பேஸ்புக்கில் பழகிய பெண்ணிடம் 2.5 லட்சம் நகை மோசடி செய்தவர் கைது

பேஸ்புக்கில் பழகிய பெண்ணிடம் 2.5 லட்சம் நகை மோசடி செய்தவர் கைது
X
திருநெல்வேலி மாவட்டத்தில் பேஸ்புக்கில் நண்பராக பழகிய பெண்ணிடம் ரூ.2.5 லட்சம் நகை மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் பேஸ்புக்கில் நண்பராக பழகி பெண்ணிடம் ரூ.2.5 லட்சம் நகை மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

கல்லிடைக்குறிச்சி கீழ ஏர்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த பவானி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் அம்பை அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் வாட்ஸ்அப் மூலம் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் தென்காசியை சேர்ந்த சங்கரலிங்கம் என்பவருடன் நட்பாக பழகி உள்ளார்.

இவர் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வருவதற்காக அப்பெண்ணிடம் பணம் கேட்டுள்ளார். அப்பெண் அவரது பேஸ்புக் நண்பரான தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியை சேர்ந்த ரெங்கராஜன் (29) என்பவரிடம் பணம் கேட்டுள்ளார். தன்னிடம் பணம் இல்லை என கூறிய ரெங்கராஜன், நகை தந்தால், அதை அடகு வைத்து தருவதாக கூறியுள்ளார். அந்த பெண்ணும் அவரை நம்பி சுமார் 8 சவரன் நகையை கொடுத்துள்ளார். ஆனால், ரெங்கராஜன் அந்த நகைகளை அடகு வைக்காமல் விற்று மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

கடந்த மாதம் அந்த பெண் நகையை திருப்பி கேட்ட போது ரெங்கராஜன் பணம் இல்லை என கூறியதுடன், பணத்தை கேட்டால் அந்த பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைதளங்களில் வெளியிடுவதாக பெண்ணை மிரட்டியுள்ளார். இது குறித்து அப்பெண் கல்லிடை போலீசில் புகார் அளித்ததன் அடிப்படையில் புகாரை பெற்று விசாரணை மேற்கொண்ட இன்ஸ்பெக்டர் அருள் ஜார்ஜ் சகாய சாந்தி மோசடி செய்து ஏமாற்றிய ரெங்கராஜை கைது செய்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!