Womens Motivational Quotes in Tamil-பெண்ணில்லாத உலகம் கண்ணில்லாத முகம் போன்றது..!
Womens Motivational Quotes in Tamil
பெண்கள் தான் இந்த உலகின் விதைகள். படைப்பின் ஊற்றுக்கண். உயிரைக் கொடுத்து, அதைச் செதுக்கி வளர்க்கும் திறன் படைத்தவர்கள். குடும்பம் எனும் தேரை உருட்டிச் செல்லும் அச்சாணி அவர்கள். கணவனின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் அமைச்சர்கள். குழந்தைகளுக்கு கற்றுத்தரும் முதல் ஆசான்கள். வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் வழிகாட்டும் விளக்குகள். பெற்றோர்களின் முதுமையில் ஆதரவாக நிற்கும் மூன்றாவது கால். இந்த உலகின் மென்மையின் மொத்த உருவம் அவர்கள்தான்.
Womens Motivational Quotes in Tamil
மனதை உறுத்தும் வகையில், வரலாற்றில் பெண்களின் குரல்கள் பெரும்பாலும் ஓங்கி ஒலித்ததில்லை. ஆனால் இன்றைய பெண் உலகையே அசைத்துப் பார்க்கிறாள். சாதிக்கிறாள். ஆகவே, பெண்களுக்கான வலிமையான தமிழ் மேற்கோள்களை இந்தக் கட்டுரையில் தொகுத்துள்ளோம். இந்த வார்த்தைகள் உங்கள் உள்ளத்தில் நெருப்பை மூட்டி உத்வேகத்தை ஊட்டட்டும்!
பிரத்யேகமாக உங்களுக்காக...பெண்ணின் வலிமையை பறைசாற்றும் 25 தமிழ் மேற்கோள்கள்:
"பெண்கள் மெழுகுவர்த்திகள் போல; அவை தங்களை எரித்து மற்றவர்களுக்கு ஒளி கொடுக்கின்றன."
"யாரிடம் ஒரு பெண் இருக்கிறாளோ, அவனிடம் நல்ல அதிர்ஷ்டம் நிச்சயம்!."
"ஒரு பெண்ணின் உள்ளத்தில் பச்சாதாபமும், கண்களில் தைரியமும் இருந்தால், அவளை வெல்வது சாத்தியமே இல்லை."
Womens Motivational Quotes in Tamil
"பெண் சிரித்தால் இல்லம் சிறக்கும்."
"வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு, ஆனால் வல்லவனை வளர்த்தவள் அவள் மட்டுமே!"
"பெண்கள் குட்டி தேவதைகள் - கவனமாகக் கையாளுங்கள்."
"ஒரு ஆணை வல்லவனாக்குவது ஒரு பெண்ணின் அன்பு."
Womens Motivational Quotes in Tamil
"பெண்ணுக்குப் பின்னால் நிற்கும் ஆண் நாகரிகம் படைத்தவன்."
"தினமும் தன்னை மெழுகாய் உருக்கி குடும்பத்தை வெளிச்சமாக்கும் வடிவமே பெண்."
"பெண்களை போற்றுங்கள். இன்று ஒருவரைப் போற்றுவது அவளைப் போன்ற பலரை உருவாக்கும்."
"பெண்ணால் நிம்மதி இழக்கவும் முடியும்; நிம்மதி தரவும் முடியும்."
Womens Motivational Quotes in Tamil
"ஆக்கவும் அழிக்கவும் பெண்களால் மட்டுமே முடியும்."
"இல்லம் என்பது அன்பு இருக்கும் இடம். அன்பு என்பது பெண் இருக்கும் இடம்."
"கவிதைக்கு எழுத்து தேவை; ஒரு பெண்ணின் அழகுக்கு நகை தேவை; வெற்றிக்கு உழைப்பு தேவை; ஆனால் ஆணின் வாழ்க்கை முழுமைக்கு ஒரு பெண் தேவை. "
"பெண்கள் சிப்பிகள், துன்பங்களை மணிகளாக்கி வாழ்க்கையை அழகாக்குபவர்கள்."
Womens Motivational Quotes in Tamil
"பெண்களே, நீங்கள் பலவீனமானவர்கள் என்று உங்களை நம்ப வைக்க யாரையும் அனுமதிக்காதீர்கள்."
"கடலை விட ஆழமானவர்கள் பெண்கள்."
"விளக்கின் சுடர் அணைந்திடலாம். பெண்ணின் சுடர் என்றும் அணைந்திடாது!"
"தடைகளை அழகாக தகர்த்தெறிந்து சாதனை படைப்பதுதான் பெண்மைக்கும் அழகு!"
Womens Motivational Quotes in Tamil
"கனவுகளுடன் காத்திருக்காமல், இறக்கை விரித்து பறக்க பிறந்தவர்கள் பெண்கள்."
"பெண் என்பவள் பூ போன்றவள். உணர்வுகளுக்கு மதிப்பளித்தால் மனம் மணப்பாள்."
"பெண் சாதாரண பிறவி அல்ல, சாதிக்கப் பிறந்த சரித்திரம்!"
"கண்ணீரை ஆயுதமாக்கி வெற்றி காண்பவள் பெண்!"
Womens Motivational Quotes in Tamil
"கணவனுக்கு நிழலாக, குழந்தைகளுக்கு குடையாக பெண் வாழ்வது கவிதை!"
"உலகை ஆள பிறந்தவள் பெண்!"
பெண்களே... வானமே உங்கள் எல்லை!
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu