உங்களில் யார் உண்மையான மகாராணிகள்..! தெரிஞ்சுக்கங்க..?

உனக்கு நான்;எனக்கு நீ என்று வாழும் வாழ்க்கையே இனிமை நிறைந்தது.(கோப்பு படம்)
பெரிய இடத்துக்கு வாழ்க்கைப்பட்டு போகிறவர்கள் அடிமை வாழ்க்கைதான் வாழ வேண்டும். இல்லை என்றால் தனக்கென ஒரு பாதையை அமைத்துக்கொள்ள வேண்டும். இவர்களிடம் பணம், நகைகள் குவிந்திருக்கலாம். ஏறினால், இறங்கினால் குளிரூட்டப்பட்ட வாகனங்கள் இருக்கலாம். அடுக்கு மாடி வீடிருக்கலாம். அதட்டி வேலை வாங்க ஆள் இருக்கலாம். ஆனாலும் அவர்கள் பணக்கார உரிமையற்றவர்கள் தான். கானல் நீர் வாழ்க்கை என்று கூட சொல்லலாம். இருக்கு ஆனால் இல்லை.
அடித்தட்டு ஆணுக்கு வாழ்க்கைப்படுபவர்கள் சரிக்கு சரியாய் உழைக்க வேண்டும். வெளியில் கணவனுக்கு சமமாகவும், வீட்டில் கணவனுக்காகவும் உழைக்கவும் அல்லது அதற்கு மேலும் கூட உழைக்க வேண்டும். குடிகார கணவெனென்றால் அவனுக்கும் சேர்த்து உழைக்க வேண்டும். இங்கே அதிகாரமிக்க அடிமையாகத்தான் பெண் வாழ முடியும்.
நடுத்தர குடும்ப ஆணுக்கு வாழ்க்கைப்பட்டவர்களுக்கு சம்பாதிக்க அல்லது உழைக்க வேண்டிய கட்டாயமில்லை. அவர்கள் உழைக்கத் தயாரானாலும் தடை இல்லை. கணவனின் வருமானத்தை கணக்கிட்டு செலவு செய்யவோ, சேமிக்கவோ முழு அதிகாரம் உண்டு. வேண்டியவர்களைச் சேர்க்கலாம். வெறுப்பவர்களை விலக்கலாம். எல்லா முடிவுகளையும் தாமே எடுக்கலாம்.
வியர்வையோடு தூங்கினாலும் பாதுகாப்பாய், ஆதரவாய் தூங்கலாம். பேருந்தில் பயணித்தாலும் உற்றவர்களுடன் பயணிக்கலாம். கடன் வாங்கினாலும் கவலை பட்டாலும் உனக்கு நான் ; எனக்கு நீ என சாய்ந்துகொள்ள தோளிருக்கும். இன்ஸ்டால்மெண்டில் வாங்கினாலும் சந்தோஷத்தை ஒவ்வொரு நொடியும் அனுபவிக்கலாம். வெளியில் சென்று விட்டு வீடு திரும்ப தாமதமானால் தேடி வர ஆளிருக்கும்.
இப்படி இன்னும் ஆயிரமாயிரம் இருக்கும். வார்த்தைகளால் வடிக்கமுடியாத மகிழ்ச்சியின் உணர்வுகள் இருக்கும். தன் பொறுப்புணர்ந்து வாழும் நடுத்தர வர்க்க பெண்ணா நீங்கள்??? இந்த உலகிற்கு உரத்துக் கூறுங்கள் ‘‘நான் தான் மஹாராணி’’ என்று.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu