unique diwali wishes in tamil-வெடிப்பதைக் குறைத்து சுற்றுச்சூழலைக்காப்போம்..! புகையது பகை..சூழலுக்கு வைக்கும் உலை..!
Unique Diwali Wishes in Tamil -தீபாவளி என்பது தீப ஒளித்திருநாள் என்பதில் இருந்து கிடைத்த ஒரு முழு பெயர்ச்சொல் ஆகும். இந்த பண்டிகை 5 நாட்கள் கொண்டாடப்படுகின்றது. இது இந்து, சீக்கியம், ஜைனம் மற்றும் பௌத்தம் போன்ற மதத்தினர் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக இருக்கிறது. தீபாவளியை இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளிலும் கொண்டாடுகிறார்கள். ஆனால் சில இடங்களில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடுகிறார்கள். அதாவது, வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள் என்னும் இருளை நீக்கி, செல்வம் என்னும் ஒளியைதரும் பண்டிகையாக தீபாவளி என்னும் இந்தப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இது, ஐப்பசி மாதத்தில் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை மற்றும் அதற்கடுத்த சுக்கிலப்பிரதமை, பௌ-பீச்சு ஆகிய நாட்களில் வழக்கமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சில ஆண்டுகளில் ஐப்பசி அமாவாசைக்கு முன்தினம் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடுகிறார்கள். பெரும்பாலான ஆண்டுகளில் தீபாவளி பண்டிகை ஐப்பசி மாத அமாவாசை நாளன்றுதான் வருகிறது. கிரகொரியின் நாட்காட்டிப் படி அக்டோபர் 17ம் நாளிலிருந்து நவம்பர் 15ம் தேதி வரையிலான நாட்களில் தீபாவளி வருகிறது.
இந்தியா, நேபாளம், இலங்கை, மியான்மர், சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிஜி போன்ற நாடுகளில் தீபாவளிப்பண்டிகை அன்று அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். மலேசியா, சிங்கப்பூரில் வாழும் இந்தியர்களும், தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.
சீக்கியர்கள் தீபாவளி - 1577ம் ஆண்டில் தீபாளியன்றுதான், பொற்கோயில் கட்டுமானப் பணிகள் துவங்கினர். அதனால் சீக்கியர்கள் இந்த நாளில் தீபாவளி என்று கொண்டாடுகின்றனர்.
சமணர்களின் தீபாவளி- (ஜைனம்)
ஜைனர்கள் தீபாவளியை மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு நாளாகக் கருதுகிறார்கள். இது தற்போதைய அண்ட யுகத்தின் இருபத்தி நான்காவது மற்றும் கடைசி சமண தீர்த்தங்கரரான மகாவீரர் மோட்சம் அடைந்ததைக் குறிக்கிறது. இது இந்துக்களின் தீபாவளி பண்டிகையான அதே தினத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் சமணர்களுக்கு அந்த ஆண்டின் முடிவையும், அவர்களின் 24 வது தீர்த்தங்கர மகாவீரரின் நினைவு நாளாகவும் நடந்துவருகிறது.
எப்படிக் கொண்டாடுவோம்..?
தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுந்து, எண்ணெய்க் குளியல் (கங்கா குளியல் என்பார்கள்) செய்வது வழக்கம். நல்லெண்ணெய் எடுத்து தாய் குழந்தைகளின் தலையின் நன்றாக தேய்த்துவிடுவார். குளியல் முடித்து புத்தாடை அணிவார்கள். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புக்கள் நிறைய செய்து உறவுகளுக்கும்,நண்பர்களுக்கும், அக்கம்பக்கத்தில் உள்ள அனைவருக்கும் கொடுத்து பரிமாறிக்கொள்வார்கள். பெரியவர்கள் குழந்தைகளுக்கு பரிசுகள் தருவார்கள். சிறியவர்கள் பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவார்கள். தீபஒளித் திருநாளன்று பட்டாசு, மத்தாப்பூ கொளுத்துவது அனைவரின் வாடிக்கை மட்டுமல்ல வேடிக்கையும் ஆகும்.
- தீபங்கள் எங்கும் பட்டொளி வீச.. பட்டாசு வெடிச்சத்தம் பட்..பட்..என்று கேட்க.. புத்தாடை அணிந்து புது நம்பிக்கை, புதிய மகிழ்ச்சியுடன் இந்நாளை கொண்டாடுவோம்.., இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்..!
- ஆண்டுதோறும் தீபாவளி வந்தாலும் கூட என்று துன்பங்கள் தொலைக்கின்றனவோ அன்றுதான் உண்மையான மகிழ்ச்சி தீபாவளி..! இந்த தீபத்தின் ஒளிவெள்ளத்தில் துன்பங்கள் விலகட்டும்.. சூழ்ச்சிகள், எதிரிகள், நம்பிக்கை துரோகிகள் எல்லோரும் நம் நம்பிக்கைக்கு எதிராக காணாமல் போவார்கள்..இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!
- சுழன்றடிக்கும் சூறாவளி கூட நம் நம்பிக்கை கண்டு தூர ஓடவேண்டும்.. தீமைகள் எம்மைக்கண்டு தீண்டாமல் போக வேண்டும். நன்மைகள் எம்மைத் தேடிவரவேண்டும்..நம் இலக்கு வெற்றி பெற கொண்டாடுவோம், இனிய தீபாவளியை..வாழ்த்துக்கள்..!
unique diwali wishes in tamil
- என் அன்பு கண்டு இறைவன் அருள் தர ஓடிவரவேண்டும்..எனக்காக மட்டுமின்றி துன்புற்றோர் அத்தனை பேருக்கும் வளமளிக்க வரவேண்டும்..மகிழ்ச்சியும், சந்தோசமும் பெருகவேண்டும்..! இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..!
- குடத்துக்குள் இட்ட விளக்காக நாம் இருக்கவேண்டாம்..! மலைமீது ஏற்றிய விளக்காக ஊருக்கே ஒளிதரவேண்டும்..! பாரபட்ஷம் எம்மிடையே இல்லை..இருப்பவன் இல்லாதவன் என்ற வேறுபாடு எம்மிடையே இல்லை..எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து வாழ்வாங்கு வாழ இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!
- குதூகலம் கொண்டே குழந்தைகள் ஆட்டம்போட..கோலம்போட்டு பெண்டிர் இங்கு பாட்டுகளும் பாட..! புத்தாடை வாசத்தில் முகமெல்லாம் புன்னகையின் முகவரி..! இனிப்பு பண்டங்களின் வாசத்தில் திண்டாடும் முதியோரின் நாவும்..சில்லரைச் சிதறல்களாய் சிரிப்புச் சத்தம் வீடெல்லாம் மகிழ்ச்சி பொங்கும்..! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!
unique diwali wishes in tamil
- கண்ணைப் பறிக்கும் ஒளி வேண்டாம்..! காதைப் பிளக்கும் ஒலிவேண்டாம்..! எம்முடன் வாழும் காக்கைக்குருவி எம் இன்பத்துக்காக துன்பப்பட வேண்டுமா..? ஒருநாள் கூத்துக்காக காற்றின் தூய்மையைக் கெடுக்கவும் வேண்டுமா..? நன்மை மட்டுமே விளையும் தீபாவளி கொண்டாடுவோம்..! அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!
- மூத்தோருக்கு முந்தைய இளமை நினைவுகள்..இளையோருக்கு எதிர்காலக் கனவுகள்..துள்ளலாக எழும் மனதுடன்..துடிப்போடு எழுவோம்..தீமைகள் தொலையவே..இருளகன்று ஒலிபெருக்கட்டும்..! இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..!
- வாழ்க்கையின் துன்பங்கள் வறுமையால் வந்துவிடலாம்..ஆனால் வெறுமையாய் இருந்ததால் வந்தது என்பதை மன்னிக்கவே முடியாது..உழைப்பின்றி நன்மை தேடினால்..மூதேவிகூட நம்மை மன்னிக்காது..! முயற்சியும் உழைப்பும் துன்பங்கள் ஒழிக்கும் தூய ஆசான்..! ஒளிமயமான எதிர்காலம் பிறக்க, இந்த தீபாவளி திருநாளில் இனிய தீபாவளி வாழ்த்க்கள்..!
unique diwali wishes in tamil
- தீமைகள் வெடித்துச் சிதறும் பட்டாசுபோல சிதறட்டும்..இனிப்புகள் போல நன்மைகள் பெருகட்டும்..மகிழ்ச்சியும் வளங்களும் பெருகட்டும்..இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..!
- இல்லாதோருக்கு ஈந்து..இறையருள் பெறுவோம்..துன்பத்தில் வாடுவோருக்கு உதவிகள் செய்வோம்..இனிப்புகள் நாவுக்கு மட்டுமல்ல..நன்மைகள் செய்திடில் வாழ்க்கைக்கும் சேர்ந்திடும் இனிப்பு..! நல்லவை செய்வோம்..நன்மைகள் அடைவோம்..! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..!
- தீமையை பொசுக்கும் பட்டாசாய் இருப்போம்..ஒளிதரும் மத்தாப்பாய் ஜொலிப்போம்..! இனிமைகள் அள்ளித்தரும் அன்பைத் தருவோம்..ஏற்றம் தரும் வாழ்வுக்கு உழைப்போம்..! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..!
- தாகம் தீர்க்கும் நீர்போல..வெயிலுக்கு நிழல் தரும் மரம்போல வரம்தரும் இறைவன் அருள்போல..இருப்பதை பகிர்வோம் இல்லாதோருக்கு..இறைவன் அருள்வான்..எம் நன்மைக்கே..! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..!
- கோடிகள் இருந்து என்ன பயன்..கொடுக்கும் மனமும் இல்லையென்றால்..? இருப்பதை பகிரும் ஏழையவன் கோபுர உச்சிக்கு இணையாவான்..! கொடுத்து பெறுவோம் மகிழ்ச்சிதனை..இறைவன் முகமது அங்கு அறிவோம்..! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu