விருதுநகர் மருத்துவமனையில் எம்.எல்.ஏ சீனிவாசன் ஆய்வு

விருதுநகர் மருத்துவமனையில் எம்.எல்.ஏ  சீனிவாசன்  ஆய்வு
X

விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்யும் எம்.எல்.ஏ.சீனிவாசன்.

விருதுநகர் மருத்துவமனைக்கு சென்ற எம்.எல்.ஏ சீனிவாசன் அங்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் வழங்கப்படும் உணவு குறித்து ஆய்வு செய்தார்.

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு தரமனதாக உள்ளதா என்பது குறித்து சீனிவாசன் MLAஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனோ பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் எ.ஆர். சீனிவாசன் MLA ஆய்வு மேற்கொணடார். மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனோ நோயாளிகளுக்கு வழங்கப்படும்உணவு தரமானதாக உள்ளதா என்பது குறித்து சமையல் நடைபெறும் இடத்தில் ஆய்வு நடத்திய அவர் நோயாளிகளுக்கு தரமான உணவை வழங்க வேண்டும் என உணவு தயாரிக்கும் ஊழியர்களிடம் அறிவுறுத்தினார். மேலும் ஆக்சிஜன் கையிருப்பு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!