wife quotes in tamil-தோல்வியில் தோழனாவாள்..! பின்னிருந்து இயக்கும் மின்விசையாவாள், மனைவி..!

wife quotes in tamil-மனைவி மேற்கோள்கள் (கோப்பு படம்)
wife quotes in tamil-மனைவி என்பவள் மனையை வாழ்பவள். அதாவது வீட்டை மகிழ்ச்சியாகும் தேவதை. வீடு என்பது வெறும் செங்கல்லும் சிமெண்டும் கலந்த கலவை அல்ல. அது கணவன், மனைவி, குழந்தைகள் என அன்பு உள்ளங்கள் வாழும் ஆலயம். அந்த ஆலயத்தை அழகாக்கும் இறைவன் மனைவிதான்.
கணவனுக்கும், குழந்தைகளுக்கும் தேவையானதை உணர்ந்து செய்துதரும் சேவகி. கணவனுக்கு மஞ்சத்தில் சுகம் தரும் கன்னி. துன்பத்தில் தோள் கொடுக்கும் தோழி. குழந்தைகளுக்கு நல்ல தாய். வழிகாட்டும் ஆசிரியை. இப்படி ஒரு மனைவி என்பவள் பல பரிமாணங்களில் மிளிர்கிறாள். அந்த தேவதைக்கு நல்ல நண்பனாக, வாழ்க்கை முழுவதும் உயிர்மூச்சாக நாம் இருக்கவேண்டாமா..? இதை மனைவி பற்றிய மேற்கோள்கள்.
இதோ உங்களுக்காக..
எனக்குப் பிடித்தவளே, உனது வார்த்தைக்கு நான் அடிமையே. எனது பேச்சின் முழுமையிலும் நீயே, கண் மூடும் உனது கனவில் நானே..! என் மூச்சின் சுவாசமும் நீயே..! என் கைகள் ஓராயிரம் கவிதைகள் எழுதுகின்றன, பேனா இல்லாமல் உன்னை மனதில் நினைத்தே..!
என்னவள் சிரிக்கும் போது, கன்னக்குழியில் நான் வீழ்ந்துபோனேன்..! அதனாலேயே அவளை சிரிக்க வைத்து, பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என என் நெஞ்சம் விம்முகிறது..!
wife quotes in tamil
கண்டபடி பேசும் என் நண்பர்களோடு பேசும் எனக்கு உன்னைக் கண்டவுடன் பேச்சே வருவதில்லையே..அது உன் மீதான காதல் ..!
நிலவின் ஒளிச்சாரலில், நின் முகம் கண்டேனடி..! நானும் பித்தனாய் நின்றேனடி..! உனைப்படைத்த அந்த பிரம்மனும் உனைப் பார்த்தால் உன்னைப்போல இன்னொரு உருவம் படைப்பானடி..!
இசை எனக்குப்பிடிக்கும் என்பதால்தான் இல்லாமலேயே இனிமையாக உனது இமைகள் நடனமாடுகின்றனவோ..?!
உன்னைச் சுற்றியுள்ள எல்லாமே அதிசயம் தான், உன்னையும் சேர்த்துதானடி..!
wife quotes in tamil
உன் கை கோர்த்து நான் கரைந்திடவேண்டும்..! உன்னில் நானாக இருக்க ஆசை..எண்ணில் நீயாக இருக்கவும் ஆசை..! முழுமதியாக, உன்னுடைய நான்..!
இடை இடையே அவள் இடை செய்யும் வேலை, அப்பப்பா என் உயிர் ஜீவனை உருக்கி வீழ்த்துகிறது..!அதனால்தான் அவளுக்கு இடையில் இன்னொரு ஜீவன் வர நான் தாமதிக்கிறேன்..!
உன்னைப்பற்றி எழுதும்போது, பேனா கூட கண்ணீர் சிந்துகிறது, மைத்துளிகளாக..!
விண்ணின் நட்சத்திரங்கள் மண்ணிற்கு வருவதில்லை என்று யார் சொன்னது..? என்னவளை கொஞ்சம் பார்த்துவிட்டு கவிதை எழுது கவியே..! அவள் இந்த மண்ணின் நட்சத்திரம்..!
wife quotes in tamil
கள்ளம், கபடம் இல்லாத உன் சிரிப்பில், என்னை உன் மனச் சிறையில் அடைத்து விட்ட கள்ளியடி நீ..!
என் உயிர் பிரிந்தால் உன் கண்களில் நீர் வருமோ.. இல்லையோ நானறியேன்..! ஆனால், உன் கண்களில் நீர் வந்தால் அடுத்த நொடியே என் உயிர் பிரிந்திடும், இதுமட்டும் நிஜமடி..!
ஒரு கணம் பிரிந்தாலும், மறுகணமே சேர்ந்துவிடுகிறது, நம் இதயங்கள் நம் மீது கொண்ட உண்மைக் காதலால்..!
உன் கைகளை கோர்த்தபடி வெகுதூரம் சாலை வழியே இயற்கையை ரசித்தபடி கழிக்கவேண்டும் பலநாட்கள் உன்னோடு..! நாம் சேந்து வாழப்போகும் வாழ்க்கையின் சிலாகிப்பை பேசித்தீர்க்கவேண்டும்..! இது கூட நம் வாழ்க்கையின் திட்டமிதல் அன்றோ..!?
wife quotes in tamil
என்னவளே..! இப்படியே என் ஆயுள் வரை உன்னை அரவணைக்க வேண்டும்..! அந்த அரவணைப்போடு நாம் இருவரும் ஒன்றாக இறக்க வேண்டும்..!
என்றும் நிரந்தரமாய் உன்னோடு வாழ ஆசைப்படுகிறேன், உந்தன் மனதில் மட்டுமே என் அன்பே..!
உயிரோடு இருக்க ஒரு பிறவி போதும்..! உன் காதலோடு இருக்க, பல ஜென்மம் வேண்டும் என்னவளே..எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் உன்னோடு வாழவே வரம் வேண்டும் என்பேன்..!
கோடையின் வெயிலோ..? பனியின் சாரலோ..? மழையின் தூறலோ..? தென்றலின் வீசலோ..? அலைகளின் ஓசையோ..குயிலின் கீதமோ..? மயிலின் நடனமோ..மானின் துள்ளலோ..? மீனின் நீந்தலோ..கிளியின் பேச்சோ..? எதுவாக இருப்பினும் உன் தோள் சாய்ந்து ரசிக்கவேண்டும் என்னழகே..!
wife quotes in tamil
உனது ஆயிரம் ஆசைகள் அத்தனையும் நிறைவேற்ற, ஆயிரம் ஆயுள் வேண்டும் எனக்கு, உன்னோடு வாழ்தலில் மட்டும்..!
விரும்பியே ஆயுள் கைதி ஆனேன்..! காலமெல்லாம் அவள் காதலை தண்டனையாய் பெற்று, அவளை உயிராய் என் இதயத்தில் சுமக்க..!
உன் அருகில் நானிருக்க, உன் கண்களில் கண்ணீரும் இனி எதற்கு? கண்ணாக நானிருப்பேன், கலந்துவிடு கண்மணியே..!
என்னோடு நீ இருக்கும் இந்த நொடியிலும், மரணம் என்னை தழுவினாலும் மகிழ்ச்சியாய் ஏற்பேன் அன்பே..!
நீ வாழும் நொடிகள் எனக்காக மட்டுமே என்றிருந்தால், நான் வாழும் நிமிடங்கள் எல்லாம் உனக்காக மட்டுமானதாகவே இருக்கும்..!
wife quotes in tamil
உனக்காக எதையும் இழந்து விடுவேன்..! ஆனால், எதற்காகவும் உன்னை இழக்க மாட்டேன்..!
எனக்கு "நீ" அழகு, உனக்கு "நான்" அழகு, காதலுக்கு "நாம்" அழகு..! கண் திருஷ்டிப்பட்டுவிடும் சுற்றிப்போடலாம் வா..!
அவள் அக அழகில் என் கண்கள் தோற்றுப்போயின..! அந்த அக அழகில் என் ஆண்மையும் தோற்று நின்றது, அவளின் முன்னே மண்டியிட..!
அவளுடனான காலைகள் ஏன் விடுகின்றன என்று இருக்கிறது..! இன்னொரு இரவை வந்தாலும் கூட அந்த இரவே நீடிக்கவேண்டும் என்று மனம் அடம்பிடிக்கிறது..அவளின் அன்பு பிடிக்குள் சிக்கியதால்..!
wife quotes in tamil
பூச் சூடுகிறாள், எனக்காக..! குங்குமம் இடுகிறாள், எனக்காக..! மெட்டி அணிகிறாள், எனக்காக..! குழந்தையை சுமக்கிறாள், எனக்காக..! இப்படி எனக்காக எத்தனை சுமைகள்..?! அவளுக்காக என் வாழ்க்கை முழுவதும் அவளை சுமக்கத் தயாராக இருக்கிறேன் அன்பே..!
நித்தம் ஒரு கவிதையால் நீ ஜனனம் ஆகிறாய்...! புத்தம் புது உன் புன்னகையால் நான் கவிஞன் ஆகிறேன்...!
உன் முகம் பார்த்து விட்டால் போதும்,பல யுகங்களைக் கூட சுகங்களாக கழித்திடுவேன்..! வழி மேல் விழி வைத்து உன்னை எதிர்பார்த்து..!
எழுத இடம் கொடுத்தால் எழுதிடுவேன்..! கவிதையினை முத்தமாய்,மொத்தமாய்...!
wife quotes in tamil
முகம் பார்த்து வந்த காதல் மறைந்து விடும்..! பணம் பார்த்து வந்த காதல் பறந்து விடும்..! உள்ளம் பார்த்து வந்த காதல் உயிர் உள்ள வரை தொடர்ந்து வரும்..!
யார் இந்த தேவதை...? உறங்கும் விழிகளுக்குள் புதிய கனவைக் கொண்டு வருவது? கனவைத் தந்து விட்டு என் நினைவை கொண்டு செல்கிறாள்...! கனவுலகிலேயே என்னை சஞ்சரிக்க வைக்கிறாள்..! கற்பனையில் என்னை மிதக்க வைக்கிறாள்..! யார் இந்த தேவதை...?!
வழி பார்த்து நடக்காமல், உன் விழி பார்த்து நடந்ததால். வழுக்கி விழுந்தேனடி காதல் என்னும் பள்ளத்தில்...! கை தூக்கி விடுவாயா கரைசேர..?
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu