/* */

Unmai Quotes In Tamil-உண்மைக்கும் நிஜத்திற்கும் வேறுபாடு உண்டா..? தெரிஞ்சுக்கங்க..!

உண்மை என்பது போலி இல்லாத அக்மார்க் அடையாளம் பெற்றது. உண்மையை நேசிப்பவர்களுக்கு போலியாக வாழத்தெரியாது.

HIGHLIGHTS

Unmai Quotes In Tamil-உண்மைக்கும் நிஜத்திற்கும் வேறுபாடு உண்டா..? தெரிஞ்சுக்கங்க..!
X

Unmai Quotes In Tamil-உண்மை மேற்கோள்கள் (கோப்பு படம்)

Unmai Quotes In Tamil

உண்மை என்பது நிஜத்தின் வடிவம். நிஜம் என்பது உண்மையின் மறுவடிவம். உண்மை என்பது ஒரு சொல். ஆனால் நிஜம் என்பது நிகழ்வது. உதாரணமாக ஒருவருக்கு நீங்கள் இன்று உதவுதாக கூறியுள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் கூறுவது உண்மைதான். ஆனால் என்று உதவுதாக கூறினீர்களோ அன்றைய தினம் உதவ முடியவில்லை. ஆனாலும் நீங்கள் பொய் கூறவில்லை.

Unmai Quotes In Tamil


இரண்டு நாட்கள் கழித்து நீங்கள் கூறியபடி அவருக்கு உதவும் வாய்ப்பு வந்துவிட்டது. நேரடியாக அவரிடம் சென்று இதோ உங்களுக்கான உதவி வாங்கிக்கொள்ளுங்கள் என்று அவரிடம் அந்த உதவியை வழங்குகிறீர்கள். ஆக, நீங்கள் கூறிய உண்மை வார்த்தை எப்போது நிகழ்ந்ததோ அதுவே நிஜம்.

உண்மை என்பது ஒரு வார்த்தை. நிஜம் என்பது நிகழ்வது. ஆகவே உண்மையும் நேர்மையும் இருந்தால் உண்மை நிஜமாகும். நேர்மையோடு நீங்கள் கூறிய உண்மை நிஜமானது. எப்படி? உண்மைக்கும் நிஜத்திற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துகொண்டீர்களா?

Unmai Quotes In Tamil


சரிங்க..இப்போது உண்மை என்பதற்கான மேற்கோள்களை படிங்க. உண்மையை அறிந்துகொள்ளுங்கள்.

வேடம் தரிக்காத உண்மையான அன்பு தான், இந்த உலகத்தில் எல்லா நோய்களுக்குமான சிறந்த மருந்து.

சுகங்களை பகிர்ந்து கொள்ளும் அன்பை விட, சோகங்களை பகிர்ந்து கொள்ளும் நட்பின் அன்பு உண்மையானது, வலிமையானதும் கூட.

அருகில் இருப்பதனால் 'அன்பு' அதிகரித்துவிடுவதும் இல்லை. தொலைவில் இருப்பதால் 'அன்பு' குறைந்து போவதுமில்லை

உண்மை ஒரு போதும் ஆபத்தானது அல்ல. அது நல்லதையே செய்யும். நல்வழியையே காட்டும்.


Unmai Quotes In Tamil

பொய்க்கூறி செழிப்பாக வாழ்வதைக் காட்டிலும் உண்மைக்காக உயிரையே கொடுக்கலாம்.

நீங்கள் வேண்டுமானால் மற்றவர்களை சில மணிநேரம் முட்டாளாக்கலாம். ஆனால் அவர்களை எல்லா நேரத்திலும் முட்டாளாக்க முடியாது. அப்போது உங்கள் நாடகம் வெட்டவெளிச்சமாகும்.

நீங்களே நேர்மையாக திறந்த மனதுடன் இல்லாவிட்டால் வேறு யாருடனும் நீங்கள் உண்மையாக நேர்மையாக இருக்க முடியுமா? நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள்.


Unmai Quotes In Tamil

உண்மைக்காக எதையும் துறக்கலாம். ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதீர்கள்.

உண்மையும் நேர்மையும் உள்ளவனாக வாழ்ந்தால், அஞ்சா நெஞ்சம் கொண்டவனாக இருக்கலாம். யாருக்கும் தலை குனியவேண்டிய அவசியம் இருக்காது.

உங்கள் கண்கள் காணாதவற்றிற்காக உங்கள் காதுகளை நம்ப வேண்டாம். அதும் ஆபத்தாக முடியலாம்.

Unmai Quotes In Tamil

உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பது அடுத்தவர்களுக்காக இல்லை. நமது வாழ்க்கையில் நாம் யார் என்று நம்மை அடையாளப்படுத்துவதற்காக.

நேர்மையாகவும் உண்மையாகவும் இருப்பவர்களைத் தான் வாழ்க்கை அதிகம் ஏமாற்றி விடுகின்றது. ஆமாம். ஏனெனில் உண்மையானவனுக்கு ஏமாற்றத் தெரியாது.

உள்ளத்தில் நம்பிக்கையும் உண்மையும் தைரியமும் இருந்தால் நடக்கும் பாதை நேரானதாகவே இருக்கும். பாதைமாறி பயணிக்க விடாது.


Unmai Quotes In Tamil

பணத்திற்காக உண்மையை விற்ற அற்ப நபரின் மனம், ஒரு போதும் அமைதியாக இருக்காது. அடுத்த கெட்டதை நோக்கி மனம் ஓடும். ஒருநாள் ஒரு ஆழ்குழிக்குள் வீழும்.

உரிமை இல்லாத உறவும், உண்மை இல்லாத அன்பும், நேர்மை இல்லாத நட்பும் என்றும் நிரந்தரம் இல்லை. இதுதான் வாழ்க்கையின் அனுபவப்பாடம்.

ஒரு உண்மையான நல்ல மனிதன் எதிரியைக் கூட வெறுக்க மாட்டான். அவனுக்கு நடிக்கத் தெரியாது.

Unmai Quotes In Tamil

நாம் உண்மையின் பாதையில் நடக்க வேண்டும். ஏனென்றால் உண்மை தான் இறுதியில் வெல்லும்.

உண்மைக்கு ஒத்திகை தேவையில்லை. நடிப்பதற்கு மட்டுமே ஒத்திகை வேண்டும்.

கஷ்ட காலங்களில் தான் நாம் உண்மையான உறவுகளைக் காண்கிறோம். கைகொடுக்க ஓடிவரும் உறவுகளை அடையாளம் கண்டுவிடலாம்.


Unmai Quotes In Tamil

மிகவும் ஆபத்தான பொய்கள் என்பது உண்மைகளை சிதைத்து உருவாக்குவது. அது கொலையினும் கொடூரமானது.

குழந்தைகளும் முட்டாள்களும் உண்மையாக பேசுகிறார்கள். குழந்தைகள் அறியாது பேசுகிறார்கள். முட்டாள்கள் அறியாமையில் பேசுகிறார்கள்.

நேர்மையும் உண்மையும் விலை உயர்ந்த பரிசு. எல்லா மனிதர்களிடமிருந்து அதை எதிர்பார்க்க வேண்டாம். உயர்ந்தவர்களின் அணிகலனாக இருக்கும்.


Unmai Quotes In Tamil

நீங்கள் எதையாவது உண்மையாகவும் நேர்மையாகவும் செய்ய விரும்பினால், அதை எப்போதும் நீங்களே தனியாக செய்து கொள்ளுங்கள். பிறரை நம்பினால் உண்மையும் நேர்மையும் காணாமல் போகலாம்.

தவறு செய்யும் மனிதர்களை பார்த்து தவறாக பேசாதீர்கள். ஏனென்றால் உங்கள் வாழ்க்கை இன்னும் முடியவில்லை.

உண்மையான வார்த்தைகள் எப்போதும் அழகாக இருப்பதில்லை. அழகான வார்த்தைகள் எப்போதும் உண்மையாக இருப்பதில்லை.


Unmai Quotes In Tamil

உண்மை சில நேரங்களில் வலிக்கவைக்கும். ஆனால் இறுதி வரை வாழ வைக்கும். பொய் எல்லா நேரமும் மனிதனைக் கொல்லும் கூர்மையான ஆயுதம்.

உன்னை வெறுப்பவர்கள் வெறுக்கட்டும். ஆனால், நீ எப்போதும் உண்மையாக இரு. காலம்வரும் அதை உணர.

அன்பும் ஒரு நாள் தோற்றுப் போகும், உண்மை இல்லாதவரை நீ நேசித்தால். அன்பு கூட உண்மை இல்லாத அம்பினால் குத்துண்டு சாகும்.


Unmai Quotes In Tamil

பொய்யான உறவுகளுக்கு முன் புன்னகையும் ஒரு பொய் தான். உண்மையான உறவுகளுக்கு முன் கோபம் கூட புன்னகை தான்.

எனக்கு என் வாழ்க்கையில் நான் கஷ்டப்படாமல் கிடைத்த ஒரு பொக்கிஷம் கஷ்டம் மட்டும் தான். அந்த பொக்கிஷமே வாழ்க்கையின் பாடத்தைக் கற்றுத்தந்த நூல்.

ஆணின் அன்பில் மென்மை இல்லாமல் இருக்கலாம். ஆனால் நிச்சயம் உண்மை இருக்கும். மென்மையான பெண் என்பதால் அன்பில் மென்மையை எதிர்பார்ப்பது தவறாகிவிடும்.


Unmai Quotes In Tamil

நேசித்த பின் மறந்தால் அது வெறும் நினைவுகள். வெறுத்த பின்பும் நேசித்தால் அது தான் உண்மையான உறவுகள்.

உனக்குப் பிடித்தவரிடம் அன்பாக இரு. உன்னைப் பிடித்தவர்களிடம் எப்போதும் உண்மையாக இரு.

உண்மையான உழைப்பிற்கு ஊதியம் உண்டு. உண்மையான அன்பிற்கு அர்த்தமும் உண்டு. உண்மையான காதலுக்கு கனவுகள் உண்டு. உண்மையான வாழ்க்கைக்கு உயர்வு உண்டு.


Unmai Quotes In Tamil

மனதில் அன்பு இருந்தாலே போதும், எதுவும் சாத்தியமே. கடினமான இதயம் கூட கரையும். அன்பை மழையாய் பொழியும் போது.

ஒருவரிடம் பேசவேக் கூடாது. என்று முடிவு செய்த பிறகும் அவரிடம் மீண்டும் பேசத் தூண்டும் உணர்வே உண்மையான அன்புக்கான அடையாளம்.

சேர்ந்து நின்றால் ஒற்றுமை வளரும். துணிந்து நின்றால் வலிமை வளரும். அன்பை பகிர்ந்தால் உறவுகள் வளரும். வலிகளை மறந்தால் ஆனந்தம் மலரும்.

அன்பானவர்களுக்காக இறங்கிப்போவதில் தவறில்லை. நம் அன்பு புரியாதவர்களிடம் இருந்து விலகிப் போவதும் தவறில்லை.

Updated On: 6 Oct 2023 9:14 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் பட்டத்தை மீண்டும் அதானி தட்டினார்..!
  2. காஞ்சிபுரம்
    சாலவாக்கத்தில் 101 கேக்குகள் வெட்டி கலைஞர் பிறந்தநாள்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை பணிகள் தீவிரம்
  4. சோழவந்தான்
    சோழவந்தான் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றியவருக்கு, பணி நிறைவு விழா..!
  5. காஞ்சிபுரம்
    கோ-ஆப்டெக்ஸ் ஊழியர் சங்க பொது பேரவை விழாவில் 15 தீர்மானங்கள்..!
  6. மதுரை மாநகர்
    மதுரையில், பணப்பயன்கள் வழங்க முன்னாள் நகர கூட்டுறவு வங்கி பணியாளர்கள்...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஹாக்கி கிளப் சார்பில் நாக்அவுட் ஹாக்கி போட்டிகள்..!
  8. சோழவந்தான்
    இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: மதிமுக துரை வைகோ நம்பிக்கை...!
  9. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் மோசமான நிலையில் இயக்கப்படும் அரசு நகர...
  10. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் மத்திய தேர்தல் கமிஷன் பார்வையாளர்...