Yematram Quotes in Tamil-போலியான மனிதர் மத்தியில் ஏமாற்றம் எளிதானது..! ஜாக்கிரதை..!

Yematram Quotes in Tamil-போலியான  மனிதர் மத்தியில் ஏமாற்றம் எளிதானது..! ஜாக்கிரதை..!
X

yematram quotes in tamil-ஏமாற்ற வாழ்க்கை (கோப்பு படம்)

ஏமாற்றம் என்பது எங்கிருந்து தொடங்குகிறது? நாம் ஏமாற்றப்படும்போது அல்ல. நம்மை ஏமாற்றியர்களின் சிதைந்துபோன நம்பிக்கைகள் வெளிப்படும்போது.

Yematram Quotes in Tamil

உறவுகளின் ஏமாற்றம் என்பது சொந்தங்களாக இருக்கலாம், காதல் உறவுகளாக இருக்கலாம், நண்பர்களாக இருக்கலாம். பழகிய உறவுகள் ஏமாற்றும்போது வலி ஏற்படுகிறது. ஏமாந்துவிட்டோம் என்பதைவிட நம்மை ஏமாற்றியவர்கள் மீதான நம்பிக்கை நொறுங்கிப்போனது வலியின் வேதனைகளை உச்சநிலைக்கு கொண்டு செல்லும். இந்த உலகில் நாம் பழகும் பல உறவுகள் போலியானவர்கள் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

Yematram Quotes in Tamil

ஏமாற்றி பிழைப்பது

புத்திசாலித்தனம் ஆகிவிட்டதால்

நேர்மையாக வாழ்பவன்

பிழைக்கத் தெரியாதவன் ஆகிவிட்டான்.

ஏமாளியாக இருப்பது

அவமானம் இல்லை

ஏமாற்றப்பட்டாலும்

பிறரை ஏமாற்றாமல்

இருப்பதே நமக்கு பெருமை!


ஏமாற்றம் என்பது

வேறு ஒன்றுமில்லை

இனி அடுத்தவரிடம்

எச்சரிக்கையாய் பழக

ஓர் அலாரம்!

கத்தியால் குத்தினால் கூட

ஒரு நிமிடம் தான் வலி!

ஆனால் அன்பை காட்டி

ஏமாற்றினால் ஒவ்வொரு

நிமிடமும் "வலி" தான்.

ஏமாற்றியவர்களுக்கு நன்றி

அவர்கள் ஏமாற்றத்தை

சொல்லி தரவில்லை!

இனி ஏமாறாமல் இருக்க

அனுபவத்தை தந்து இருக்கிறார்கள்.

Yematram Quotes in Tamil

எவரிடமும் எதையும் எதிர்பார்க்காதே!

ஏனென்றால் எதிர்பார்பதால் மட்டுமே

நாம் ஏமாற்றத்திற்கு ஆளாகிறோம்.

இன்று நீ எனக்கு செய்த

துரோகத்தின் வலி

நாளை நீ நம்பிய ஒருவர்

உன்னை ஏமாற்றும் போது

அதன் வலி உனக்கு புரியும்!

நீ வருவாய் என்று

காத்திருந்த எனக்கு

நீ தந்த பரிசு ஏமாற்றமே!

உயிருடன் வாழும் போதே

மரணத்தை பார்த்தவர்கள்

அளவுக்கு மீறிய அன்பு

வைத்து ஏமாற்றம்

அடைந்தவர்கள்.

எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்

உடன் பிறப்புகள்!

ஒன்றை தொடர்ந்தே

இன்னொன்று பயணிக்கும்!


ஏமாற்றங்களை நேசிக்கிறேன்

அது மட்டுமே என்னை ஏமாற்றாமல்

தினம் தினம் ஏமாற்றுகிறது.

Yematram Quotes in Tamil

ஏமாந்து போவதற்கு

முட்டாளாக இருக்க வேண்டும்

என்று அவசியம் இல்லை.

அன்புக்கு ஏங்கும் மனம்

கொண்டவர்களாக

இருந்தாலே போதும்.

ஏமாற்றமே வாழ்க்கை

என வாழ்ந்தவன்!

எப்போது விடிவு கிடைக்கும்

என்று தெரியாமல் ஏமாறுகிறேன்.

எவ்வளவு தான் கதறி

அழுதாலும் அன்பால்

ஏமாற்றப்பட்ட வலிகள்

மட்டும் குறைவதே இல்லை.

ஏமாந்து போவதற்கு

முட்டாளாக இருக்க வேண்டும்

என்று அவசியம் இல்லை.

அன்புக்கு ஏங்கும் மனம்

கொண்டவர்களாக

இருந்தாலே போதும்.

ஏமாற்றமே வாழ்க்கை

என வாழ்ந்தவன்!

எப்போது விடிவு கிடைக்கும்

என்று தெரியாமல் ஏமாறுகிறேன்.

Yematram Quotes in Tamil

எவ்வளவு தான் கதறி

அழுதாலும் அன்பால்

ஏமாற்றப்பட்ட வலிகள்

மட்டும் குறைவதே இல்லை.

ஒரு போலியான உறவு என்பது

மாறு வேடத்திலுள்ள எதிரி.


கடவுள் உங்களுக்கு ஒரு அழகான

முகத்தை கொடுத்திருக்கிறார் நீங்கள்

ஏன் இன்னொரு முகத்தை

உண்டாக்குகிறீர்கள்.

போலி உறவுகளுக்கு நீங்கள்

பிளாஸ்டிக் போல.. பயன்படுத்தி

முடித்தால் குப்பைத் தொட்டியில்

வீசி விடுவார்கள்.

வார்த்தைகளால் வர்ணம் பூசி

அலங்கரித்து போலி அன்பு காட்டும்

சில உறவுகளும் உண்டு.

உரிமையோடு உண்மை அன்பு

காட்டும் சில உறவுகளும் உண்டு.

இருக்கும் போது புரிந்து கொண்டு

அன்பு காட்டாத எந்த உறவும் இறந்த

பின் அழுது நடிப்பதில் எந்த

பயனும் இல்லை.

பணம் உலகத்தையும் பல

உறவுகளையும் திரும்ப

பார்க்க வைக்கின்றது. (உறவுகளின் ஏமாற்றம் கவிதை)

வாழ்நாள் முழுவதும்

மகிழ்ச்சியாக இருக்க

வேண்டுமானால் எந்த உறவிடம்

இருந்தும் எதையும்

எதிர் பார்க்காதீர்கள்.

Yematram Quotes in Tamil

போலி மனிதர்கள் தங்களைப்

பற்றி மட்டும் தான் அக்கறை

காட்டுகிறார்கள் எனவே

கவனமாக இருங்கள்.


போலி உறவுகள்

பெரும்பாலும் பேசுவதை

எல்லாம் செய்வதில்லை.

Tags

Next Story