தனிமை யாருக்கு வரம்..? யாருக்கு சாபம்..? படீங்க..!
Thanimai Quotes
Thanimai Quotes
தனிமை என்பது ஒரு நூலகம். ஆமாம். அது வாழ்க்கைப் பாடங்களை கற்றுத்தரும். ஞானிகளுக்கு தனிமை என்பதும் வரம். ஆனால், உறவுகளை தொலைத்தவர்களுக்கு ஒரு சாபம். சமூக வாழ்க்கையில் இருந்து ஒதுங்கி வாழ்பவர்களுக்கு தனிமை என்பது பெரிய விளைவுகளை ஏற்படுத்துவதில்லை. சமூக உறவுகளுக்குள் வாழ்பவர்களுக்கு தனிமையை ஏற்றுக்கொள்ள முடியாது. இன்னும் சொல்லப்போனால் கூட்டுக்குடும்பத்தில் வாழ்ந்து பழகியவர்கள் தனித்து வாழ்வதை விரும்பமாட்டார்கள். அவர்களால் மட்டுமே தனிமை எவ்வளவு பெரிய கொடுமை என்பதை உணர முடியும். தனிமை பற்றிய மேற்கோள்களைப் பார்ப்போம் வாருங்கள்.
தனித்திருந்து விழித்திருந்து பழகிப்போன எனக்கு இப்போது தனித்திருப்பதும் விழித்திருப்பதும் பெரிதாய் ஒன்றும் தெரியவில்லை...!
பேசாத மௌனங்கள் குழந்தை போல் ஆனதே. இரவோடு கண்ணீரும் கானல் நீர் ஆனதே. அன்பும் ஆதரவும் மருந்தாகி போனதே. என் தனிமைக்கு துணை யாரும் இல்லாமல் போனதே...!
எத்திசையில் சென்றாலும் அத்திசை வந்து என்னை வாரியணைத்துக் கொள்கிறது தனிமை..!
ஆறுதலுக்கும் ஆதரவுக்கும் துணை இல்லாத போது தான் தெரியும் அன்பின் அருமையும் தனிமையின் கொடுமையும்...!
கனவில் வாழும் வாழ்க்கை, விடிந்தவுடன் முடிந்து விடும். ஆனால், காலத்தால் கிடைக்கும் வாழ்க்கை
கடைசி வரை உன்னுடன் இருக்கும். எனக்கு காலத்தால் கிடைத்த வாழ்க்கை தனிமை தான் போலும்...!
தனியாய் நின்று ஜெயிப்பவனை விட அதிக சக்தி வாய்ந்தவன் உலகில் எங்கும் கிடையாது...!
சில நேரங்களில் தனிமையை தனிமையில் கடப்பது கடினம். சில நேரங்களில் தனிமை தான் இனிமை..!
மனிதர்களால் தர முடியாத ஆறுதலை கூட சில நேரம் தனிமை தந்துவிடும்..!
தனிமை தான் கற்றுக் கொடுக்கும் வாழ்க்கையின் மறுபக்கத்தை..!
வாழ்க்கையில் ஆசைகள் அனைத்தும் நிராசை ஆகும்போது, ஆதரவாய் வந்து ஆறுதல் சொல்கிறது தனிமை..!
சுற்றி ஆயிரம் உறவுகள் இருந்தாலும் நம்பி ஏமாந்த மனதுக்கு ஆறுதல் தனிமை தான்...!
உன் நினைவுகளும் உன் கை கோர்த்த சுகமான நிமிடங்களும் தான். நீ இன்றி போனாலும் என் தனிமையை இனிமை ஆக்குகின்றன..!
தனிமை எனக்கு பிடிக்கும் ஏன் என்றால் இங்கு என்னை காயப்படுத்த யாரும் இல்லை...!
தனிமை ஒன்றும் எனக்கு புதிதல்ல. தனிமைக்கும் நான் புதிதல்ல. புதுமையெல்லாம் என்னை புதிதாய் பார்ப்பவர்களுக்குத் தான்..!
தனிமையில் வாழ்வதே இன்பம் என்று ஏற்றுக் கொண்டேன். மனிதர்களின் சுயரூபம் அறிந்த பின்..!
வாழ்க்கையில் ஒரு நாள் தனிமையே பல பாடங்களை கற்றுத் தருமனால், நான் என் வாழ்நாள் முழுவதையும் தனிமையிலே வாழ விரும்புகின்றேன்.
தனிமையில் எனக்கு இனிமை இல்லை என்றாலும், அதில் துன்பங்கள் இல்லை என்பதை உணர்த்த மறுப்பதில்லை தனிமை..!
தனிமை மிகவும் வித்தியாசமானது. நாமே அதை எடுத்துக் கொண்டால் ரொம்ப இனிமையாக இருக்கும். தனிமையை மற்றவர்கள் நமக்கு கொடுத்தால் அது கசக்கும்..!
தனிமை என்பது யாருமில்லாமல் இருப்பது அல்ல. நம்மைச் சுற்றி எல்லோரும் இருந்தாலும் நமக்காக யாருமில்லை என்று உணருவதே.. தனிமை..!
பல உறவுகளால் தரமுடியாத ஆறுதலையும் நிம்மதியையும் சில நேரம் தனிமை தந்துவிடும்..!
தனிமை எனக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டது. காரணம் அங்கு என்னை காயப்படுத்த யாரும் இல்லை..!
தூக்கம் வந்தாலும் தூங்காமல் நமக்குப் பிடித்தவர்களை தனிமையில் நினைத்துக்கொண்டு இருப்பதும் ஒரு தனி சுகம் தான்...!
பேச யாரும் இல்லை என்பதை விட பேசுவதைக் கேட்க யாருமில்லை என்பது தான் தனிமையின் ஆகச் சிறந்த கொடூரம்..!
இன்று நானும் தனிமையில். நான் காட்டிய அன்பும் தனிமையில். என் வாழ்வும் தனிமையில்..!
தனிமை என்பது நான் தேடிக்கொண்ட சாபம் அல்ல. நான் என் உயிருக்கும் மேலாக நேசித்தவர்கள் எனக்கு
அளித்த பரிசு..! அந்த பரிசால் மகிழ்ச்சி மட்டும் தொலைந்துபோனது..!
உரிமையோடு சிலரை உறவென்று நினைத்தது தவறென்று புரிந்து கொண்டேன். மீண்டும் தனிமையே போதும் என்று விலகிக் கொண்டேன்...!
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu