காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.. காலச்சக்கரம்..உருள்வதுதானே..?!

Neram Quotes in Tamil
X

Neram Quotes in Tamil

Neram Quotes in Tamil-காலம், நேரம் என்பதெல்லாம் ஒரே பொருளைத் தந்தாலும் காலம் என்பது பொழுதையும், நேரம் என்பது குறிப்பிட்ட பொழுதை குறிப்பிட்டுக் கூறுவதாகும்.

Neram Quotes in Tamil

காலம் பொன்போன்றது என்று சொல்வது அதன் வேகத்தை உணர்த்துவதற்காகவே. பிறந்தது முதல் இறப்பு வரை காலம் நம்மை இழுத்துச் செல்வதே வாழ்க்கை.உலகம் உருள்வதால் ஏற்படும் காலமாற்றத்தை யாரும் கட்டிபோட்டுவிட முடியாது. பிறந்த அடுத்த நொடி முதல் நாம் முதுமையை நோக்கி நகர்கிறோம். நகராவிட்டாலும் கூட அது நம்மை இட்டுச் செல்லும். காலம் குறித்த மேற்கோள்களை பார்ப்போமா..

  • கடந்த காலத்தை நினைக்காதே.. கண்ணீர் தான் வரும்.. எதிர் காலத்தை எதிர் பார்க்காதே..இந்த நிமிடம், இந்த நொடி தான் உண்மை.. அதை அனுபவி.. நல்லதையே நினை, நல்லதே நடக்கும்..
  • கடைசிகாலத்திற்கு தேவைபடும் என்று, ஓடி ஓடி உழைக்கிறோம்.. எது கடைசி காலம் என்று தெரியாமலேயே..!
  • காலம் கடந்தாலும் நமக்காக படைக்கப்பட்டது நம்மை வந்து சேரும்..
  • காலத்தின் மதிப்பு தெரிந்தால், வாழ்வின் மதிப்பு தெரிந்துவிடும்..

Neram Quotes in Tamil

  • காலம் என்றுமே நம் கேள்விக்கு விடைக் கொடுப்பதில்லை..பதில் கிடைக்கும் என்று நம்மை நாமே பழக்கிக் கொள்கிறோம்..
  • உங்களின் இன்றைய செயல் தான் உங்களுக்குரிய நாளைய பொழுது எது என்பதை தீர்மானிக்கும்..
  • நேரம் ஒருவரை உருவாக்குகிறது, சோதிக்கிறது, தலைகுனிவைத் தருகிறது.. ஆனால் தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு அனுபவம் எனும் வெகுமதியை அளிக்கிறது..
  • காலம் போடும் கணக்கை கடவுளை தவிர வேறுயாரும் அறிவாரில்லை.. கடமையை செய், கடவுளை நினை... நடப்பதெல்லாம் நன்மைக்கே..

Neram Quotes in Tamil

  • காயங்கள் குணமாகும், சில காலம் காத்திரு.. கனவுகள் நினைவாகும், சில காயம் பொறுத்திரு..
  • எல்லாத் துயரங்களையும் ஆற்றிவிடும் சக்தி, காலத்திற்கு இருக்கிறது. நம்பிக்கையுடன் செயல்படு..
  • இன்று யோசிக்காமல் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் பின்பு யோசிக்க வைத்துக் கொண்டே இருக்கும் வாழ்நாள் முழுவதும் சிந்தித்து செயலாற்றுங்கள்..
  • நேரத்தை குறைக்க முடியாது.. பாரத்தை மறைக்க முடியாது.. நேரம் நகர நகர பாரமும் நகர்ந்தே தீரும்..காத்திரு..
  • உனக்கான நேரம் வரும் நிச்சயம் வரும். அதுவரை காத்திரு..
  • காலம் என்றுமே உனக்காக நிற்காது. நீ தான் காலத்திற்கு தகுந்த மாதிரி, உன்னுள் மாற்றத்தை வெளிக்கொணர வேண்டும்.
  • காலம் ஒவ்வொரு துன்பத்திற்கு பிறகும் ஏதோ ஒரு மகிழ்ச்சியினை ஒளித்து வைத்திருக்கும்.. நம்பிக்கை இழக்காமல் காத்திருங்கள்..
  • சென்று கொண்டிருப்பவன், காலத்தை வென்று கொண்டிருக்கிறான். நின்று கொண்டிருப்பவன், காலத்தை தின்று கொண்டிருக்கிறான்..
  • தீர்க்க முடியாத சில பிரச்சினைகளுக்கு எதுவுமே செய்ய வேண்டாம். அமைதியாக இருந்து விடுங்கள், காலம் இதனை தீர்த்துவிடும்..
  • நல்ல யோசனை தோன்றும்போது அதை உடனே செய்து விடுங்கள், ஏனென்றால் காலம் உங்களுக்காக காத்திருக்காது...
  • காற்றடித்தால் பறக்கும் காகிதம் போல, காலம் வரும் வரை காத்திருந்து பறக்கக் கற்றுக் கொள்.
  • நிரந்தரம் என்று சொல்லிக் கொள்வதெல்லாம் நிரந்தரமின்றி போக மாற்றங்கள் மட்டுமே நிரந்தரமாக்கிப் போகும் காலத்தின் சுழற்சியால்..!
  • காலம் என்பது கண்ணீரை மட்டுமல்ல காயங்களையும் மாற்றும் கேள்விகளை மட்டுமல்ல பதில்களையும்

மாற்றும்..!

  • கடந்து வந்த பாதைகள் கடத்தி போக மறுப்பதில்லை.. காலம் கடந்த நினைவுகளை பரிசளிக்க தவறுவதில்லை..!
  • சண்டை போட்டு பேசாமல் இருக்கும் காலம் போய் பேசினால் சண்டை வரும் என்று பயந்து பேசாமல்

இருக்கும் காலத்தில் வாழ்கிறோம்..!

  • இதெல்லாம் ஒரு நாள் கடந்து போகும் என்று காத்திருந்தேன் ஆனால், எதுவுமே கடந்து போகாது

எல்லாம் பழகிப்போகும் என்று உணர்த்தி விட்டது காலம்..!

  • நீ எவ்வளவு நன்மைகள் செய்து இருந்தாலும் அதை ஒரு நொடியில் மறந்து விடும் இவ்வுலகம்..நீ தெரியாமல் செய்த ஒரு தவறை காலம் முழுவதும் சொல்லிக்கொண்டே இருக்கும்.
  • ஓடி வந்து மூச்சு வாங்கும் போது தான் தெரியும் தண்ணீரின் அருமை..அது போல தான் கடந்து வந்த பிறகு தான் தெரியும் காலத்தின் அருமை..!
  • கடந்து வந்த பின்பே கண்டு உணர்கிறேன்..என்னை கலங்கடித்த காலமெல்லாம் கடுமையான காலம் அல்ல.. என் வாழ்வை வடிவமைத்த காலம் என்று..!
  • காலம் கற்றுக் கொடுக்கும் பாடம் போல எந்த ஒரு ஆசானாலும் கற்றுக் கொடுக்க முடியாது..!
  • வாழ்த்தினாலும் தாழ்த்தினாலும் சிரித்துக் கொண்டே இரு. காலம் அவர்களுக்கு பதில் சொல்லும்..!
  • கசப்பான நினைவுகள் காலம் முழுவதும் கசப்பதில்லை..நிகழ்வுகள் மாறும் போது நினைவுகளும் இனிக்கும்..!
  • தானாக உயரும் வயது..விடாமல் துரத்தும் காலம்..தடுக்க முடியாத நேரம்..கடக்கத் துடிக்கும் இளமை..

காலைத் தடுக்கும் சமூகம்..தொட வேண்டிய இலக்கு..இத்தனை போராட்டங்கள் தான் வாழ்க்கை..!

  • பாசம் வையுங்கள் தவறில்லை ஆனால் பைத்தியம் ஆகி விடாதீர்கள். ஏனெனில் இங்கு முடிவே இல்லாத

வாழ்வும் இல்லை.. பிரிவே இல்லாத உறவும் இல்லை..எல்லாம் சில காலம் தான்..!

  • பொறுத்தார் பூமி ஆழ்வார் என்பது அந்த காலம். பொங்கி எழுந்தால் தான் இருப்பதையாவது காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பது இந்தக் காலம்.. இது தான் இன்றைய வாழ்க்கை..!

Neram Quotes in Tamil

  • எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று நீயும் பின்தொடராதே..உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு...
  • சந்தேகத்தை எரித்துவிடு நம்பிக்கையை விதைத்துவிடு மகிழ்ச்சி தானாகவே மலரும்...
  • பறப்பதற்கு வசதிகள் இருந்தாலும் தரையில் இருக்கவும் கற்றுக்கொள்...சிறகுகளை இழந்தாலும் வருந்தமாட்டாய்...
  • நம்மை அவமானப்படுத்தும் போது அந்த நொடியில் வாழ்க்கை வெறுத்தாலும் அடுத்த நொடியில் இருந்துதான் நம் வாழ்க்கையே ஆரம்பமாகுது...
  • பல முறை முயற்சித்தும் உனக்கு தோல்வி என்றால் உன் இலக்கு தவறு சரியான இலக்கை தேர்ந்தெடு..
  • எந்த சூழ்நிலையையும் எதிர்த்து நிற்கலாம். தன்னம்பிக்கையும் துணிச்சலும் இருந்தால்...
  • ஒரு நாள் விடிவுகாலம் வரும் என்ற நம்பிக்கையில் தான் அனைவரின் வாழ்க்கையும் நகர்ந்துக்கொண்டிருக்கு...


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!