக்கும் உரிமை உண்டு. இப்படி இடம்பார்த்து இந்தியா அடிக்கும் அடி உலக அரங்கில் சுளீரென ஒலிக்கின்றது.

பாகிஸ்தான் இப்போது இருக்கும் நிலையில் போருக்கு தயாரில்லை. ஆனால் விவகாரம் அது அல்ல சீனா. சீனா பாகிஸ்தானுக்கு அமைத்திருக்கும் சாலை, மேற்கே செல்ல அமைத்திருக்கும் பிரதான சாலை இந்த பகுதிவழியாக ஓடுவதால் சீனா நிச்சயம் விடாது. ஆனால் இந்தியாவும் விடுவதாக இல்லை. பாகிஸ்தானில் சீன தொழில்கள் அதிகம். அதை அடிக்கடி பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கம் தாக்குவதும் அதிகம். சமீபத்தில் நடந்த தாக்குதலில் ஐந்து சீனர்கள் கொல்லப்பட்டார்கள்.

அதாவது பாகிஸ்தானில் இருந்து சீனா வெளியேறவேண்டும் எனும் குரல் வலுக்கின்றது. இன்னொரு பக்கம் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களே இந்தியாவோடு இணைய சம்மதம் என சொல்ல தொடங்கிவிட்டார்கள். இன்னொரு பக்கம் உக்ரைனிய வெளியுறதுறை அமைச்சர் அவசரமாக இந்தியா வந்திருக்கின்றார்.

இந்நேரம் அமித்ஷா இப்படி அறிவிப்பது அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தேசம் தயாராவதை சொல்கின்றது. ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் இந்துக்களின் மாபெரும் தலமான சரஸ்வதி கோவில் அழிந்த நிலையில்கிடக்கின்றது. அதை மீட்டெடுக்க பாஜக தயாராவது தெரிகின்றது. எல்லாம் நல்லபடியாக நடக்கட்டும், தேசம் தன் எல்லையினை முழுமையாக மீட்கட்டும், மிகபெரிய காரியத்தை தொடங்கிக் கொண்டே தேர்தல் களத்தில் நிற்கின்றது பாஜக

இந்த வலுவான கரங்களுக்கு இரும்பு பலம் கொடுக்கவேண்டியது ஒவ்வொரு இந்துக்களின் கடமை, தேசம் அதை சரியாக செய்யும் என நம்புவோம்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!