/* */

True love kavithai tamil-காதல் இல்லா உள்ளம் இசையில்லா பாடல்..! காதல் கவிதை படிங்க..!

காதல் செய்யத் தெரியாத உள்ளம் கற்பாறைக்குச் சமமாகும். சண்டி வீரன் என்றாலும் காதல் வயப்பட்டால் சுண்டி இழுக்கப்படுவான், ஒரே விழிப்பார்வையில்.

HIGHLIGHTS

True love kavithai tamil-காதல் இல்லா உள்ளம் இசையில்லா பாடல்..!  காதல் கவிதை படிங்க..!
X

true love kavithai tamil-காதல் கவிதை (கோப்பு படம்)

True love kavithai tamil

காதல் பரவசமானது. இதயங்களின் கம்பியில்லா மின் இணைப்பகம். விழிகளில் தொடங்கி இதயத்தில் முடியும் ஒரு வேதிமாற்றம். காதலியைக் காதலனும் காதலனைக் காதலியும் பார்க்காமல் இருந்தால் நெஞ்சம் விம்மிப்புடைக்கிறதே.., யார் சொல்லித் தந்த பாடம். காதல் ஒரு வேதம். மொழிகள் ஒரு தடையல்ல; ஜாதியும் மதமும் தடையல்ல.எத்தனைக்காதல் பார்த்து விட்டோம். உண்மைக்காதல் என்பது எது? வாழும் வாழ்க்கையே அதற்கான நெறிமுறை. காதலர் வாழ்ந்தால் காதலும் வாழும்.


காதல், ஒரு இன்பம் சுரக்கும் அட்சய பாத்திரம். காதலை அள்ள அள்ளக் குறையாது. அள்ள அள்ளப் பெருகும். காதல் ஒரு குளிர்பிரதேசம். ஆடையாக தழுவிடத்தோன்றும். காதல் ஒரு இன்பத்தேன். முழுதுமாய் அள்ளிக்குடித்திடத் தோன்றும். காதல் கருவறைக் குழந்தை. இன்பமாக உள்ளுக்குள் சுருண்டு கொள்ளத்தோன்றும். .

காதல் இல்லாத வாழ்க்கை பாலைவனத்து வாழ்க்கை. காதலோடு வாழும் வாழ்க்கை வசந்தகாலத்து பசுஞ்சோலை வாழ்க்கை. காதலோடு வாழ உங்களுக்காக காதல் கவிதைகள். காதலோடு வாழுங்கள்.

நமக்கான காதல் தேசம்..!

நீ

எனைவிட்டு

தள்ளியிருக்கும்

நாட்களிலெல்லாம்

எதிர்பார்ப்பு கூடுகிறதே..

ஏனடி ..?

அந்த காதல் தேசத்துக்குள்

வன்முறை இல்லை.

கோபமோ வெறுப்போ நுழைய

அனுமதி இல்லை..!


ஆமாமடி

அது நமக்கான

காதல் தேசம்

அங்கு

வேறு யாருக்கும்

குடியுரிமை இல்லை..!

அந்த காதல் தேசத்தின்

உரிமையாளர்கள்

நாம் மட்டுமே..!

True love kavithai tamil


காதல் காவியம்..!

வெறும் அணைப்புக்காகவோ

ஒரே ஒரு

முத்தத்திற்காகவோ

பூத்த காதல் இல்லை

இது

உள்ளத்து

வான்பரப்பில்

எட்டாத உயரத்தில்

பறக்கும்

அன்றில் பறவைகளின்

காதல்..!

வார்த்தைகளின் முத்துகள்

கோர்த்துக் கோர்த்து

எழுத

கவிதைகள் என்று

எண்ணிவிடாதே,

இது காவியம்..!

இலக்கண வரம்புடன்

செதுக்கி செதுக்கி

உருவாக்கிய

காதல் காவியம்..!

True love kavithai tamil


வளம்சேர் ஊருணி..!

மெழுகுவர்த்தி

தீர்ந்தபின்னும்

சுற்றிவரும் பூச்சிகள் போல

என்னுயிருருகி

உன்னைச் சுற்றி

வந்து

உயிர்விடவும் தயாராகிறது..!

நீ இல்லாத

வெற்றுச் சூன்ய வாழ்க்கை

வெறுத்துப்போகிறது..!

வா..

வந்தெனை அணை..!

துணையென எனை

கணையாழிக்குள் கையகப்படுத்து..!

விழிநீர் விழும் முன்

வழிதேடி வந்துவிடு

நான்

குழிதேடி செல்லும்

முன்னே..!

காரணங்களைத் தேடி

அலையாதே..

உனக்குள்

நான்

காரணியாக இருக்கும்போது..

ஊரணி தரும் பயனால்

ஊருக்கு வளம் சேர்க்கும்..

காரணி

நீ தரும்

ஓர் வார்த்தை

என்

உயிருக்கு

வளம்சேர்க்கும்,

உன்னை

மகிழ்வோடு வாழவைக்க..!

True love kavithai tamil


பைத்தியம் என்றார் ஊரார்..!

எத்தனைக்கவி வந்து

மொத்தமாய்

உனை

கவிதையில் வடித்தாலும்

அந்தக் கவிதைகள்

உனக்குச் சமமாய்

ஆகவில்லை..!

ஊர்முழுதும்

சுற்றிவந்தேன்..

உன்னைக் காண..

உன்னைத் தவிர

மற்றவரைக் கண்டேன்

கால்கள் ஏனோ

நிற்கவில்லை

இன்னும்..!

ஓய்வெடுக்கத் தோன்றவில்லை

உள்ளம் மட்டும்

உற்சாகத்தில்

என் விழிகள் தேடும்

உன்

உருவம் எனும் கட்சி தேடி..!

சாலையில் போவோரெலாம்

பாவம் பைத்தியம்

என்கிறார்

என்னைப்பார்த்து

உண்மையை உரைத்துச்

சென்றார்

என்று

என்னுள்ளம் குதித்து

குதூகலமாகிறது..

உன்னை மட்டுமே

எண்ணி எண்ணி

வாழும்

பைத்தியம் தானே

நான்..!

True love kavithai tamil


அன்பு வாழ்க்கை..!

காதல் என்பது

இயற்கையின் வடிவம்..!

காமத்தின் அடிநாதம்

காதல்..!

உண்மைக்காதலின்

உள்ளத்துக்குள்

காதல்

ஓங்கியிருந்தால்

காமம்

காணாமல் போயிருக்கும்..!

அன்பின் பிரபஞ்சத்தில்

காதல்

வாழ்க்கையில்

கொஞ்சம்

காமமும் தேவைப்படும்..

அடுத்த தலைமுறை

படைக்க..!

காமத்தால் வந்த

காதல்

மோகத்தின் முப்பது

நாட்களில்

தேய்பிறையாய்

தேய்ந்து மறைந்துபோகும்..

ஆழ்மன

அன்பால் வளர்ந்த

காதல்

வளர்பிறையாய்

வளர்ந்து நிற்கும்..!

காலங்கள் கடந்து

இளமை தொலைந்த

நேரங்களிலும்

அன்பு மட்டும்

மாறாது..

அன்பின் துணை

காணாது

உடலேனோ

தேறாது..!

அது கற்பாறையில்

உளியால்

செதுக்கிய

அன்பு வாழ்க்கை ..!

True love kavithai tamil


ஊமைக்கவி..!

நித்தம் ஒரு கவிதை

படைக்கிறேன்..

சத்தம் எழாமல்

இதயம்

உடைக்கிறேன்..

ஆழ்கடல் மூச்சடக்கி

வனவயல்களில்

மூழ்கிப்பார்க்கிறேன்

வண்ண வண்ண

மலர்கள்போல

பட்டாம்பூச்சிகள் பறக்கின்றன..!

எண்ணங்களின்

மைகுழப்பியே

சித்திரமாய் உனை

தீட்டிப்பார்க்கிறேன்..!

சிதைந்து போயின

வண்ணத்துப்பூச்சிகள்..

கனவுகள் கலைந்த

விழிகளை உயர்த்தி

மொழிகளை நானும்

தேடுகிறேன்..!

உனக்கென

தோதாக

ஒரு வார்த்தியைக் காணேன்..

உன்

உருவம் பார்த்து

ஊமையாகி நின்றேன்..!

எந்தச் சொல்லெடுத்து

உனைப் பாடுவேன்..?

கவிதைகளின் கலவையாய்

நீ இருக்கிறாய்..!

எந்தச் சொல்லெடுத்து

உனைப் பாடுவேன்..?

ஊமைக்கவியாய்

உறைந்து நின்றேன்..!

-கவிஞர் பூங்குன்றன்

Updated On: 23 Aug 2023 11:07 AM GMT

Related News