/* */

செய்தியாளர்களுக்கு இ பதிவு அவசியமில்லை: டிஜிபி திரிபாதி அறிவிப்பு!

செய்தியாளர்களுக்கு இ பதிவு கட்டாயம் இல்லை என்று தமிழக டிஜிபி திரிபாரி அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

செய்தியாளர்களுக்கு இ பதிவு அவசியமில்லை: டிஜிபி திரிபாதி அறிவிப்பு!
X

டி.ஜி,பி. திரிபாதி

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை இரு வாரங்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அப்போதும் கொரோனா பாதிப்பு குறையாததால் ஊரடங்கு சற்று கடுமையாக்கப்பட்டது.

அத்தியாவசிய கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும். மாவட்டத்திற்கு உள்ளேயே ஒரு காவல் சரகத்தைவிட்டு மற்றொரு காவல் சரகம் சென்றாலும் இ பதிவு கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது.

இதன்படி செய்தியாளர்கள், மருத்துவர்கள், முன் களப்பணியாளர்கள் வாகனங்களில் சென்றாலும் இ பதிவு கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக புகார்கள் எழுந்தன.

இதுதொடர்பாக டிஜிபி திரிபாதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் செய்தியாளர்கள், அவர்களுடைய அலுவலக அடையாள அட்டை, தமிழக அரசின் அட்டை, பிளஸ் கிளப் அடையாள அட்டை இவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி மாநிலம் முழுவதும் பயணம் செய்யலாம். இ பதிவு தேவையில்லை என்று குறிப்பிட்டார்.

Updated On: 21 May 2021 3:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  3. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  5. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  6. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  7. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!