Wife Quotes In Tamil-தன்னை தொலைத்து கணவனில் தேடுபவள், மனைவி..!

Wife Quotes In Tamil-தன்னை தொலைத்து கணவனில் தேடுபவள், மனைவி..!
X

Wife Quotes In Tamil-மனைவி மேற்கோள்கள் (கோப்பு படம்)

மனைவி என்பவள் மனையை உருவாக்குபவள். மனை என்பது வெறும் வீடு மட்டுமல்ல. அதை கட்டமைக்கும் அந்த ஆளுமை மனைவியிடம் மட்டுமே உள்ளது.

Wife Quotes In Tamil

காதல் என்பது இரு உள்ளங்களுக்கும் வரும் ஒரு உயிர் பரிமாற்றம்.காதல் என்பது ஒரு வகையான உணர்வு. வாழ்க்கைக்குத் தேவையான ஒன்று. ஆனால் அது எந்த வயதில் வரவேண்டும் என்பது முக்கியம். முதிர்ச்சியான காதல் மட்டுமே நிலைத்து நிற்கும்.

இளமையில் வரும் காதல் ஒருவகை இனக்கவர்ச்சி. அது நிலையானது அல்ல. பருவ வயதில் ஏற்படும் சுரப்பிகளின் பரிமாற்றங்களால் ஏற்படும் தற்காலிக மனநிலை. அவ்வளவே.


Wife Quotes In Tamil

ஒருவர் மீது மற்றொருவரின் நம்பிக்கை என்பது காதல். உங்கள் துணையை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. அவர் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளீர்கள் என்பதே காதலின் அளவுகோலாகிறது. நம்பிக்கை இல்லையென்றால் அங்கு காதலும் இல்லை. அனைத்தும் வீண் தான். ஆரோக்யமான உறவுக்கு நம்பிக்கை முக்கியமானது.

நம்பிக்கை என்பது துரோகத்துடன் தொடர்புடையது அல்ல. உறவில் மிக முக்கியமான காரணிகளில் ஒன்று நம்பிக்கை. உங்கள் துணையை நீங்கள் நம்பவில்லை என்றால், அது ஒரு ஆரோக்யமான நிலையான உறவு அல்ல. இருவருக்குள் முதலில் சிக்கல் இருந்தாலும் காலப்போக்கில் அவர்களுக்குள் நம்பிக்கை வலுவாக வளர்கிறது.


Wife Quotes In Tamil

உறவுகளுக்குள் ஏற்படும் நேர்மையிலும் காதல் உள்ளது. உறவுகள் என்று வரும்போது உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பது முக்கியம். தவறான நம்பிக்கையையும், பொய்களையும் கொண்டு கட்டியெழுப்பப்பட்ட ஒரு உறவு, சிதைந்து விழுந்துவிடும். நேர்மையாக இருப்பது நீண்ட கால நிம்மதிக்கு வழிவகுக்கிறது. இது உறவின் பல அம்சங்களை பலப்படுத்தும். உண்மையான அன்பை விட நீண்ட கால உறவை நீங்கள் தேடும்போது அங்கு நேர்மை மிக முக்கியத்துவம் பெறுகிறது.

ஒருவருக்கொருவரை உண்மையாக நேசித்தலில் காதல் உள்ளது.உங்களிடம் ஒருபோதும் அன்புகாட்டாத குடும்ப உறுப்பினரைக்கூட அனுசரித்து நடந்துகொள்வீர்கள். ஏனெனில் அவர்கள் உங்கள் குடும்பத்தில் ஒரு அங்கம். அதுபோலவே உங்கள் துணையையும் நேசிக்கவேண்டும். அவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டவும் நல்லதைப் பாராட்டவும் வேண்டும்.


விட்டுக்கொடுத்தல் காதலில் அவசியமானது. விட்டுக்கொடுத்தல் விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. ஒருவர் விட்டுக்கொடுப்பதால் அங்கு அன்பின் அகன்ற கதவுகள் திறக்கப்பட்டுவிடுகின்றன. அதுதான் காதல். அதுதான் கணவன்-மனைவி.

Wife Quotes In Tamil

இதோ உங்களுக்காக மனைவி மேற்கோள்கள். நீங்களும் படித்து உங்கள் மனைவியோடு சிறப்பாக வாழுங்கள்.

மனைவி என்பவள் இளமையின் தோழி. முதிர்ந்த காலத்தின் மூன்றாம் கால்.

வறுமையில் கணவனை நேசிக்கும் பெண்ணும், முதுமையில் மனைவியை நேசிக்கும் ஆணும் தான் உலகின் ஆகச் சிறந்த காதலர்கள்.

கோபப்படுவது நீயாக இருந்தபோதும் கூட உன்னிடம் தோற்பதும் எனக்கு சுகமே. ஆதலால் உன் கோபத்தை எதிர்நோக்கி இருக்கிறேன்.

முகம் பார்த்து வந்த அன்பு முறிந்து விடும். பணம் பார்த்து வந்த அன்பு பாதியில் போய்விடும். உள்ளம் பார்த்து வந்த அன்பு கடைசி நொடி வரை நிலைத்திருக்கும்.


Wife Quotes In Tamil

சொல்ல துடிக்கும் இதழுக்கும் சொல்லாமல் தவிக்கும் இதயத்திற்கும் இடைப்பட்ட வார்த்தைகளற்ற மொழிகளே,காதல்.

பதறாத மனமும் சிதறுதே, வசந்த காலத்தில் பறந்து வரும் பைங்கிளியைக் கண்டு. உதிராத பூக்களும் உதிருதே அவள் அழகைக்கண்டு மயங்கியே.

இன்னல்கள் கூட எனக்கு இ்னிமையாகிறது என் இனியவள் இனிப்பாகப் பேசி சிரிக்கும்போதினிலே.

எதிர்பார்ப்பது மட்டுமல்ல எதிர்பார்க்க வைப்பதும் காதலில் மட்டுமே கிடைக்கும் சுவாரஸ்யம்.


Wife Quotes In Tamil

அழிக்க நினைத்தாலும் அழிக்க முடிவதில்லை சிலரைப் பற்றிய சிறு சிறு நினைவுகளைக் கூட. கரும்பாறையில் எழுதிவைத்த அழிக்கமுடியாத வார்த்தைகளாகிவிட்டன, அவைகள்.

தவறே செய்யாத தருணங்களிலும் மன்னிப்பு கேட்பவர்கள், உறவு நிலைக்க வேண்டும் என்பதில் அதிக அக்கறை கொண்டவர்கள் என்பது பொருளாகும்.

கண்ணீர் சிந்த வைக்காத காதல் இல்லை. கண்ணீர் சிந்த வைக்கவில்லை என்றால் அது காதலே இல்லை

சண்டையைத் தொடங்குவது நீ, சண்டையை முடித்து வைக்க ஒவ்வொரு முறையும் உன்னை சமாதானம் செய்வது நான். சமாதானம் செய்வதற்காகவே நீ என்னுடன் சண்டை இடுகிறாயோ..?


Wife Quotes In Tamil

அன்பின் மொழியில் கோபம் கூட உன் மீதான அன்புக்கானதே.

கோபம்கொண்டு நான் ஓரமாக் நிற்கும் போது, உன் செல்லக் கொஞ்சல் போதுமடி பெண்ணே, என் கோபத்துக்குக் கூட நாணம் வந்துவிடுகிறது, உன் முன்னே.

சின்னச்சின்ன ஊடல்கள், நம்மை பிரித்து வைப்பதற்கு அல்ல. நம் காதலை வளர்த்து விடுவதற்கு.

தனியறையில் தணலாய் தகிக்கும் என்காதல் தீயை, முத்தமழையில் குளிர்காயச் செய்கிறான், ஊடலுக்குள் சிக்கிக்கொண்ட நம் காதல்.


Wife Quotes In Tamil

அவன் இட்ட ஒற்றை முத்தத்தில், என் ஒட்டு மொத்த கோபமும் பனித்துளியாய் மாயமானதே, என்னே ஒரு விந்தை..!

சிரிப்பை விட கண்ணீருக்கே மதிப்பு அதிகம். யாருக்காக வேண்டுமானாலும் சிரிக்கலாம். ஆனால் உண்மையான அன்பு இல்லாமல் யாருக்காகவும் கண்ணீர் சிந்திவிட முடியாது.

சுகங்களை மட்டும் பகிர்ந்து கொள்வது காதல் அல்ல. சோகங்கள் சூழ்ந்துகொள்ளும்போது துணையாய் தோள் கொடுப்பதே காதல்.


Wife Quotes In Tamil

இதயம் எத்தனை முறை காயப்பட்டாலும் மனதிற்கு பிடித்தவரை மறக்காது. ஏனெனில் இதயத்திற்கு நடிக்கத் தெரியாது. துடிக்க மட்டுமே தெரியும்.

உனக்காக காத்திருக்கும் ஒவ்வொரு நிமிடமும் உணர்த்துகிறது, நீ இல்லாத வாழ்க்கை வெறுமை என்பதை.

உடலுக்கு துணையாக மட்டுமல்ல மனதுக்கு துணையாகவும் வாழ்பவர்கள் தான் கணவன்-மனைவி.

வாழ்க்கையை சந்தோசமாக வாழ்வதற்கு ஆயிரம் உறவுகள் தேவை இல்லை. நம்மை உண்மையாக நேசிக்கும் ஒற்றை உறவு போதும்.


Wife Quotes In Tamil

விழுதுகள் மரத்தைத் தாங்கலாம். வேர் மட்டுமே அதை வாழ வைக்க முடியும். எத்தனை சொந்தங்கள் இருபினும் ஒரு ஆணுக்கு மனைவி தான் வேர். ஒரு பெண்ணுக்கு கணவன் தான் வேர். அதற்கு இணை வேறு எதுவும் இல்லை.

எல்லா பெண்களுக்கும் கிடைப்பதில்லை, எந்தச் சூழ்நிலையிலும் உன்னை விட்டுக் கொடுக்க மாட்டேன்;

விட்டுச் செல்லவும் மாட்டேன் என்று இருக்கும் ஒரு சிறந்த ஆண்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு