Thurogam kavithai-துரோகி கூட வாழ்க்கையின் பாடமாகிறான்..!

Thurogam kavithai-துரோகி கூட வாழ்க்கையின் பாடமாகிறான்..!
X

Thurogam kavithai-துரோகம் கவிதைகள் (கோப்பு படம்)

துரோகம் செய்வது சிலருக்கு கற்கண்டு சாப்பிடுவது போன்றது. அந்த துரோகத்திற்கு சிறிதும் வருத்தம் கொள்ளாத மிருக மனம் கொண்டவர்கள்.

Thurogam kavithai

துரோகம் என்பது ஒருபவர் மீதான நம்பிக்கையை சிதைக்கும் செயல்பாடு. இதில் உறவுகள் மற்றும் நண்பர்கள் அடங்குவர். சுயநலம் மேலோங்கி இருப்பதால் மட்டுமே துரோகம் சாத்தியம் ஆகும். எனில் அங்கு உண்மை அன்பு என்பது கொதிக்கும் நீரில்போட்டு துடிக்கவைக்கப்படுகிறது. அதனால்தான் துரோகத்தால் பாதிக்கப்பட்டவரின் மனதும் புழுவாக துடிக்கிறது.

யாரோ அறியாத ஒருவர் செய்யும் துரோகம் தராத வலியை, அறிந்தவர் செய்யும்போது அந்த துரோகத்தின் வலி அதிகமாகிறது. துரோகம் ஒருவர் மீதான நம்பிக்கையை சிதைக்கிறது.அவர் மீதான அன்பை புதைக்கிறது.

Thurogam kavithai


துரோகத்தின் வலிகளை உணர்த்தும் கவிதை வரிகளை நீங்களும் படித்து வாழ்க்கையில் சூதானமா இருங்க.

இரண்டரை மணி நேர படத்துக்கே வில்லன் தேவைப்படும் போது, நம் நீண்ட நெடிய வாழ்க்கைக்கு, எதிரியும், துரோகியும் அவசியம் தானே?? வாழ்க்கையும் ஒரு திரைப்படம்தான்.

முன்னால் பொய் பேசுவதும், பின்னால் மெய் பேசுவதும், உண்மையிலேயே பச்சை துரோகம்.

பகைவனை மன்னிக்கலாம்.ஆனால் நம்பிக்கைத் துரோகியை மன்னிக்கவே கூடாது.

ஏமாற்றத்தை விட துரோகம் சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தத் தான் செய்கிறது. இவர்களால் எப்படி இவ்வளவு காலம் தொடர்ந்து தெரியா வண்ணம், அறியா வண்ணம் நடிக்க முடிந்தது என்பதை எண்ணி.


Thurogam kavithai

கூடவே உக்காந்து "குழி பறிப்பது" அந்த காலம். "குழி பறித்த" பின் கூட வந்து உக்காருவது இந்த காலம். - அல்ஃபியோ

பல கஷ்ட நஷ்டங்களை சந்தித்து, துரோகத்தின் வலியை முழுவதும் உணர்ந்தபின் தான், நம்மை உணர்ந்து நம்மை மாற்றிக்கொண்டு புது மனிதனாக மாறுகிறோம்.

நீ தான் உலகம் என்று நம்பி வாழும் உறவை ஏமாற்றுவது, கோடி முறை முதுகில் குத்துவதற்குச் சமம். தெரியாமல் கூட ஏமாற்றிவிடாதீர்கள்.

ஏமாந்தது எனக்கு பெரிய வருத்தம் தரவில்லை. ஆனால், உண்டு, குடித்து, உறங்கி, கூடவே இருந்த போது துரோகி என்பதை அடையாளம் காணத் தவறி விட்டேன் என்பது தான் தாங்கமுடியா வருத்தம் தருகிறது


Thurogam kavithai

துரோகம் கொலைக்கு சமமானது. தெரியாமல் கூட துரோகத்தை யாருக்கும் பரிசளித்து விடாதீர்கள். சிலர் துணிந்து வென்று விடுவர். சிலர் துவண்டு முடங்கி விடுவர். - அல்ஃபியோ

பாசம் என்று பாசாங்கு செய்யும் உறவு, பணம் இழந்து, புகழ் இழந்து, மதிப்பிழந்த காலத்தில் மாயமாகிப்போகும் பாசம். அப்போதுதான் தெரியும் அது வேஷம் என்பது.

துரோகி சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப, இப்படியும் பேசுவான், அப்படியும் பேசுவான். அதை வலி என்று எண்ணினால் நீ வாழ்க்கையில் வீழ்ந்து விடுவாய். அனுபவம் என்று எண்ணினால் ஜெயித்து விடுவாய்.

உன்னால் ஏமாற்றப்பட்டவனை ஏமாளி என்று எண்ணிவிடாதே. நீ ஏமாற்றியது அவனை அல்ல, அவன் உன்மேல் வைத்த ஆகப்பெறும் நம்பிக்கையை.


Thurogam kavithai

துரோகத்தால் தொலைந்த புன்னகையை, அன்பால் மீட்டெடுக்க முடியும் என்றால் அந்த அன்பு வாழ்க்கையின் வரம் எனலாம்.

ஒரு பொய்யின் ஆழமே சிலரின் மீதான நம்பிக்கையை அழிக்க காரணம் ஆகின்றது.

பாம்பு எத்தனை முறை தன் தோலை உரித்தாலும், அது பாம்பு பாம்புதான். அதேபோலவே சில மனிதர்கள் நல்லவர்போல உங்களை அணுகினால், அவர்களை உங்கள் வாழ்க்கையில் அனுமதிக்கும் முன் இதை நினைவில் கொள்ளுங்கள்.

வாழ்க்கையில் அடிபட்ட பின்பு தான் சிலரின் உண்மையான முகங்களை புரிந்து கொள்ள முடிகிறது. வாழ்க்கை என்பது ஒரு புத்தகம்தானே.


Thurogam kavithai

மன்னித்து விடுங்கள் உங்களை ஏமாற்றியவர்களை. ஆனால், மறந்தும் கூட அவர்களை மீண்டும் நம்பி விடாதீர்கள். நீங்களே ஏமாளியாவீர்கள்.

ஒரு முறை ஏமாற்றிய ஒருவர் மறுமுறை ஏமாற்றாத போதும் மனம் ஏனோ அவரை உண்மை என ஏற்க மறுக்கின்றது. துரோகம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

ஏமாற்றியவர்களுக்கு நன்றி சொல்லுங்கள். அவர்கள் ஏமாற்றத்தைச் சொல்லித் தரவில்லை. இனி ஏமாறாமல் இருக்க அனுபவ பாடத்தைக் கற்றுத் தந்துள்ளனர்.

எத்தனை முறை நீ, ஏமாற்றப்பட்டாலும் ஒரு போதும் நீ அடுத்தவரை ஏமாற்றக் கற்றுக்கொள்ளாதே. அவரவர் பலனை அவரவர் அனுபவிப்பர். தர்மம் தோற்றதாய் சரித்திரம் இல்லை.


Thurogam kavithai

மகா தூரோகிகள் யார் தெரியுமா? துரோகம் செய்து விட்டு, அந்த குற்ற உணர்வு சிறிதும் இல்லாமல் நல்லவர்கள்போல திரிபவர்கள் தான்.

துரோகத்தால் வீழ்ந்ததாக சரித்திரங்கள் பல உள்ளன. அதேபோல துரோகம் செய்துவிட்டு நன்றாக வாழ்ந்ததாக சரித்திரங்கள் இங்கு இல்லை.

எவ்வளவு நம்பிக்கை வைத்தாலும் துரோகம் முளைக்காத இடங்கள் இரண்டு. ஒன்று தாயின் மடி..மற்றொன்று இறைவன் அடி

இங்கே கேட்டதை அங்கு சொல்வதும், அங்கே கேட்டதை இங்கு சொல்வதும் துரோகத்தின் முதல் இலக்கணம். அவர்களை நம்பிவிடாதே.


Thurogam kavithai

பிறரை வேதனைப்படுத்தி காணும் இன்பம் பிணத்தை பார்த்து சிரிப்பதற்கு சமம். அவர்களும் பிணம் போன்றோரே.

யாரையுமே நம்ப முடியவில்லை என்ற ஒற்றை வார்த்தையில் ஒளிந்திருக்கிறது நெருங்கிய உறவு ஒன்றின் துரோகம்.

நம்மில் பலருக்கு எதிரிகளை எதிர்க்கும் துணிவு கூட துரோகிகளை எதிர்க்க இருப்பதில்லை.ஏனென்றால் துரோகி ஒருகாலத்து நண்பனாக இருக்கலாம்.

யாரையும் நம்பி வாழாதே. தேவைக்காக மட்டுமே உறவு வைத்துக் கொள்ளும் உலகம் இது. தேவைகள் முடிந்ததும் நீ தூக்கி எறியப்படுவாய்.

Tags

Next Story