வாங்கும் பொருளில் கலப்படம் கண்டுபிடிக்கிறது எப்படி? பார்க்கலாம் வாங்க..!
World Food Safety Day 2024 in Tamil, World Food Safety Day in Tamil,Food Adulteration, Food Adulteration Act in Tamil
பாதுகாப்பான உணவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாதுகாப்பான உணவு கிடைப்பதில் உலகளாவிய தேவையை வலியுறுத்தவும் ஆண்டுதோறும் உலக உணவுப் பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
World Food Safety Day 2024 in Tamil
சர்வதேச தினமாக அனுசரிக்கப்படும் இந்த உணவு பாதுகாப்பு தினம் உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO) ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு முயற்சியின் விளைவால் அனுசரிக்கப்பட்டது வருகிறது.
உலக உணவு பாதுகாப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 7ம் தேதி அனுசரிக்கப்பட்டது வருகிறது. இன்று உலக உணவு பாதுகாப்பு தினம். ஒவ்வொரு மனிதனுக்கும் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதி செய்யும் நாளாகும். கலப்பட உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதோடு உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தலாம்.
World Food Safety Day 2024 in Tamil
உணவாககலப்படம் செய்பவருக்கு வழங்கும் தண்டனை
பணத்துக்கு ஆசைப்பட்டு சில வணிகர்கள் செய்யும் இந்த மோசடிக்கு அரசு கடுமையான சட்டங்கள் வைத்திருந்தாலும் இன்னும் திருந்தியபாடில்லை. கலப்படம் செய்பவர்களை கண்டறிந்தால் சட்ட ரீதியான தண்டனையுடன், அவர்கள் கலப்படம் செய்த உணவுப்பொருளை ஒரு மாத காலத்திற்கு அவர்களுக்கு உணவாகக் கொடுக்கவேண்டும். அப்பபோதுதான் கலப்படம் என்பது எவ்வளவு பெரிய கொடூரம்என்பது அவர்களுக்குத் தெரிய வரும்.
உலக உணவு பாதுகாப்பு தினம் 2024ல் கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதை நாம் தெரிந்துகொள்வோம்.
கலப்பட உணவுகளை உட்கொள்வது என்பது லேசானது முதல் மிக மோசமான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். உலக உணவுப் பாதுகாப்பு தினத்தில், கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை நாம் எப்படிக் கண்டுபிடிப்பது என்பதை பார்க்கலாம் வாங்க.
World Food Safety Day 2024 in Tamil
ஒரு உணவுப் பொருளின் தரம் மாறுபடும்போது அந்த உணவின் தரம் குறைகிறது. அபப்டி எனில் அந்த உணவுப்பொருளுடன் வேறு கலப்படப்பொருள் சேர்க்கப்பட்டுள்ளது என்பதை நாம் உணரவேண்டும். ஒரு உணவுப்பொருள் விற்பனையில் அதிக லாபம் கிடைக்கவேண்டும் என்று எண்ணும் வணிகர்கள் அதனுடன் வேறு ஒரு இணைப்பொருளை அந்த உணவுப்பொருளுடன் சேர்ப்பது கலப்படம் ஆகும்.
அந்த கலப்படத்தில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன அல்லது உயர்தர பொருட்கள் மலிவான மாற்றுகளுடன் புதிய பொருளாக தரம் குறைந்த உணவுப்பொருளாக மாற்றப்படுகின்றன. இந்த கலப்படங்களை உட்கொள்ளும் போது நோய்கள் உண்டாகின்றன.
மசாலா அல்லது பால் எதுவாக இருந்தாலும், கிட்டத்தட்ட எல்லா உணவுப் பொருட்களிலும் கலப்படம் செய்யப்படுகின்றன. ஒரு உற்பத்தியாளர் பாலை விட அதிக தண்ணீரை கலந்தால் , பால் பொருட்களில் கலப்படம் என்று சொல்லலாம். கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பொருட்களைக் கண்டறிய பல வழிகள் உள்ளன.
World Food Safety Day 2024 in Tamil
ஜூன் 7ஆம் தேதி அன்று கடைபிடிக்கப்படும் உலக உணவுப் பாதுகாப்பு தினத்தில், கலப்பட உணவுகளை எவ்வாறு கண்டறிவது என்பதை நாம் அறிந்து வைத்திருக்கவேண்டும்.
உணவு கலப்படம் என்றால் என்ன?
உணவுக் கலப்படம் என்பது, தரம் குறைந்த பொருட்களைச் சேர்ப்பது அல்லது உணவை உட்கொள்வதற்கு தீங்கு விளைவிக்கும் முக்கிய கூறுகளை கலப்பது ஆகும். இவ்வாறான கலப்படம் உணவின் தரத்தைக் குறைக்கும். மேலும் அந்த கலப்பட உணவை உண்பவர்களுக்கு உடல்நலக்கோளாறுகள் ஏற்படலாம்.
உணவு கலப்படம் எபப்டியெல்லாம் செய்யப்படுகின்றன என்பதற்கான குறிப்புகள் தரப்பப்ட்டுள்ளன :-
பாலில் தண்ணீர் சேர்ப்பது, வெண்ணெயில் மாவுப் பொருட்களை கலப்பது அல்லது தோற்றத்தை மெருகேற்ற செயற்கை நிறப்பொருட்களை சேர்ப்பது போன்ற தீங்கு விளைவிக்கும் அல்லது உணவு அல்லாத பொருட்களை உணவுப் பொருட்களில் சேர்ப்பது.
World Food Safety Day 2024 in Tamil
தரம் குறைந்த அல்லது நன்கு விளையாத தானியங்களை உயர்தரமான தானியங்களுடன் கலந்து உயர்தர பொருட்களை மலிவான பொருளாக மாற்றுதல்.
எடையை அதிகரிப்பதற்காக வேண்டுமென்றே மாவில் சுண்ணாம்புத் தூள் அல்லது பருப்புகளில் மணல் மற்றும் கற்கள் போன்ற அசுத்தங்களை சேர்ப்பது போன்ற செயல்களை செய்வது.
World Food Safety Day 2024 in Tamil
உணவு கலப்படமும் ஆரோக்கியமும்
உணவில் கலப்படம் செய்வதால் அந்த உணவுப்பொருளை உண்பவர்களுக்கு உடல்நலக்கோளாறுகளை ஏற்படுத்துகிறது. இது சிறிய உடல்நலப் பிரச்சினைகளாகத் தொடங்கி கடுமையான நோய்கள் ஏற்படுத்துவதாகவும் இருக்கலாம். இதன்மூலமாக வயிற்றுப்போக்கு, இருதய நோய், ஒவ்வாமை எதிர்வினை, குமட்டல் மற்றும் நீரிழிவு ஆகியவை கலப்பட உணவுகளை உட்கொள்பவர்களுக்கு ஏற்படும் நோய்கள் ஆகும்.
இந்த கலப்பட உணவுகளை உண்பதன் மூலம் உணவு விஷம் (Food Poison)மற்றும் இரைப்பை மற்றும் குடலில் கோளாறுகளை உருவாக்கலாம். உணவில் இருந்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை நீக்கம் செய்வது அல்லது ஊட்டச்சத்து இல்லாத பொருட்களுடன் அவற்றை கலப்பது போன்ற செயல்பாடுகளால் உணவில் ஊட்டச் சத்து குறைபாடு ஏற்படுகிறது. இதனால் அந்த உணவை உண்பவர்களுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்காமல் போகும் நிலை உருவாகும்.
கடைகளில் இருந்து நாம் வாங்கி வரும் பொருட்கள் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை நாம் கண்டுபிடிக்க முடியும். அப்படி கண்டுபிடிப்பதற்கான வழிமுறைகள் கீழே தரப்பட்டுள்ளது.
World Food Safety Day 2024 in Tamil
கலப்பட உணவுப் பொருட்களைக் கண்டறிய சில எளிய முறைகள்:
1. பால்
பளபளப்பான மேற்பரப்பில் ஒரு துளி பாலை வையுங்கள். அது ஒரு இடத்தில் நிற்காமல் கீழே பாய்ந்தால், நாம் வாங்கும் பாலில் தண்ணீர் கலக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம். பாலை நன்றாக குலுக்குங்கள். அப்படி குளிக்கும்போது அடர்த்தியான நுரை உருவானால் அதில் சோப்பு கலக்கப்பட்டிருக்கலாம்.
2. தேன்
தேன் கலப்படம் இல்லாததா என்று அதன் தூய்மையை சோதிக்க எளிய வழி உள்ளது. ஒரு கிளாஸ் தண்ணீரில் சில துளிகள் தேனை விடுங்கள். தூய தேன் என்றால் அந்த தேன் துளி அப்படியே கிளாஸின் அடியில் சென்று படியும். அதேபோல சர்க்கரைப் பாகு அல்லது பிற கலப்படப் பொருள் இருந்தால் நாம்விட்ட தேன்துளி தேன் தண்ணீரில் கரைந்துவிடும்.
World Food Safety Day 2024 in Tamil
3. மஞ்சள் மற்றும் மிளகாய் தூள்
ஒரு டம்ளரில் லேசாக வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு தேக்கரண்டி அளவு மஞ்சள் தூளை அந்த தண்ணீரில் போடுங்கள். அதை நன்றாக கரண்டியால் கலக்குங்கள். தூய மஞ்சள் தண்ணீரின் அடியில் படியும். தண்ணீர் தெளிவாக இல்லாமல் நிறம் மாறினால் மஞ்சளில் கலப்படம் செய்யப்பட்டுள்ளது என்பது பொருள்.
அதேபோலவே மிளகாய்ப் பொடியை நாம் ஏற்கனவே கூறியபடி வெதுவெதுப்பான தண்ணீரில் போட்டு கலக்கினால் செயற்கை நிறம் சிவப்பு நிற கோடுகளை உருவாக்கும். தூய்மையான மிளகாய்த்தூள் தண்ணீரின் அடியில் படிந்துவிடும்.
World Food Safety Day 2024 in Tamil
4. டீத் தூள் மற்றும் காபித் தூள்
ஈரமான பிளாட்டிங் பேப்பரில் சிறிதளவு தேயிலைத் தூளை பரவலாக வையுங்கள். அந்த பிளாட்டிங் பேப்பரில் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறம் ஏற்பட்டால் அது செயற்கை நிறமேற்றப்பட்ட தேயிலைத்தூள் என்பதை கண்டுபிடிக்கலாம். அதேபோலவே சிறிதளவு தண்ணீரில் காபித் தூள் சிறிதளவு போடுங்கள். தூய்மையான காபித்தூள் தண்ணீரில் மிதக்கும். கலப்படம் செய்யப்பட காபி நீரின் அடியில் படியும்.
5. காய்கறிகள்
காய்கறிகளின் மேற்பரப்பை, குறிப்பாக பச்சை இலைகளை, தண்ணீர் அல்லது தாவர எண்ணெயில் ஊறவைத்த பஞ்சினை உருட்டி அந்த பஞ்சு உருண்டையால் பச்சை காய்கறியில் இலைமீது தேய்த்துப்பாருங்கள். பஞ்சு நிறம் மாறினால், அதில் செயற்கைச் சாயங்கள் கலந்திருப்பதை நாம் கண்டுபிடிக்கலாம்.
6. பழங்கள்
வாழைப்பழங்களில் எவ்வாறு கலப்படம் கண்டறிவது என்பதை பார்ப்போமா..? வாழைப்பழத்தில் சில துளிகள் தண்ணீர் சேர்க்கவும். தண்ணீர் ஊற்றப்பட்ட இடத்தில் அது பழுப்பு நிறமாக மாறினால், அது கால்சியம் கார்பைடு போன்ற செயற்கை ரசாயனம் கொண்டு பழுக்க வைக்கப்பட்டப் பழங்கள் என்பதை கண்டுபிடித்துவிடலாம். இதேபோலவே மாம்பழம் பழுப்பதையும் கண்டுபிடிக்கலாம்.
மாம்பழ சீசனில் அவசர வணிகர்கள் கார்பைட் கற்களை பயன்படுத்தி பழுக்க வைப்பார்கள். அதை மேற்சொன்ன முறைமூலமாக கண்டுபிடித்து விடலாம்.
ஆப்பிளில் மேற்புறத்தில் பளபளப்புக்காக மெழுகு பூசப்பட்டிருக்கும். அதை அப்படியே உண்பதால் உடலுக்கு தீங்கு ஏற்படும். ஆப்பிளில் மெழுகு பூசப்பட்டு இருப்பதை கண்டறிய கத்தியை ஆப்பிள் தோல் மீது வைத்து சீவுவதுபோல தேய்த்தால் மெழுகு கத்தியில் பௌடர்போல கொட்டும்.
World Food Safety Day 2024 in Tamil
7. கோதுமை
ஒரு தேக்கரண்டி அளவு கோதுமை மாவை தண்ணீரில் நன்றாக கரைத்துவிடுங்கள். கோதுமை மாவில் கலப்படம் இருந்தால் தண்ணீர் பழுப்பு நிறமாக மாறிவிடும். மாவு தூய்மையானது என்றால் தண்ணீரின் அதில் சென்று படிந்துவிடும்.
8. இறைச்சி
நாம் வாங்கும் இறைச்சி கோழி அல்லது ஆடு எதுவாகவும் இருக்கலாம். வாங்கும் இறைச்சியை விரல் வைத்து அழுத்துங்கள். அது மிகவும் கெட்டியாக அல்லது ரப்பர்போன்று இருந்தால் அதில் கலப்படங்கள் இருக்கலாம். மேலும், தூய இறைச்சியானது பிரகாசமான சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கவேண்டும். அது இயற்கை நிறமாக இருக்கவேண்டும். நிறத் திட்டுகள் இருந்தால் அவை உணவுக் கலப்படத்தின் அறிகுறிகளாகும்.
9. எண்ணெய் மற்றும் கொழுப்பு
தேங்காய் எண்ணெயை சிறிதளவு குளிர வைக்கவும். சுத்தமான தேங்காய் எண்ணெய் கெட்டியாகிவிடும்.அதாவது உறைந்துவிடும். அதே நேரத்தில் கலப்படத் தேங்காய் எண்ணெய் திரவமாகவே இருக்கும். மற்ற எண்ணெய்களில் கலப்படம் கண்டுபிடிக்க உங்கள் உள்ளங்கையில் சில துளிகள் எண்ணெயை ஊற்றி தேய்த்துப்பாருங்கள். தூய எண்ணெய் கை முழுவதும் பிறவி விரைவாக உறிஞ்சப்பட்டுவிடும்.
World Food Safety Day 2024 in Tamil
10. வெண்ணெய்(பட்டர்)
ஒரு கரண்டியில் ஒரு சிறிய அளவு வெண்ணெயை உருக்குங்கள். தூய வெண்ணெய் விரைவாக உருகி பழுப்பு நிறமாக மாறிவிடும். அதேசமயம் கலப்பட வெண்ணெய் உருகுவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். மேலும் வெள்ளை எச்சத்தையும் விட்டுவைக்கும்.
இவ்வாறு நாம் வீட்டுக்கு வாங்கிவரும் பொருட்களில் கலப்படம் உள்ளதா என்பதிற் கண்டுபிடிக்கும் இந்த வீட்டுச் சோதனைகள் மிகவும் எளிமையானவை ஆகும். மேலும் உணவுப் பொருட்களில் உள்ள பொதுவான கலப்படங்களைக் கண்டறிய உதவுகிறது. மேலும், சான்றளிக்கப்பட்ட நிறுவனங்களின் உணவுப் பொருட்களை வாங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
World Food Safety Day 2024 in Tamil
சட்டம் என்ன சொல்லுது ?
உணவுக் கலப்படம் தடுப்புச் சட்டம், 1954, பிரிவு 37 உணவு கலப்படம் குறித்து விரிவாக வரையறுக்கிறது. 1976ம் ஆண்டுச் சட்டம் 34 இன்படி, எஸ். 8, பிரிவுக்கு (c) (w.e.f. 1-4-1976). (சுகாதாரம்) அத்தகைய உணவுக் கலப்பட பொருட்கள் மனித நுகர்வுக்குத் தகுதியற்றதாக மிகவும் மோசமடைந்துவிட்டதாக உணவுப்பாதுகாப்பு ஆணையம் உறுதிப்படுத்தியுளளது. மேற்படி ஆணையம், விற்பனையாளருக்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்த பிறகு, அதை அழிக்கச் செய்யலாம்.
மேலும் தொடர்ந்து இந்த குற்றங்கள் உறுதி செய்யப்பட்டால் மேல்நடவடிக்கையும் எடுக்கலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu