காதலே..காதலே..உன் பொருள்தான் என்ன?

valentine's day meaning in tamil-காதலர் தின வரலாறு (கோப்பு படம்)
Valentine's Day Meaning in Tamil
காதலர் தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 14 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் மக்கள் காதல் தினத்தை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள். ஏன் நாம் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடுகிறோம். அதன் வரலாறு, முக்கியத்துவம் என்ன என்பது பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள் பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.
Valentine's Day Meaning in Tamil
காதலர் தின கொண்டாட்டங்கள் ஒரு வாரத்திற்கு முன்னரே தொடங்கிவிடுகிறது. முதலில் ரோஸ் டே எனப்படும் ரோஜா தினம், ப்ரபோஸ் டே, சாக்லேட் டே, டெடி டே , ப்ராமிஸ் டே, ஹக் டே, கிஸ் டேவை தொடர்ந்து தான் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் ஏற்கனவே தங்களின் கொண்டாட்டங்களை துவங்கிவிட்டார்கள்.
தங்களின் கிரஷ்கள், காதலர்கள், இணையர்களுக்கு என்ன பரிசு கொடுக்க வேண்டும், காதலர் தினத்தை எப்படி கொண்டாட வேண்டும் என்று திட்டமிட்டு தயார் ஆகி இருப்பார்கள். சிலர் காதலர் தினத்தை ஒரு சுய-காதல் நாளாகக் குறிப்பிட்டு, சுய-கவனிப்பில் ஈடுபடுவதன் மூலமோ அல்லது தாங்கள் விரும்பும் நடவடிக்கைகளில் பங்கேற்பதன் மூலமோ தங்களைத் தாங்களே ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்.
Valentine's Day Meaning in Tamil
நீங்கள் தனிமையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், காதலர் தினம் என்பது காதலில் இருப்பதும், காதலைக் கொண்டாடுவதும் தான்.
ஏன் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது?
வேலன்டைன்ஸ் டே என்ற தினம் புனித வேலன்டைன்ஸ் தினம் என்றும் அழைக்கப்படுகிறது. ரோமன் மக்களின் பண்டிகைகளில் ஒன்றான லுபேர்களியா பிப்ரவரி மாதத்தின் நடுவில் கொண்டாடப்படும். வசந்த காலத்தை வரவேற்கவும் கல்யாணமான ஜோடிகள் தங்களுக்கு குழந்தை தரிக்கவும் கொண்டாடும் பண்டிகை இது.
பிப்ரவரி அப்பொழுது ஒரு காதல் மாதமாகவே கடைபிடிக்கப்பட்டது. ஐந்தாம் நூற்றாண்டில் போப் முதலாம் கேளாசியஸ் இதற்கு வேலண்டைன்ஸ் டே என்று பெயர் மாற்றியதாகவும் கூறப்படுகிறது.
மற்றொரு வரலாறோ, ரோமானியப் பேரரசில் இருந்து காதலர் தினம் கொண்டாடப்படுவதாக வரலாறுகள் கூறுகிறது. ரோம பேரரசரான இரண்டாம் கிளாடியுஸ் காலத்தில் ஆண்கள் திருமணம் செய்துக் கொண்டால் அவர்களின் வீரம் குறைந்துவிடும் என்பது அந்நாட்டு அரசரின் எண்ணமாக இருந்துள்ளது. எனவே தான் அந்நாட்டில் உள்ள ஆண்கள் திருமணம் செய்துக் கொள்வதற்குத் தடை விதித்துள்ளார்.
Valentine's Day Meaning in Tamil
இந்த சூழலில் தான், திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நினைப்பில் இருந்த ஆண்களுக்கு வேலண்டைன் எனும் பாதிரியார் திருமணம் செய்த வைத்துள்ளார். இந்த விஷயம் மன்னனுக்கு தெரிய வந்த போது பாதிரியார் வேலண்டைனுக்கு பிப்ரவரி 14 ஆம் தேதியன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரது நினைவாக ஒவ்வொரு பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுவதாகவும் கூறப்படுகிறது.
அன்பை வெளிப்படுத்தும் நாள்
காதலர் தினத்தன்று காதலர்களுக்கு கொடுக்கும் பரிசுப்பொருட்கள் மிகவும் ஸ்பெஷலான ஒன்று, இருவரும் அன்பு, காதல், பரிசு ஆகிய அனைத்தையும் பரிமாறிக்கொள்வதோடு மட்டுமின்றி அது ஒரு மகிழ்வைகொடுக்கும் தருணமாக அமைந்துவிடும்.
Valentine's Day Meaning in Tamil
மக்கள் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பையும் அரவணைப்பையும் வெளிப்படுத்தும் நாளான இந்த தினத்தில் வாழ்கை துணையாக வர விரும்புபவர்களுடன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க விரும்பும் இதயப்பூர்வமான வாக்குறுதிகளை காதலர்கள் அளிக்கின்றனர்.நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சக ஊழியர்களிடையே கூட காதல் தினத்தை கொண்டாடலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu