ஒல்லி ஒடம்ப குண்டாக்கணுமா..? இதெல்லாம் சாப்பிடுங்க..!

Weight Gain Tips in Tamil
Weight Gain Tips in Tamil
ஒரு பக்கம் ஸ்லிம்மாகணும்னு தேடுதல். இன்னொரு பக்கம் குண்டாகணும்னு தேடுதல். ஆனால், ஆபத்தான வழிகளை தேடாமல் ஆரோக்கியம் தரும் நல்ல வழிகளில் குண்டாக முயற்சிக்கணும். சரி வாங்க.. இப்ப குண்டாக என்ன செய்யலாம்னு பார்க்கலாம்.
1. உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்களும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதுவும் பளு தூக்கும் பயிற்சியை கட்டாயமாக செய்ய வேண்டும். குறிப்பாக ஓவர்ஹெட் ப்ரஸ், செஸ்ட் ப்ரஸ், பெண்ட் ஓவர் ரோஸ், லஞ்சஸ், கர்ல்ஸ் மற்றும் ஸ்டிவ் டெட்லிப்ட் போன்ற பயிற்சிகளை ஒரு செட்டிற்கு 8-12 தடவை என தினமும் 4-5 செட் செய்ய வேண்டும். இந்த பளு தூக்கும் பயிற்சிகளை மேற்கொள்ளும் போது, முடிந்த அளவு அதிக அளவிலான எடையைத் தூக்குவதற்கு முயற்சிக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு ஆறு நாட்கள் செய்தபின்னர் ஒரு நாள் ஓய்வெடுத்துக் கொள்ளலாம்.

2. எப்போதும் கலோரி அதிகமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். நட்ஸ், உலர் பழங்கள், விதைகள், உலர்ந்த பெர்ரிப் பழங்கள் மற்றும் தேங்காய் போன்றவைகளை எப்போதும் கையில் வைத்த்டிருக்கவேண்டும். அவ்வப்போது சாப்பிட வேண்டும். தினமும் உட்கொள்ளும் கலோரியின் அளவை அதிகரிப்பதன் மூலம் உடல் எடை அதிகரிக்கும்.
3. அன்றாடம் உண்ணும் உணவுகளில் கலோரிகள் மட்டுமின்றி, வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் அதிகமாகவும், சர்க்கரை மற்றும் கொழுப்பு குறைவாகவும் இருக்க வேண்டும். சர்க்கரையில் வெற்றுக் கலோரிகள் உள்ளதால், கட்டாயம் சர்க்கரையைத் தவிர்க்க வேண்டும். மேலும் ஆரோக்கியமான உணவுகளான உருளைக்கிழங்கு, சீஸ் சூப், கொழுப்பு இல்லாத பால் சேர்க்கப்பட்ட சூப், பால், மசித்த உருளைக்கிழங்கு மற்றும் மில்க் ஷேக் போன்றவைகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
4. ஜூஸ் குடிப்பதாக இருந்தால், ஒரே ஒரு பழம் கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸிற்கு பதிலாக பல பழங்களால் ஆன ஜூஸைத் தேர்ந்தெடுத்துக் குடிப்பது நல்லது. ஆப்பிள், பீச், பெர்ரி, வாழைப்பழம் மற்றும் ஆரஞ்சு போன்ற பழங்கள் ஒன்றாக உட்கொள்ள ஏற்றது. ஜூஸ் வழியே கலோரிகளை அதிகரிக்க நினைத்தால், அவகேடோ, நட்ஸ் கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸ்களைக் குடிக்கலாம். ஜூஸ்களை அடிக்கடி குடிப்பதன் மூலம், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் சப்ளிமெண்ட்டுகள் கிடைத்து, உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.
5. டெசர்ட்டுகளை உண்பது ஆரோக்கியமானது. இது உட்கொள்ளும் கலோரியின் அளவை அதிகரிக்கவும் உதவும். யோகர்ட்டில் க்ரனோலா மற்றும் பழங்கள் சேர்த்து உண்பது, தவிடு மஃப்பின்கள் போன்றவை மிகவும் சிறப்பான டெசர்ட்டுகளாகும். உடல் எடையை அதிகரிக்க குறிப்பிட்ட அளவு கலோரிகளை எடுப்பது அவசியமாகும். எனவே எடையை அதிகரிக்க நினைப்பவர்கள், ஆரோக்கியமான உணவுகளின் மூலம் கலோரிகளின் அளவை அதிகரிக்க வேண்டும்.
6. பானங்களின் மூலம் கலோரி அளவை அதிகரிக்க நினைப்பவர்கள், கவனமாக இருக்க வேண்டும். சோடா, பீர், ஒயின் மற்றும் இதர பானங்கள் உடல் எடையை அதிகரிக்க சிறப்பான பானங்கள் இல்லை. இவற்றில் இருப்பது வெற்றுக் கலோரிகள் ஆகும். அதாவது இவை ஆரோக்கியமற்ற உடல் பருமனுக்கு வழிவகுக்கும். நற்பதமான பழச்சாறுகள் மற்றும் பானங்களான மாம்பழம் மில்க் ஷேக் போன்றவை உடல் எடையை அதிகரிக்க சிறப்பான பானமாகும். எனவே முடிந்தால் தினமும் ஒரு மாம்பழச்சாறு, மில்க் ஷேக் குடிக்கலாம்.
இப்படி ஆரோக்யமான வழிகளை பின்பற்றி உடல் எடையை அதிகரிக்க முனையலாம். முடிந்தால் ஒரு உணவு நிபுணரிடம் ஆலோசனைப் பெற்று, அவரது ஆலோசனைப்படி உணவுகளை எடுக்கலாம்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu