'பசித்த வயிற்றின் பாடம்' நெஞ்சை உருக்கும் கதை..! போலீஸ் அதிகாரி செய்த காரியம்..!

பசித்த வயிற்றின் பாடம் நெஞ்சை உருக்கும் கதை..!  போலீஸ் அதிகாரி செய்த காரியம்..!
X

ஹெலனும் போலீஸ் அதிகாரியும் 

குழந்தைகளின் பசியை ஆற்றுவதற்காக ஒரு தாய் எதையும் செய்வாள் என்பதற்கு இந்த கதையும் ஒரு உதாரணம். படீங்க.

படத்தில் நீங்கள் பார்க்கும் அந்த பெண்ணின் பெயர் ஹெலன் ஜான்சன். அவர் அலபாமாவின் டாரன்ட் நகரைச் சேர்ந்தவர். அவரது கதையைக்கேட்டால் நீங்களும் ஆச்சர்யப்படுவீர்கள்.

அந்தப்பெண் வசிக்கும் அந்த நகரில் அவரது வீட்டுக்கு அருகில் இருந்த 'டாலர்' என்ற பெயர்கொண்ட ஒரு சூப்பர் மார்கெட்டுக்குப் போனார். போனவர் உள்ளே சென்று நிறைய பொருள்களை எல்லாம் பார்த்தார். ஆனால் அங்குள்ள எந்த பொருளையும் வாங்கவில்லை.

அந்த சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வெளியேறிவிட்டார். ஆனால் கொஞ்ச நேரத்திலேயே அவரைத்தேடி போலீசார் வந்தனர். ஹெலனுக்கு போலீஸ் அதிகாரியைப் பார்த்ததும் முகம் வியர்த்தது. இருந்தாலும் கொஞ்சம் அச்சத்தைவிட்டுவிட்டு தனது கடைசி குழந்தையைக் கையில் வைத்தவாறு,

'சொல்லுங்கள் ஆபீசர். எதற்காக வந்துள்ளீர்கள்' என்று திக்கித்திணறி கேட்டார்.

'உங்கள் மீது டாலர் சூப்பர்மார்கெட் காரர்கள் புகார் அளித்துள்ளனர். நீங்கள் திருடிவிட்டதாக கூறுகின்றனர். அதனால் உங்களை கைது செய்ய வந்துள்ளேன் ' என்றார் போலீஸ் அதிகாரி.


'அப்படி என்ன சார், திருடிவிட்டேன். எனது குழந்தைகள் பசியால் துடித்தனர். அவர்களின் பசியை ஆற்றுவதற்காக 5 முட்டைகள் மட்டும்தான் திருடினேன். நான் நினைத்து இருந்தால் நிறைய திருடி இருக்கலாம். ஆனால் எனது நோக்கம் அதுவல்ல ஆபீசர்.' என்று கண்ணீருடன் அழுதவாறு சொன்னதும் அந்த போலீஸ் அதிகாரி அதிர்ந்துபோனார்.

அந்தப்பெண்ணின் பதில் அவரின் இதயத்தை என்னவோ செய்துவிட்டது. உடனே வேக வேகமாக அந்த இடத்தைவிட்டு அகன்று சென்றுவிட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து வீட்டின் காலிங் பெல் அடித்தது.

பயத்துடனே ஹெலன் கதவைத் திறந்தார். அங்கு அந்த போலீஸ் அதிகாரி ஒரு பை நிறைய வீட்டுக்குத் தேவையான மாளிகைப் பொருட்களை சுமந்தவாறு நின்றார்.

'இந்தாங்க.. இந்த சாமான்களை வைத்து உங்களுக்கு பணம் கிடைக்கும் வரை குழந்தைகளின் பசியை ஆற்றுங்கள்' என்று கூறி ஹெலனிடம் பையைக் கொடுத்தார். ஒரு பக்கம் மகிழ்ச்சி மறுபுறம் கையேந்தும் நிலையை எண்ணி கலங்கி நின்ற ஹெலனிடம்,

'இது உங்கள் சகோதரன் வாங்கிக்கொடுத்ததாக எண்ணிக் கொள்ளுங்கள்' என்று ஹெலனிடம் போலீஸ் அதிகாரி கூறியதும் ஹெலனுக்கு கண்ணீர் பொங்கிவிட்டது. நன்றியில் மூழ்கிய ஹெலன், "சார், நீங்கள் எனக்காக இதை செய்தது மிகவும் அதிகம்." என்று ஹெலன் அழத் தொடங்கினார்.

அந்த போலீஸ் அதிகாரி மிக எளிமையான ஆனால் அழுத்தமான ஒரு பதிலை ஹெலனிடம், "சில நேரங்களில் நாம் சட்டத்தைப் பயன்படுத்தக்கூடாது. அதற்குப் பதிலாக மனிதநேயத்தைப் பயன்படுத்த வேண்டும்." என்று கூறினார்.

ஹெலன் மௌனமாக அந்த மாளிகைப்பொருட்களை வாங்கிக்கொண்டு நன்றி தெரிவித்தார்.

ஒரு சிறிய மனிதாபிமான உதவி ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

அதனால்தான் நான் இப்படிச் சொல்கிறேன் :

பணமில்லா வாழ்க்கையும், பசித்த வயிறும், உடைந்த மனமும் தான் விலைமதிக்க முடியாத அனுபவங்களையும், வாழ்க்கைப் பாடங்களையும் நமக்கு கற்றுத் தருகிறது.

Tags

Next Story