Wife love quotes in tamil-ஈருயிர் எழுத்தில் உருவான ஓருயிர் எழுத்து கணவன்-மனைவி..!

Wife love quotes in tamil-மனைவி மேற்கோள்கள் (கோப்பு படம்)
Wife love quotes in tamil
மனையை செழிக்க வைப்பவள் மனைவி. மனையை மகிழ்ச்சியாக்குபவள் மனைவி. மனையை மேன்மையுறச் செய்பவள் மனைவி.மனையை மாண்புக்குரியதாக மாற்றுபவள் மனைவி. கணவன் என்பவனைத் தாங்கிப்பிடிக்கும் கற்றூண். கணவனை இதயத்துக்குள், இல்லை.. இல்லை.. அவனாகவே மாறி அவனுக்குள் வாழும் உயிர்ஜீவன். உள்ளத்தால் உயர்ந்தவள்.
கணவன்-மனைவி உறவென்பது சிவ-சக்தி போன்றது. சிவம் இல்லையேல் சக்தி இல்லை. சக்தி இல்லையேல் சிவம் இல்லை. ஒரு கவிஞன் பாடுகிறான் தனது கவிதையில்,இப்படிப்பாடுகிறான்.
"தன்னைத் தொலைத்துவிட்டு
என்னில்
தேடுகிறாள்,
அவள்-நானாக
நான்-அவளாக..!"
மனைவி என்பவள் அவள் அவளாக வாழ்வதில்லை. அவள் கணவனாகவே வாழ்கிறாள்.
கணவன், மனைவியின் உறவின் பெருமைகளை உணர்த்தும் உயர்ந்த வரிகளை உங்களுக்குத் தந்துள்ளோம்.படித்து பெருமையுறுங்கள்.
பொன்னை விரும்பும் பூமியிலே. என்னை விரும்பும் ஓருயிரே. புதையல் தேடி அலையும் உலகில் இதயம் தேடும் என்னுயிரே.
நம் அழகு என்பது முகத்திலோ, நிறத்திலோ இல்லை! நாம் இருவரும் வாழும் விதத்தில் உள்ளது.
ஒன்றை மட்டும் புரிந்து கொள்... இங்கு நான் என்பதும், நீ என்பதும் வேறு வேறு அல்ல. சிவசக்தி.
அன்பாய் பேச ஆயிரம் உறவுகள் இருக்கலாம்; ஆனால் நமது அன்புக்காக ஏங்கும் ஒரு உறவு இருப்பதை மறவாதீர்கள். அவளை யாருக்காகவும், எதற்காகவும் விட்டுக் கொடுக்காதீர்கள்.
Wife love quotes in tamil
எதிர்பாராமல் பெய்யும் மழை போல என் வாழ்வில் வந்தாய். உன் அன்பால் என் மனதை குளிரவைத்தாய். என் இருண்ட வாழ்க்கைக்கு ஒளியாய் நின்றாய். என் மகிழ்ச்சிக்கு வானவில்லாய் வண்ணங்கள் பூசினாய்.
உயிரில் கலந்த உறவே, உனை என்றும் மறவேன் அறவே! உன்னுடன் இருந்தால், என் உலகம் இருக்கும் இனிதே! நிதமும் என் உடலில் வீச வேண்டும், உன் மணமே. என்னருகில் நீ இருந்தால், நான் ஒரு சிற்பமே. இல்லாவிடில், நான் ஒரு அற்பமே. நம்மை பிரிக்க ஆண்டவனும் நினையான் ஒரு கணமே. ஆகவே, இணைந்து வாழ்வோம் இக்கணமே.
உன்னோடு நான் இருக்கையில், உலகின் பரப்பளவு கூட எனக்கு சிறிதாய் தெரிகிறது. உன் அன்புக்கு அவ்வளவு சக்தியா..?
Wife love quotes in tamil
மழை பொழியும் அந்த மகிழ்வான நேரத்தில், ஓர் குடைக்குள் இருவரும் ஒன்றாக தொலைதூரம் இடைவெளி இல்லாது, இறுக்கமாய் இருவரும் காதல் வாழ்க்கையில் பயணிப்போம், மழையை ரசித்தபடி, மனமும் குளிர்ந்தபடி செல்ல வேண்டும் ஓர் அழகிய காதல் பயணம், நீண்ட நெடிய நாட்களுக்கு.
அழகிய நிலவொளியில் நாம் இருவர் மட்டும் தனியாக. விழிகள் இரண்டும் போதும், நாம் இருவரும் பேசிக்கொள்ள. உன் தோளில் நான், என் இதயத்தில் நீ. மொழிகள் எதற்குத் தேவையில்லை, எமக்கு.
என் கண்கள் தினமும் பலரைப் பார்க்கலாம். ஆனால், என் மனம் மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டுமென நினைப்பது, உன்னை மட்டுமே
Wife love quotes in tamil
அழகைக் காட்டிமயக்கும் இந்த மாய உலகில், நீ மட்டும் உன் அன்பைக் காட்டி என்னை மயக்கினாய். அந்த மயக்கத்திலிருந்து கடவுளால் கூட என்னை வெளிக் கொண்டுவர முடியவில்லை. எனென்றால், உன் அன்பு அந்த கடவுளையே சிறை பிடிக்கும்.
உன் கண்ணில் என் பிம்பத்தைக் காணும் ஒவ்வொரு நொடியும், யுகயுகமாய் ரசித்து கடக்கிறேன்.
தினம் காலை பொழுதில் உன் மடியில் என் தூக்கம் கலைந்து எழுவதற்கு சிறகடித்து தவிக்குதடி, என் விழிகள்.
Wife love quotes in tamil
இதழ்கள் பேச மறுத்தாலும், இமைகள் பேசி மகிழ்விக்கிறது. உன் கடை விழிப் பார்வை போதும்; கடைசிவரை என் வாழ்க்கை (செ)வெல்லும்.
உந்தன் கன்னக்குழியில் புதைந்து, நான் முத்தாய் மாற ஆசை.
நம் அன்பை புரிந்து கொண்ட இதயம்,நமது கஷ்டங்களை சொல்லாமலே புரிந்து கொள்ளும்.
வாழ்க்கையில் வெற்றியோ தோல்வியோ எது நடந்தாலும் கடைசி வரைக்கும் நான் உன் கூடவே இருப்பேன். என் காதல் நிஜமானது.
Wife love quotes in tamil
கணவனிடம் எதையும் மறக்காத மனைவிக்கும் மனைவியை யாரிடமும் விட்டு கொடுக்காத கணவனுக்கும் பிரிவு என்பது இல்லை
நமக்காக யோசிக்க ஒரு வாழ்க்கை துணை இருக்கிறது என்பதை உணரும் போது தான் நம் வாழ்க்கை தொடங்கும்
தேவதை போல ஒரு மனைவி கிடைக்க வேண்டும் என்பதை தாண்டி கிடைக்கும் மனைவியை தேவதையை போல பார்த்து கொள்ள விரும்புகிறவன் தான் உண்மையான ஆண்.
நாம் உள்ளத்தில் நினைக்கின்ற ஒன்றை நாம் கூறாமலே புரிந்து கொள்ளும் உறவுகளை நம் வாழ்வில் பெறுவது வரமே.
Wife love quotes in tamil
கணவன் மனைவிக்கு குழந்தை பிறப்பது இயல்பு. ஆனால், கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும், குழந்தையாவது வரம்
ஆயிரம் தடவை உன்னிடம் சண்டை இட்டுக் கொண்டு பேசாமல் இருந்து பின் சமாதானம் ஆகும் போதும் ஏனோ தெரியவில்லை புதிதாய் காதலிப்பது போன்ற ஓர் உணர்வு ஏற்படுகின்றது.
உன்னுடன் சமாதானம் ஆகும் அந்த தருணத்திற்காகவே வேண்டும் என்றே சண்டைக்கு காரணம் தேடுகிறேன்.
எத்தனை சொந்தங்கள் இருந்தாலும் ஓர் ஆணுக்கு மனைவி தான். மனைவிக்கு கணவன் தான். அதற்கு இணை வேறு எதுவும் இல்லை. விழுதுகள் மரத்தை தாங்கலாம், ஆனால் வேர் மட்டுமே அதை வாழ வைக்க முடியும். கணவனும் மனைவியும் வேர்கள்.
Wife love quotes in tamil
உணர்ச்சிகளால் ஆள நினைப்பதைவிட்டு உணர்வுகளால் ஆண்டுபார். உன் துணைவியைவிட ஓர் உயர்ந்த உயிர்த் தோழியை வாழ்வில் நீ கண்டிருக்கமாட்டாய்.
பெண் மனம் விரும்புவது காசோ பணமோ அல்ல. அன்போடு தலை சாய்த்துக்கொள்ள நேசமான கணவனின் தோள் தான்.
காலங்கள் கடந்து போகும் போது ''அழகான மனைவியின் அழகு குறையலாம்; ஆனால் "அன்பான” மனைவியின் அன்பு அதிகரிக்கவே செய்யும்.
Wife love quotes in tamil
என் வாழ்வில் எத்தனை துன்பங்கள் வந்தாலும் தாங்கிக் கொள்வேன், ஆறுதல் கூறுவதற்கு நீ என் அருகில் இருப்பாயானால்.
மனைவியை எங்கும் விட்டுக் கொடுக்காத கணவன், கணவனிடம் எதையும் மறைக்காத மனைவி, நண்பர்கள் போன்ற பிள்ளைகள், இவையாவும் அமைந்தால் வாழ்க்கை சொர்க்கமே.
மனைவி வீட்டில் இல்லை. நிம்மதி என்று அதிகம் நகைச்சுவை ஆயிரம் பேசினாலும். வீட்டில் நுழைந்தவுடன் மனைவியை காணாமல் ஏங்கித் தேடும் கண்களே ஏராளம்.
உங்களில் சிறந்தவர் யார் என்றால், யார் தன் மனைவியிடம் சிறந்தவரோ அவரே சிறந்தவராவார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu