Understanding quotes in tamil-தன்னையறிதல் புரிதலின் முகவரியாகும்..!
Understanding quotes in tamil-புரிதலுக்கான மேற்கோள்கள் (கோப்பு படம்)
Understanding quotes in tamil
புரிதல் என்பது விட்டுக்கொடுத்தல் என்று கூறலாம். அதில் முதலில் தன்னைப்புரிதல், தன்னையறிதல் என்பது முதல் பாகம். அதன் பின்னர்தான் மற்றவரை புரிதல். ஒருவர் தன்னை யார் என்று அறிந்து கொள்ளும்போது, தன்னிடம் உள்ள நிறை குறைகளை அலசி ஆராய்ந்து வைத்து இருப்பார்கள்.
Understanding quotes in tamil
அப்படி தன்னைப் புரிந்தவர் என்பது ஒரு அறிவு செறிந்த நிலை. ஒரு ஞானத்தின் நிலை என்று கூட சொல்லலாம்.அப்படியான நிலையில் உள்ளவர்கள் பிறரை புரிந்துகொள்வதில் தடைகள் ஏதும் இருக்காது. குறிப்பாக பிறரிடம் குறைகள் இருந்தாலும் கூட அதை கடந்து செல்லும் பக்குவத்தை பெற்றிருப்பார்கள்.
மற்றவர்களின் குறைகள் குறைகளாகத் தெரியாது. அந்தக்குறைகள் அவர்கள் மீது இரக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். அவர்கள் அறிந்தது அவ்வளவுதான் என்ற கருணை பிறந்திருக்கும். அது மன்னிக்கும் நிலை. மெல்ல மெல்ல அவர்களிடம் உள்ள குறைகளை புரியச் செய்யும் திறனும் இருக்கும்.
ஆகவே, வாழ்க்கையில் பிறரை புரிந்துகொள்ள முதலில் நாம நம்மை அறிதல் வேண்டும். 'உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம். உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்" என்று அப்பாடல் வரிகளை கூர்ந்து கவனித்தால் அதன் பொருள் புரியும்.
Understanding quotes in tamil
இதோ உங்களுக்காக வாழ்க்கையை புரிந்து கொள்வதற்கான அல்லது அறிந்து தெளிந்துகொள்வதற்கான மேற்கோள்கள் தரப்பட்டுள்ளன. தெரிந்து தெளிவடையுங்கள்.
அறிதலைவிட புரிதல் தான் மிகவும் ஆழமானது.நம்மை அறிந்தவர் பலர் இருப்பர். ஆனால் நம்மை புரிந்தவர் ஒரு சிலரே இருப்பர்.
நம்பிக்கை வெற்றியோடு வரும். ஆனால் வெற்றி நம்பிக்கை உள்ளோரிடம் மட்டுமே வரும்.
மனம் உங்களைக் கட்டுப்படுத்தும் முன் உங்கள் மனதைக் கட்டுப்படுத்துங்கள்
நீங்கள் நிறுத்தாத வரை எவ்வளவு மெதுவாகச் சென்றாலும் பரவாயில்லை.
Understanding quotes in tamil
தைரியம் பயத்தை விட ஒரு படி மேலே உள்ளது.
அறிவை விட முக்கியமானது, உங்கள் இலக்கை அடைய உங்கள் விருப்பம்.
செய்ய முடிந்தவன் சாதிக்கிறான், செய்ய முடியாதவன் போதிக்கிறான்.
மலையைப் பார்த்து மலைத்து விடாதே, மலை மீது ஏறினால் அதுவும் உன் காலடியில்.
Understanding quotes in tamil
முயலும் வெல்லும், ஆமையும் வெல்லும், ஆனால் முயலாமை என்றுமே வெல்லாது.
இன்று நீங்கள் உணரும் வலி நாளை நீங்கள் உணரும் பலமாக இருக்கும்.
பல காயங்களுக்கு கண்ணீர் மருந்து. சில காயங்களுக்கு பிரிவு மருந்து. எல்லா காயங்களுக்கும் சிறந்த மருந்து அமைதி.
அடுத்தவர்களை பாராட்டும்போது அவர்களின் மனமும் குளிரும், நம் மனதிலுள்ள பொறாமை குணமும் அழியும்.
Understanding quotes in tamil
போராடி வாழ்வதற்கு வாழ்க்கை ஒன்றும் போர்க்களமல்ல, அது ஒரு பூ வனம். ரசித்து வாழ்வோம்
இளமையில் உன் சேமிப்பு மட்டுமே முதுமையில் உனக்கு கைகொடுக்கும். அடுத்தவர் கையை நம்பி வாழும் வாழ்க்கை நரகம்.
மனம் விசித்திரமானது கிடைத்ததை நினைத்து நிறைவடையாது. கிடைக்காததை நினைத்து தவிக்கும்.
இதயத்தில் குறையிருந்தால் சரிசெய்ய பல வைத்தியர்கள் உள்ளார்கள். உன் மனக்குறைக்கு நீ மட்டுமே வைத்தியன்.
Understanding quotes in tamil
நம் பயம் எதிரிக்கு தைரியம். நம் அமைதி அவனுக்கு குழப்பம். குழப்பத்தில் இருப்பவன் எப்போதும் ஜெயித்ததில்லை.
சில இழப்புகள் வலியை தருகின்றன. சில இழப்புகள் வலிமையை தருகின்றன.
விளையாட்டாக எடுத்துக்கொள்ளும் விசயங்களில் தான் அதிக தோல்விகளைச் சந்திக்கின்றோம்.
முன்னேற்றத்தின் முகவரி எழுதும்போது சின்னச் சின்ன விஷயங்கள் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. சிறிய விஷயம் கூட வெற்றிக்கு உதவும்.
Understanding quotes in tamil
தோல்வி உன்னை வீழ்த்தும் போதெல்லாம் குழந்தையாகவே விழு. மீண்டும் மீண்டும் எழுந்து நடப்பதற்குத் தயாராகு.
நீ சுயமாகவும் சுதந்திரமாகவும் சிந்தித்ததை எல்லோரும் விரும்புகிறார்களா இல்லை வெறுக்கிறார்களா என நினைத்து ஒரு போதும் ஒரு போதும் கவலைப்படத் தேவையில்லை. புரியும்போது தேடி வருவார்கள்.
உன்னை விட்டு விலக நினைப்பவர்களுக்கு பாரமாய் இருப்பதை விட, அவர்களைப் பாராமல் இருந்து பார். உன் மதிப்பு அவர்களுக்குத் தெரிய வரும்.
Understanding quotes in tamil
வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொள்ள உன் பெற்றோர் கடந்து வந்த பாதையை அறிந்து கொண்டாலே போதுமானது.
தவறுகள் மட்டும் தண்டனைக்குரிய குற்றம் அல்ல. நேசிக்கும் மனதை அலட்சியம் செய்வதும் அலைக்கழிப்பதும் கூட, தண்டனைக்குரிய குற்றம் தான்.
அனைத்துக்கும் காரணம் தேடிக்கொண்டிருந்தால் வாழ்க்கையை ரசித்து வாழ முடியாமல் போய்விடும்.
வேறு யாராவது வந்து துடைத்துவிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பில்லாமல் நம் கண்ணீரை நம் கையே துடைத்துக்கொள்ளும்போது மனம் தெளிவான முடிவுக்கு வந்துவிடுகின்றது.
Understanding quotes in tamil
பிடித்தவர்களின் நிராகரிப்பும் அலட்சியமும் வலியைக் கொடுத்தாலும்கூட புரிதல் உள்ள ஒரு அழகிய வாழ்க்கைக்கான வழியையும் காட்டுகிறது.
பாசம் இருக்குமிடத்தில் அதிகாரம் இருப்பதில்லை அதிகாரமிருக்கும் இடத்தில் அன்பு நிலைப்பதில்லை
வெற்றி பெறும் வரை தன்னம்பிக்கை அவசியம். வெற்றிபெற்ற பின்னர் தன்னடக்கம் அவசியம்
தொடும் தூரத்தில் வாழ்க்கையிருக்க, தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கின்றோம், வாழ்க்கையைத் தேடி. இல்லாத ஒன்றுக்கு ஏங்கும் மனம்போல.
Understanding quotes in tamil
நம்முடைய கொள்கையில் உறுதியும் மனதில் தெளிவும் இருந்துவிட்டால் நம்மை யாராலும் வீழ்த்திவிட முடியாது.
முடிவுகளை தயங்காமல் எடுக்கும் திறன் ஒருவரிடம் இருந்துவிட்டால் முன்னேற்றத்திற்கான வாயிற்கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும், சிவப்புக்கம்பளம் விரித்து.
சூரியன் உதிக்கும் போதும் மறையும் போதும் ரசிக்கும் உலகம், உச்சிக்கு வந்தால் திட்டித் தீர்க்கும் சூரியனை மட்டுமல்ல, மனிதனின் வளர்ச்சியையும் கூட
கட்டளை இட விரும்புகின்ற ஒருவன் முதலில் பணிதலைக் கற்றுக்கொள்ளவேண்டும்.- அரிஸ்டாட்டில்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu