உடல் நலத்தை பாதுகாக்கும் வஜ்ஜிரவல்லியின் பயன்கள்
பிரண்டையில் உள்ள மிகையான சுண்ணாம்பு சத்து (கால்சியம்) தான் எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க வைக்கிறது.
அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என போகர் நிகண்டுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தியாகும். பிரண்டை உப்பை சுமார் 300mg தேனில் அல்லது நெய்யில் தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றபடுகிறது.
சிறுகுடல் மற்றும் வயிற்றில் உள்ள வாயு முழுவதும் வெளியேறுவதை உடனடியாக உணரலாம். பெண்களுக்கு, மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல் (அ) உப்பை பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும்.
பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது ஒரு அருமருந்து. மூலம் நோய் உள்ளவர்களுக்கு உரிய மருந்தாகவும், ஏற்ற உணவாகவும் பயன்படுகிறது.
இந்த மூலிகை "குத ரோக நாசினி" என்று ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்படுகிறது. இவ்விதமாக நிறைய வயிறு சம்மந்தப்பட்ட குறைபாடுகள் பிரண்டையால் குணமாகிறது. இதில் இயற்கையாகவே கால்சியம் அதிகம் உள்ளது. இவ்வாறு இருக்க நாம் ஏன் அனாவசியமாக கால்சியம் மாத்திரை சாப்பிட்டு சிறுநீரகத்தை பாழ் செய்து கொள்ள வேண்டும். வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று போகர் ஏழாயிரத்தில் உள்ள குறிப்பிடப்பட்டுள்ளது. உலகிலேயே கடினமான பொருள் வைரம் ஆகும். அதில் உள்ள கார்பன் பிணைப்பையே உடைக்கும் தன்மை இதன் சாற்றுக்கு உண்டு எனும் போது ........ தேகத்தை வஜ்ஜிரமாக்கும் என்பதினால் தானோ என்னவோ இதற்கு மற்றொரு பெயர் "வஜ்ஜிரவல்லி" எனப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu