காதல் ஒன்றே சர்வதேச பொதுமொழி..! வாழ்த்துவோமா..?

valentine's day wishes in tamil-காதலர் தின வாழ்த்துகள் (கோப்பு படம்)
Valentine's Day Wishes in Tamil
அன்பு என்பது அனைத்து உயிரினங்களாலும் உணரப்படும் ஒரு சக்திவாய்ந்த உணர்வு. இது நம்மை இணைக்கும் ஒரு பிணைப்பாகும். மற்றவர்களிடம் ஆழமாக அக்கறை செலுத்துவதை இது உணர்த்துகிறது. குடும்பம் முதல் நண்பர்கள் வரை, நாம் வெவ்வேறு வடிவங்களில் அன்பை பகிர்ந்து அனுபவிக்கிறோம்.
Valentine's Day Wishes in Tamil
காதல், ஒரு உலகளாவிய உணர்வு. இது மொழிகளுக்கு அப்பாற்பட்டது. இதயம் மட்டுமே பேசும் சர்வதேச மொழி காதல்.காதல் கிடைப்பவரை விட அந்த காதலை இழந்தவருக்கு காதலின் வீச்சு அதிகமாகவே இருக்கும். அதன் வலி அதை உணரும் அவர்களுக்கு மட்டுமே புரியும். காதல் ஒரு சக்திவாய்ந்த உணர்ச்சி, உடல் தன்மையைக் கடந்து ஆன்மாவுக்குள் நுழையும் ஒரு பிணைப்புச் சக்தி.
காதலர் தினத்தில் வாழ்த்துகளை பகிர்வோம் வாருங்கள்.
எப்படித் தான் தெரியப்படுத்துவேன் ?
உன்மேல் நான் கொண்ட காதலை.
ஒரு பூவை நீட்டும் பழைய முறையிலா ?
வாசம் வீசும் புத்தகத்தில் ஒளித்து வைக்கும்மயில் பீலி வழியாகவா ?
ஒரு நான்குவரிக் கவிதையிலா ? – இல்லை
கையெழுத்தைச் செதுக்கி நான் செய்த காகிதக் கடிதத்திலா ?
தெரியவில்லை எனக்கு. எப்படி சொல்வேன் ?
படபடக்கும் என் பட்டாம்பூச்சிச் சிறகுகளுக்கு எந்த பதில் பாறையையும்
சுமக்கும் தெம்பில்லை! அதனால் நீயே சொல்லி விடு
என்னைக் காதலிக்கிறேன் என்று!
வம்பான பார்வையை அம்பாக எய்கின்றாய்
நீ தூரமாக இருந்தாலும் உனது குரலை கேட்காத நொடிகள் இல்லை
கேட்கிறேன் – இதய துடிப்பில்
ஏனென்றால் என் இதயம் துடிப்பது உனக்காக அல்லவா!!
Valentine's Day Wishes in Tamil
மனமும் மகிழ்வில் உன் விழிகளில் என்னை காண்பதால்
என்னை மறந்து கொஞ்ச நேரம் உலகை ரசிக்க நினைத்தால்
அங்கும் வந்துவிடுகிறாய் நானே… உன் உலகமென்று
கொஞ்சும் மொழியில் கெஞ்சும் உன் வார்த்தைகளில்
என் கோபங்களும் மறைந்து விடுகிறது!!! அழகே!!
மழைச்சாரலாய் நீவர கவிச்சோலையானேன் நான்…!
மனதிலிருக்கும் ஆசைகளையெல்லாம் கொட்டி தீர்த்தவன்
அயர்ந்து போனேன் குழந்தையாய்…!
காற்றோடு பேசும் மலராய் உன் மனதோடு பேசி கொண்டிருக்கின்றேன்
நான்…!
நான் மறைந்தாலும் உன் மனதில் மறக்கப்படாதளவுக்கோர்
அழகிய வாழ்க்கையை வாழ்ந்திட வேண்டும், உன்னுடன் ஒரு நாலாவது!!!
Valentine's Day Wishes in Tamil
பார்க்க மறுத்த விழிகளும் காத்துக்கிடக்கு உன்னன்பில் தொலைந்து…!
இடைவெளி வலியை தருமென தெரிந்தும் பிடிவாதமாய்
அனுபவித்திருக்கிறோம் இருவரும்…!
விடைப்பெறட்டும் நாணம் விடைத்தருகிறேன் நானும்
உன் பார்வையின் கேள்விக்கு!!!
உலகை காட்டியது பெற்றோரென்றாலும்
அதை ரசிக்க வைத்துக்கொண்டிருப்பது நீ…!
உன் சிறுத்துளி நினைவு போதுமென் அகம் முகம் மகிழ…!
மனம் மகிழ வாழ்த்துகிறேன் இந்த காதலர் தினத்தன்று!
தூரம் வலியை கொடுத்தாலும் சுகமே
நினைவுகள் உன்னை சுற்றியே சுழன்று கொண்டிருப்பதால்
நினைவு கடலில் நீந்துகின்றேன் கரை சேர்த்திட வருவாயென…!
நம்மை நனைத்த மழைதுளி உலர்ந்தபோதும்
நாம் இணைந்த நினைவு துளி இன்னும் ஈரமாகவே மனதில்…!
என்னவனுக்கு காதலர் தின வாழ்த்துகள்!!
Valentine's Day Wishes in Tamil
என்னால் நீ அனுபவித்த காயங்களையெல்லாம் ஆற்றிடவேண்டும்
அன்பில்…!
தித்திக்கும் உன் நினைவுகளை சந்திக்கும் போது தான்
காத்திருக்கும் வலிகள் கூட காணாமல் போய் விடுகின்றது!!
என் கனவுகள் நீயாக இருக்கும் வரை என் கவிதைகள்
உன் பெயர் சொல்லும்!!
அது விதியின் செயல் அல்ல நீ செய்த மாய வலை…!
என்னவனுக்கு, காதலர் தின வாழ்த்துகள்!!
வரிகளில் இல்லாத ரசனை உன்னிரு விழிகளில் உணர்ந்தேன்…!
நீ விடைபெறும் போதெல்லாம் என்னிடம் தாவிக்கொள்கின்றது
சிறு குழந்தையாய் உன் நினைவுகள்…!
சுதந்திரமான மனதும் சுயநலமாகி போனது
உனதன்பு எனக்கே எனக்குமட்டும் சொந்தமென்று!!!
காதலர் தின வாழ்த்துகள்!!
மாட்டிய கொலுசில் மனசையும் கோர்த்து விட்டாயா
ஒலிக்குமிசையில் உன்பெயர் கேட்குதே!?
உறங்காத கண்களும் உறங்கிப்போனது
உன் நெஞ்சமெனும்பஞ்சணையில!
உளிகொண்டு பார்வையில் செதுக்குகின்றாய்
சிலையாகின்றேன் நானும்
காதலர் தின வாழ்த்துகள்!
Valentine's Day Wishes in Tamil
காதலின் வெளிபாடுதான் முத்தமென்றால்
நாமும் பரிமாறிக்கொள்வோம் முத்தங்களை
விழிகளை இதழ்களாக்கி!!
கண்களில் தொடங்கி கட்டிலறையில் முடிவதல்ல காதல்
மனதில் மலர்ந்து மணவறை சென்று மரணம் வரை உடனிருப்பதே
உண்மைக் காதல்!
காதலர் தின வாழ்த்துகள்!!
உன்னில் நானும் என்னுள் நீயுமாக வாழும் நமக்கு
தினமும் காதலர் தினமே!!
எந்த தினம் என்றாலும் அனுதினமும் அவனுடன் இருந்தால்
காதலர்தினம் தான்…!
காதலர் தின வாழ்த்துகள்!!
அம்மாவை விட்டுகொடுக்காத அப்பா, அப்பாவை
விட்டுகொடுக்காத அம்மா
இவர்களைவிடவா சிறந்த காதல் ஜோடி இவ்வுலகில் உண்டோ?
காதலர் தின வாழ்த்துகள்!
சத்தமின்றி யுத்தம் செய்யும் உன் பார்வையில்
ரத்தமின்றி போர்க்களமானது மனம்…!
ஒட்டி கொண்டிருக்கும் தாடிக்குள் சிக்கி கொள்கிறது
மனம் தினம்!!
உறங்காத விழிகளுக்குள் மறைந்துகொண்டு
இம்சிக்கிறாய் இதமாய்
துன்பக் கடலில் தத்தளித்தபோது அலை போல் வந்தென்னை
கரைசேர்த்தாய்
சுட்டெரிக்கும் வெயிலிலும் மழைசாரலாய்
நீயென்னை கடக்கயில் இதயமும் நனையுதே!
காதலர் தின வாழ்த்துகள்!
Valentine's Day Wishes in Tamil
என் ஒவ்வொரு நொடியின் தொடக்க புள்ளி நீ!
ஜன்னலை பூட்டியபின்னும் காட்சியை ரசிக்க தவறாத
விழிகளை போல்
மனதை பூட்டியபின்னும் உன் நினைவுகளை
நினைக்க தவறியதில்லை மனம்…
செல்லும் இடமெல்லாம் வந்து விடுகின்றாய்
நிலவை போல் நீயும் நினைவில்
உதிரா மலராய் நீ மனதில் மலர்ந்திருக்க
இந்த உதிரும் மலரும் ஏனோ!
காதலர் தின வாழ்த்துகள்!!
உன்னால் தண்டனை அனுபவிக்கின்றது நகமும் கொஞ்சம்
திருப்பிக்கொள் உன் பார்வையை!!
தனித்திருக்கும் போதெல்லாம் மனம் உன்னிடமே தாவுது…
மறைத்துக்கொள் நெஞ்சத்தை எனக்கு சொந்தமான
இதயத்தை தீண்ட காற்றுக்கும் அனுமதியில்லை!!
காதலர் தின வாழ்த்துகள்!
Valentine's Day Wishes in Tamil
விழிகளுனை கண்டுவிட்டால் மனமும் ஏனோ பறக்கின்றதே
சிறகடித்த வண்ணத்துப்பூச்சியாய்!
கூந்தலை பிடித்திழுத்து விளையாடி ஜிமிக்கியும்
உன்னை அடிக்கடி ஞாபகபடுத்துது!!
தாயை காண காத்திருக்கும் குழந்தையாய்
உன் வழி நோக்கி என் விழிகளும் காத்திருக்கு!
காதலர் தின வாழ்த்துகள்!
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu