கணவன்,மனைவிக்கான உண்மை அன்பின் மேற்கோள்கள் என்னென்ன?

true love husband wife quotes in tamil-கணவன்-மனைவி (மாதிரி படம்)
true love husband wife quotes in tamil-இந்தியா பல மொழிகள், துணை கலாச்சாரங்கள் மற்றும் மரபுகள் செறிந்த பூமி. பல்வேறு மொழிகள்,பழக்கவழக்கங்கள்,பண்பாடுகள் இருந்தாலும் இவை அனைத்தும் பொதுவான ஒரு முக்கிய விஷயத்தைப் பறைசாற்றுகிறது.
இந்திய கலாசாரத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடு மாறாத ஒரு பண்பாட்டுச் சின்னமாக இன்றளவும் நீடித்து வருகிறது. கணவன்,மனைவி உறவை எப்படி நெருக்கமாக்கிக்கொள்ளாம்? அல்லது இணக்கமாக எப்படி வாழ்வது என்பதற்கு சில சின்ன சின்ன ஆலோசனைகள் :- true love husband wife quotes in tamil-
- இனிய பாடல்களை கணவனும் மனைவியும் இணைந்து பாடுவதன் மூலம் அவர்களுக்கிடையேயான நெருக்கம் அதிகரிக்கும்.
- சின்னச் சின்ன விஷயங்களில் ஒருவருக்கு ஒருவர் பிடித்த மற்றும் பிடிக்காத விஷயங்களை பரிமாறிக்கொள்வது இனிமையான வாழ்க்கையை தொடங்க வழிவகுக்கும்.
- கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் பிடித்த விஷயங்களை அடிக்கடி செய்யலாம் அல்லது பகிர்ந்துகொள்ளலாம்.
- சிறு வயது சந்தோஷங்களை, பள்ளி,கல்லூரி அனுபவங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளலாம். காதல் செய்திருந்தாலும் கூட பகிர்வது நெருடலை தவிர்க்கும். ஒருவருக்கு ஒருவர் மீதான நம்பிக்கை அதிகரித்து அன்பு கூடும்.
- சிறு வயது நட்பு குறித்தும் தயக்கமில்லாமல் பகிர்ந்துகொள்வது பேதமில்லாமல் எல்லோரிடமும் பழகிய அனுபவத்தை கொடுக்கும்.
- கணவனோ அல்லது மனைவியோ சொல்வதை முழுவதுமாக கேட்டு அதற்கு பதில் அளிப்பது உங்கள் மீதான மரியாதையை அதிகரிக்கச் செய்யும். தவறு என்றால் தயங்காமல் தவறு வேண்டும், சரி என்றால் அதை பாராட்டவும் தயங்கக்கூடாது.
- சந்தர்ப்பம் கிடைக்கும்போது ஒரு இடத்தில் ஒளிந்துகொண்டு பயமுறுத்தி பயந்த மனைவியை கட்டிப்பிடித்து சமாதானப்படுத்துவதும், கணவன் அல்லது மனைவியின் குடும்ப முக்கியஸ்த்தர்களை பிரிய நேரும்போது அவர்களுக்கு ஆதரவாக தோளோடு தோள் கொடுப்பது குடும்ப உறவில் மிக முக்கிய அம்சமாகும்.
- நேரம் கிடைக்கும்போதெல்லாம், பார்க், பீச், அல்லது ஆறு போன்ற இடங்களுக்கு சென்று நிறைய பேசிக்கொள்ளலாம்.
- முகத்தின் அளவிலேயே துணை உறங்கவில்லை அல்லது சிறு வாட்டம் கண்டு அதற்காக அக்கறை செலுத்தி உடனே விசாரிப்பது, அதற்கு தீர்வு தரும்படியாக நடந்துகொள்வது சிறப்பான உறவுக்கு வழிவகுக்கும்.
- மகிழ்ச்சியாக இருக்கும்போது தேவையற்ற சம்பவங்களை நினைவு கூறுவது, தேவையற்றதாகும். சின்ன சின்ன சண்டைகளில் ஊடல் பிறக்க வேண்டும். ஊடலுக்கு பின்னான கூடலே அன்பின் ஆழத்தை வலிமைப்படுத்தி.
- குடும்ப வாழ்க்கையில், பொருளாதாரம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு அன்பும் முக்கியம் என்பதை உணர வேண்டும்.
- தனி மனித ஒழுக்கமே ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டமைப்பை வலுப்படுத்தியது. அதை எதிர்பார்ப்பதுபோலவே இருவரும் அதன்வழி நடந்துகொள்ள வேண்டும்.
- கணவன் மனைவி என்ற உறவை இருவருமே காப்பாற்றினால் மட்டுமே அது உயிர்ப்போடு நீடிக்கும்.
- கணவனும், மனைவியும் விட்டுக்கொடுத்து வாழ்ந்து அதில் கிடைக்கும் சந்தோசங்களை நல்ல நண்பர்களாக யோசிக்க ஆரம்பித்தாலே வாழ்க்கை இனிமையானதாக இருக்கும். true love husband wife quotes in tamil
எல்லா பெண்களுக்கும் கிடைப்பதில்லை
எந்த சூழ்நிலையிலும் உன்னை விட்டு கொடுக்க மாட்டேன்
விட்டு செல்லவும் மாட்டேன் என்று இருக்கும் ஒரு ஆண்.
உயிர் மெய் எழுத்துக்களால் நிறைந்திருக்கும்
எனது கவிதைகள் மட்டும் உனக்கு இல்லை
அதில் கலந்திருக்கும் உயிரும் உனக்கானது தான்.
என் இதயம் இருப்பது என்னவோ
எனக்குள் தான் ஆனால் அது துடிப்பது
உனக்காக மட்டும் தான்.
- நான் கேட்காமல் கிடைத்த வரம் நீ
இப்போது வரமாக கேட்கிறேன்
உன்னை பிரியாத வாழ்வு வேண்டும் என்று- true love husband wife quotes in tamil
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu